முஸாஃபிர் – ஷாம்நாஸின் குறும்படம்

முஸாஃபிர் என்றால் பயணி. நாகூரில் பிச்சைக்காரர்களைத்தான் அப்படிச் சொல்வோம். அதுவே சரியாகவும் தோன்றுகிறது.  இந்த குறும்படத்தைப் பாருங்களேன். நண்பர் சாதிக் சொல்லி இப்போதுதான் பார்த்தேன். அழுகை வந்துவிட்டது. அரபுநாட்டு ’பேச்சுலர்’ வாழ்க்கையை அற்புதமாக சொல்லியிருக்கிறார் ஷாம்நாஸ் என்ற கேரள இளைஞர். பரிசும் பெற்றிருக்கிறார்.  உறுத்துவது இடம்தான். மிகவும் பளபளப்பாக இருக்கிறது.  இதுவே இப்படியென்றால் குடும்பவாழ்வைத் தொலைத்து இந்த மாதிரி கொடூரமான ’அறை’களில் (உற்றுப் பாருங்கள். நானும் அங்கே உட்கார்ந்திருக்கலாம்)  லட்சக்கணக்கானோரின் கண்ணீர் கதைகள் எப்படி இருக்கும்? யா அல்லாஹ்….. “MUSAFIR” A Sojourner’s Life, Uncensored…

எருமைகளாக இருப்போம்

நண்பர் அனாதை ஆனந்தன் பதிவில் முன்பு பார்த்து பதைபதைத்த பழைய வீடியோ…

« Older entries