வாழ்க்கை ஓடம் செல்ல… – ஜானகி

ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ சினிமாவில் வரும் – கண்ணதாசன் எழுதிய – இந்தப் பாடலை  நேற்றிலிருந்து பலமுறை கேட்டுவிட்டேன்.  மனசு இன்னும் சரியில்லை…. ஆறுதல் சொல்கிறேன் என்று தாஜ் அதிகப்படுத்திவிட்டார். போகட்டும், அவர் அப்படித்தான். ‘எஜமான்’ எனக்கு உதவுவார்கள் எப்படியும்… நிற்க. பாடகி ஜானகியம்மா சம்பந்தமாக  சுவாரஸ்யமான ஒரு சீன் இருக்கிறது இந்தப் படத்தில். நாயகியைப் பார்க்கவரும் கதாநாயகன்  , அவளுடைய சித்தியிடம் (அக்கா என்று சொல்லிக் கொள்வாள்!) தானும் நாயகியும்  ஜானகியைப் பார்க்கப் போகிறோம் என்பான்.

‘மச்சானைப் பாத்தீங்களா’ ஜானகியா? – ஆர்வமாக அவள்

எனக்கு ‘சிங்காரவேலனே தேவா’ ஜானகியைத்தான் பிடிக்கும்! – நாயகன்

***

வசனம்  எழுதிய வண்ணநிலவனுக்கு குறும்பு அதிகம்தான். படத்தின் இசையோ இளையராஜா! பெருந்தன்மை… ‘பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் சதவீதம் இசைஞானிக்கு எத்தனை?’ என்ற கேள்விக்கு குமுதம் இதழில் (14.11.2012) ராஜாவின் பதில் : ‘பெரிய தவறுகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால் கவனக் குறைவால் ஏற்படும் சிறிய தவறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது! அதாவது, என்னுடைய தவறுகளை! அதைத் திருத்திக் கொள்ளவே இந்தப் பிறவி ஏற்பட்டது என்று முழுக்க முழுக்க நம்புகிறவன் நான்’

***

Advertisements