아리랑 : ‘அரிரங்’கோடு ஆனந்தமாயிருங்கள்

‘புத்த தத்துவத்தின் நிர்வாணாவை அடையும் வழியாக வன்முறையைப் பார்க்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் பொருத்தவரை வாழ்க்கை வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையிலானது. துக்கத்திற்கும் இன்பத்திற்கும் இடையிலானது. அரி ரங் அரி ரங் பாடலைப் போல ஏற்ற இறக்கங்களுக்கிடையிலானது.’ என்று இயக்குனர் கிம் கி டுக் சொல்லியிருந்தார். நண்பர்களின் உதவியால் சில கொரிய சினிமாக்கள் பார்த்திருக்கிறேன் என்றாலும் ‘அரி ரங்’கை தனியே கவனித்துக் கேட்டதில்லை. இப்போது இரண்டு நாளாக இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் (சும்மா இப்படி அடிச்சுவிடுறதுதான்!) . கூட்டமே இப்படி சேர்ந்துபாடும்பொழுது குதூகலம் பிறக்கிறது.அது உங்களையும் அணைத்துக்கொண்டு கூத்தாடட்டுமாக! உண்மையில் , எழுதிய புதிய குறுநாவலை வெளியிடலாம் என்றுதான் நினைத்தேன். என்னமோ மனசில்லை, ‘எஹ படிப்பாஹா?’ என்று எகத்தாளமாகக் கேட்கும் அஸ்மாவின் உத்தரவும் வரவில்லை. ஆதலால் இந்த அரிய இசையைப் பகிர்கிறேன்.  இனிய புதுவருட வாழ்த்துகள்.  – ஆபிதீன்.

***

***
இதையும் அவசியம் கேளுங்கள் :
Conductor : 장윤성 Jang Yun-Sung

***
Thanks to : SuperTheseus

1 பின்னூட்டம்

  1. தாஜ் said,

    02/01/2014 இல் 22:14

    ஆபிதீன்…
    ‘அரி ரங்’ ராக இசையில்
    முதலாவதாக காணப்படும் கோரஸ் பாட்டும் இசையும்
    நம்ம ஊரில் குழந்தைகளுக்காகப் பாடும்
    தாலாட்டுப் பாடல் ரகமாக இருகிறது.
    இதில் ஆபிதீன் அளவில் என்னால் ரசிக்க முடியவில்லை.

    இரண்டாவதாக காணப்படும்
    சிம்பொனி இசை கேட்டு மயங்கிப் போனேன்.
    போரின் துயரமும்,
    பின்னரான போரின் எழுச்சியும்
    கடைசியில் மீண்டும் துயரமுமாக
    இசை செய்தி பகிர்வதாக உணர்கிறேன்.
    அது எத்தனைக்கு சரியென்று தெரியவில்லை.
    ஆனால்..,
    நான் மயங்கியது தெரியும்.
    அது உண்மையும் கூட.
    நன்றி பாஸ்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s