‘முன்னவனை முன்வைத்து…!‘ என்று பதிவிட்டு முழுதாக மூன்று வாரங்கள் முடியவில்லை. நம் பேரன்புக்குரிய கவிஞர் சலீம் மாமா அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்கள். தம்பி தீனிடமிருந்து காலையிலேயே அதிர்ச்சி தரும் மெயில் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன்… மாலை 4.30க்கு நாகூரில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அவர்களின் மறுமை வெற்றிக்கு அனைவரும் துஆ செய்வோம்.
வஸ்ஸலாம்
தொடர்புடைய பதிவுகள் :
காதில் விழுந்த கானங்கள்
நெகிழவைத்த நாகூர் சலீம் !
இறைவனும் இருட்டும் – அப்துல் கையூம்
நாகூர் தந்த கொடை – (கவிஞர் சலீம் பற்றி ) நாகூர் ரூமி
***
நீரில் ஒரு குமிழி
கவிஞர் சலீம் இயற்றி ஈ.எம்.ஹனீபா பாடியது
இன்று வந்து நாளை போகும்
நிலையிலே நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய்
உலகிலே உலகிலே…
– இன்று வந்து
வந்த நோக்கம் இன்னதென்று தெரியுமா
வல்ல இறைவன் சொன்ன மார்க்கம் புரியுமா
வந்த இடத்தில் சொந்தம் கொண்ட மயக்கமா
வாங்கி வந்த கடனைத் தீர்க்கத் தயக்கமா
வரம்பு மீறிப் போவதென்றால் முடியுமா..? முடியுமா..?
– இன்று வந்து
கருணைநபிகள் புரிந்த தியாகம் மறையுமோ
கர்பலாவைக் கண்டகண்கள் மகிழுமோ
அருமை உமரின் துயரம் விரைவில் ஆறுமோ
அலீயின் வீரம் நெஞ்சினின்றும் மாறுமோ
இவைகள் யாவும் யாருக்காக? சொல்லுவாய் சோதரா!..
– இன்று வந்து
ஏதுக்காக இறைவன் உலகை ஆக்கினான்
யாருக்காக நபியை இங்கே அனுப்பினான்
தீதுசெய்து மனிதக்கூட்டம் நோகவோ?
தாவிப் பாயும் நரகத் தீயில் வேகவோ?
வேதக் குர்ஆன் பாதை மீது செல்லுவாய் சோதரா!
– இன்று வந்து