கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய ஜீனியஸ்-ல் இந்தக் கோவணம் வருகிறது. பார்த்து, மன்னிக்கவும், படித்து ரசித்தேன். ‘நாம் சர்வ சாதாரணமாக ‘கோடிவீட்டு கோதண்டம் பெரிய ஜீனியஸ், தெரியுமில்ல?!’ என்கிறோம் – அதன் நிஜ அர்த்தம் புரியாமல்!’ என்றுதான் தொடரை அவர் ஆரம்பிக்கிறார்! மகான்களுக்கும் தத்துவ மேதைகளுக்கும் முன் மாமன்னர்கள் சர்வ சாதாரணம் என்று சொல்லும் இந்தப் பகுதி அருமை. இந்த நாளுக்குப் பொருத்தமானதும் கூட!
*
கிரேக்க தத்துவ மேதை டயோஜினீஸ் ஒரு நாள் பாலைவன மணலில், கோவணம் மட்டும் அணிந்துகொண்டு படுத்திருக்க, அந்தப் பக்கமாக மாஸிடோனியாவின் மன்னராகிவிட்ட அலெக்ஸாந்தரின் பரிவாரம் செல்ல நேர்ந்தது. ‘அங்கு படுத்திருப்பது யார்?’ என்று அலெக்ஸாந்தர் வினவ, ‘டயோஜினீஸ்.. மன்னா!’ என்று தளபதி எடுத்துச் சொல்ல, உடனே குதிரையிலிருந்து கீழே குதித்து தத்துவ மேதையின் அருகில் விரைந்த மன்னர் ‘தங்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று பணிவோடு கேட்டார். டயோஜினீஸ் எல்லாவற்றையும் கடந்த, பழுத்த தத்துவஞானி. மன்னரை ஏறிட்டுப் பார்த்து தலையசைத்த அவர் ‘எனக்கும் சூரியனுக்கும் இடையில் நிற்காமலிருந்தால் நன்றாக இருக்கும்!’ என்று சாவதானமாகச் சொல்ல, அலெக்ஸாந்தரின் மெய்க்காவலர்கள் ஏக காலத்தில் கோபத்துடன் வாளை உருவினார்கள். ‘வாளை உரையில் போடுங்கள்!’ என்று ஆணையிட்ட மன்னர் திரும்பிச் சென்று குதிரையில் ஏறும்போது தன் தளபதியிடம் ‘அடேங்கப்பா! நான் மட்டும் அலெக்ஸாந்தராக இல்லையென்றால் டயோஜினீஸாக இருக்கவே ஆசைப்படுவேன்!’ என்றார் புன்னகையுடன்.
*
நன்றி : மதன், வெங்கட் ரமணன்
soman. said,
23/03/2016 இல் 14:37
அதைபிடிக்க போனப்போ இது மாட்டித்து. நீரும் படியும். அடுத்த பதிவும் உடனே போடும்.
இல்லாட்டி, somansblog (http://www.somansblog.wordpress.com ) போய்விட்டும் வரலாம் பாதகமில்லை. உமக்கு எழுதினா விகுதி இடிக்கறது. தன்மை, முன்னிலை தான் வேறென்ன?.
https://venkatramanan.wiki.zoho.com/Sujatha-Tributes.html
ஆபிதீன் said,
23/03/2016 இல் 15:12
சுஜாதாவைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நன்னி. கூகுள் ப்ளஸ்-ல் பகிரும்போதே ஜீனியஸ், மதன் அல்ல, ‘உள்ளும் புறமும்’ வெங்கட் ரமணன்தான் என்று சொல்லியிருந்தேன். அட்டகாசமான கலெக்சன் அது . இல்லையா? பெரிய ஆள் அவர் . இப்ப எழுதுவதில்லை (பெரிய ஆள்களே அப்படித்தான்!)
soman. said,
23/03/2016 இல் 15:39
அட, அதான் திருத்தி இன்னொரு தடவை போட்டுட்டு இருக்கேன். எங்க ஆள் தும்பப்பட .போராறேன்னு.
