உலகம் உணர்த்தும் ஒரு பாடம்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்…

***

***

Thanks to : goldtreat

***

பாடலாசிரியர் : மருதகாசி, இசை : கே.வி.மகாதேவன், பாடகர் : P.B.ஸ்ரீநிவாஸ், படம் : சபாஷ் மாப்பிளே

***

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

பிள்ளை எனும் பந்த பாசத்தை தள்ளி பிரிந்தோடும் – தன்
உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி தாழ் போடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை அன்புக்குக் கூட
சொல்லால் தடை போடும்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும் – இதை
எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு துன்பம் வரவாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

***

நன்றி : லக்ஷ்மன்ஸ்ருதி.காம்

Advertisements

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை…

நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த இந்த ‘குங்குமம்’ காணொளியை எடுத்துத் தந்த நண்பர் மஜீதுக்கு ஒரு கோல்டுமெடல் (தைலம் அல்ல, நிஜம்) அளிக்கிறேன். ஒரேயொரு கண்டிஷன். சுட்டி தருகிறேன் என்று மங்லீஷ் பாடம் எடுக்கும் மலையாள மாமிகளின் யுடியூப்களை மட்டும் அவர் தரக்கூடாது. எனக்கு சபலம் அதிகம் மஜீத்பாய். ஏற்கனவே லட்சுமிநாயரைப் பார்த்து புரண்டுகொண்டிருப்பவன் நான். போதும்.

அப்லோட் செய்த அருணாச்சலம் வாழ்க!

கே.வி. மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்-ஜானகி…