பவர்ஃபுல் இமேஜ்!

‘The image just stayed with me… So powerful!!’ என்று சகோதரி மதி கந்தசாமி ஜி+-ல் பகிர்ந்திருந்த இந்த ஃபோட்டோ (by Santu Brahma) என்னை பிரமிக்கவைத்தது. கையேந்தி நிற்பது நான்தான் என்றும் பட்டது (வஹாபிகள் மன்னிக்கவும்).

பிரபாகர்-ன் மறுமொழி இது :: … அந்தம்மாவோட உடல் மொழியைக் கொண்டு பார்த்தால் நாம் எப்படி வேண்டுமானாலும் அனுமானித்துக் கொள்ளலாம். உதாரணமாக, உனக்கு கண்ணு இருக்கா தாயீ… இப்படி என் வவுத்துல அடிச்சு என்னோட கடைசி காட்டையும் அடிச்சி புடிங்கிட்டானே உனக்கு கண்ணு இருந்தா இப்படி பார்த்துகிட்டு சும்மா இருப்பியான்னும் கேக்கலாம்…

இப்படி நடையா நடந்து என் புள்ளைகளுக்கு ஒரு வழி காமின்னு கையேந்தி நிக்கிறேனே உனக்கு கண்ணு இல்லையா… உனக்கு எல்லாமே தெரியும் பார்த்து செய்யுன்னும் கேட்டு நிக்கலாம். ரொம்ப சிக்கலில்லாத ஓர் எளிமையான அம்மாவா இருக்கு, ஒரு பத்து பேருக்குள்ளர வாழுமா இருக்கும்.

santu-brahma

Thanks to : Santu Brahma

https://m.facebook.com/santu.brahma

ஃபேஸ்புக் கண்கள்!

Photo © Hegel Jorge /from A Lifetime Photography (fb)

photo by Hegel Jorge -fb

 

கனிபாவா கச்சேரி

நாகூர் ‘ரிபாய் ஜமா கலிபா’ கனிபாவா தலைமையில் நடந்த கச்சேரி ஒன்றை நண்பர் சித்தார்த்   ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். அதை இங்கே கேட்கலாம். வெள்ளி தவறாமல் வீட்டிற்கு வந்து பாடும் கனிபாவாவை நான் எடுத்த புகைப்படம் இது (Jun’2010), ஒரு  ஃபில்டரோடு. எப்படி இரிக்கிது?

Click here to enlarge Photo

ganibava-nagore-jun2010ft

நல்லா சொன்னாரு நாகூர் ரூமி!

நாகூர் ரூமி நாகூர் வந்திருக்கிறார் , அவருடைய தம்பி நிஜாமின் புதுமனை புகுவிழா வைபவத்திற்கு. ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்..’ என்று அல்லாஹ்வே சொல்கிறான் (அல்-குர்ஆன் 16:80). அஸ்மாவிடம் சொல்ல வேண்டும். அது இருக்கட்டும், நண்பரை முந்தாநாள் சந்தித்து இலக்கியத்தைத் தவிர எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஓய்.. இந்த ‘கிருஹப்பிரவேசம்’ங்கறத நம்ம ஊர் பாஷையில எப்படிங்கனி சொல்றது?’ என்று கேட்டேன். அதே நொடியில் பதில் கிடைத்தது : ‘ஊடு குடி பூர்றாஹா…!’

Click here to enlarge this ‘rare’ Photo!

rafee-abedeen1

« Older entries