அலையாதீரும். வரேன். அப்புறம் ஒண்ணு சொல்லணும். சொல்லியே ஆகணும். ஒரு ஜேசுதாஸ், ஒரு
சுஜாதா, ஒரு மதன், ஒரு கோபால் (மொழி). இப்படி சில பேர் எங்க போனாலும் வராங்க.தெய்வங்க மாதிரின்னு கூட சொல்லலாம். இவங்களையே தின்னு வளந்திருக்கோம். நான் இன்னும் கில்லாடி மதன் மாதிரியே ஸ்ட்ரோக்ஸ் வரைஞ்சு வரைஞ்சு சித்தியான கை. கற்பனை மட்டும் வரணும். நிஜமா. அது வராது. நீங்க கூட வரைஞ்சு பாக்கலாம். பழைய நடுப்பக்க விகடன் பூராவும் எடுத்து உக்காந்துக்கும். அது ஒரு பயிற்சி.
ஒரு காலியாகிப்போன ரீபிள் மட்டும் போதும். நல்லா அழுத்தி அழுத்தி வரைஞ்சு பாரும்.
ஆபிதீன் said,
23/03/2016 இல் 15:47
மதன் மாதிரி இல்லேன்னாலும் நானும் நன்றாக வரைவேன் என்று உங்களுக்குத் தெரியாதா ? இதைக் கொஞ்சம் பாருங்க சார் :
அல்கோபர் அரபி
https://abedheen.wordpress.com/2012/03/12/abed-art-arab/
மீண்ட பொக்கிஷம் – நாகூர் ரூமியின் பதிவு :
https://nagoorumi.wordpress.com/2011/05/24/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/
soman. said,
23/03/2016 இல் 16:03
உமக்கு ஜேசுதாஸ் பிடிக்குமான்னு தெரியலை. இல்லாட்டி ஒரு சாமர்த்தியம் பண்ணும்.
அவர் கூட ஒரு மகா மனிதன். மந்திர சுருதி (பேஸ்) நல்லா உழைச்சா அது மாதிரி பாடினா
தவிர அந்த சுகானுபவம் கிடைக்காது. ஒரு ஹம்சத்வனி சிடி இருக்கு ஒரு சிடி பூராவும்
பாடி இருக்கார். ராகம் பாடி கீர்த்தனம் வாதாபி, கற்பனாஸ்வரம். திரும்ப திரும்ப கேட்டு
அனுபவிக்கணும். அப்படியே கர்னாடிக் வால்யும் எல்லா செட்டும் வாங்கி ஜஸ்ட் ஒரு
தடவை கேட்டுப்பாரும். நான் தினமும் “paltalk ” என்று ஒரு messenger உபயோகிக்கறேன்.
அதையும் டவுன்லோட் பண்ணி வச்சுக்கும்.
soman. said,
23/03/2016 இல் 16:32
இதையெல்லாம் நீர் சொல்லணுமாக்கும்!.
அந்த இடம் படம் ஒண்ணு போறும்.
முந்தி எல்லாம். ஊருக்கு ஊர் இருந்தது
கடை போர்டுகள் தானே. பாத்து பாத்து
மகிழ்வோம். அதனால் தான் படம் விடவும்
எழுத்து எனக்கு பேரின்பம். போஸ்டர்
தலைப்பு டிசைன், எங்க ஊர் JP ஆர்ட்ஸ் என்று ஒரு ஜீனியஸ். சிகரெட் பிடிச்சே புகையாய் கரைஞ்சு போனார். உம் கதை அதைக்கூட எனக்கு உணர்த்தும். இப்போவும் ஊர் போனா காட்டறேன். ஒவ்வொரு தெரு போர்டுக்கும் ஒரு கதை
உண்டு.
பரணி, உபால்டு, ஜெயராமன்,(மூன்றாம்பிறை) இப்படி எல்லாரையும் பார்த்து பழகி வாழ்ந்து இருக்கேன். எல்லாம் சொல்றேன் அப்புறம். இப்போ கரிசல்ராஜான்னு ஒரு டைட்டில் designer இருக்கான் அந்த எழுத்தை பாரும். கடைசி creditsல வரும்.
ஆனந்த ராகம், ரயில் பயணங்களில், இப்படி ஏகப்பட்டது.
soman. said,
23/03/2016 இல் 16:50
நண்பர் தாஜ் உம்ம கை வரிசையெல்லாம் நிறைய போட்டுவிட்டார். முன்பே படித்து மஹிழ்ந்துவிட்டேன். போதுமா. ரொம்ப குளுந்துக்காதீரும். பாக்யராஜ் handwriting பாரும். அப்போ நான் பாத்து மிரண்ட ஒரு எழுத்து.கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு சீனில் கதாநாயகன் எழுத துவங்குவது மாதிரி அதை காட்டியே இருப்பார். “அத்தியாயம் 7” “திருக்கல்யாணம்” என்று
எழுதி underline பண்ணுவார். ஆஹா என்று இருக்கும். அவங்களெல்லாம் நம்ம வயதில் திறமை எல்லாம் மூலதனமாக்கி எல்லாம் சம்பதித்தார்கள்.
நான் ஒரே ஒரு shortபிலிம் பன்ன்றதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துட்டது. இதற்குள் சத்யஜித்ரே எல்லாம் வரிசையில் வந்து வாழ்த்து சொல்லறமாதிரி
கனால்லாம் வந்துட்டுது.
ஆபிதீன் said,
24/03/2016 இல் 09:43
ஜேஸூதாஸ் பிடிக்கும். எல்லாரையும் பிடிக்கும். பாடாமல் சும்மா இருப்பவர்களை ரொம்பவும் பிடிக்கும்! சும்மா சொன்னேன். இங்கே நாலைந்து வருடங்களுக்கு முன்பு Call Of The Birds என்று Hossein Alizadeh-ன் இசையைப் போட்டிருக்கிறேன். கேட்டுப்பாருங்களேன். https://abedheen.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/hossein-alizadeh/
ஆமாம், உங்களைப் போல இசையே வாழ்வாக இருக்க முடியுமா என்னால்? ‘கர்னாடிக் வால்யும் எல்லா செட்டும் வாங்கி’… முடிகிற காரியமா? இங்கேயுள்ள இம்சை தாங்க முடியவில்லையே ஸ்வாமி…
நீங்கள் அருவியாய் இப்படிக் கொட்டித் தீர்த்தால் நான் என்னதான் செய்வது? பேசாமல் அரபியை விட்டுட்டு ஓடிவந்துவிடவா உங்களிடம்? டிசைனர் என்றுதானே எண்பதுகளின் ஆரம்பத்தில் வெறும் நூத்தைம்பது ரூபாயில் ‘அபிதாஸ் அட்வர்டைஸிங்’ என்று உங்கள் ஊரில் ஆரம்பித்து ‘படா’ அவதிப்பட்டேன். அங்கு அடித்த புயல்தான். இன்றுவரை ஓயவில்லை. சிக்கிச் சீரழிந்துவிட்டேன், இறைவனருளால்!
JP என்றால் பேனர் ஆர்டிஸ்ட் JP கிருஷ்ணாவா? பெரம்பூர் பக்கத்தில் ரிகார்டிங்கடை வைத்திருந்த கனிபாய் கடைக்கு ஒருநாள் வந்திருந்தார். என் கடிதங்களை பாய் காட்டியிருப்பார் போல. கிருஷ்ணாவுக்கு என் பொடி எழுத்தின்மேல் அவ்வளவு ஆர்வம். நான் எங்க நாகை ‘ஜீவி’ ஆர்ட்டிஸ்டைச் சொல்ல கனிபாய், ஜேபி’யைச் சொல்ல ஒரே சண்டை!
பாக்யராஜ் எழுத்தைப் பார்க்கிறேன், இன்ஷா அல்லாஹ். சாருவின் பழைய ‘கிரணம்’ சிற்றிதழுக்கு நான் போட்ட டிசைன் இங்கிருக்கிறது. சும்மா உங்கள் பார்வைக்கு :
இதெல்லாம் போகட்டும், அந்த குறும்படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே.. யூட்யூபில் போட்டுவிட்டு எனக்கு லிங்க் கொடுத்தால் என்ன? எங்க ஊர் ‘ரே’ என்று அடிவாங்கிக் கொடுக்க முடியும் அல்லவா?
carsonspears25643 said,
09/04/2016 இல் 12:41
I don’t get involves with NAD anymore, only KDRC + CDA. KDRC is an independent organisation, which does alot of works with deaf and hard of hearing co Click http://s.intmainreturn0.com/people3091630