நல்லா சொன்னாரு நாகூர் ரூமி!

நாகூர் ரூமி நாகூர் வந்திருக்கிறார் , அவருடைய தம்பி நிஜாமின் புதுமனை புகுவிழா வைபவத்திற்கு. ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்..’ என்று அல்லாஹ்வே சொல்கிறான் (அல்-குர்ஆன் 16:80). அஸ்மாவிடம் சொல்ல வேண்டும். அது இருக்கட்டும், நண்பரை முந்தாநாள் சந்தித்து இலக்கியத்தைத் தவிர எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஓய்.. இந்த ‘கிருஹப்பிரவேசம்’ங்கறத நம்ம ஊர் பாஷையில எப்படிங்கனி சொல்றது?’ என்று கேட்டேன். அதே நொடியில் பதில் கிடைத்தது : ‘ஊடு குடி பூர்றாஹா…!’

Click here to enlarge this ‘rare’ Photo!

rafee-abedeen1

11 பின்னூட்டங்கள்

 1. 15/06/2013 இல் 12:31

  ‘கிருஹப்பிரவேசம்’ங்கறத நம்ம ஊர் பாஷையில எப்படிங்கனி சொல்றது?’ என்று கேட்டேன். அதே நொடியில் பதில் கிடைத்தது : ‘ஊடு குடி பூர்றாஹா…!’

  இதெல்லாம் வாப்ச்சி காலத்தோடு போயி இப்போதெல்லாம் “புது மனைப் பு்கு விழா” ன்னு சுந்திரத் தமிழில் அழைப்பிதழ் கொடுக்கிறார்களே…!

  எங்க நாகூரை இப்படில்லாம் சொல்லாதீங்க..

  • 15/06/2013 இல் 21:17

   அழகு தமிழில் அழைப்பிதழில் போடுவதெல்லாம் சரிதான் நானா. சொல்வது ‘‘ஊடு குடி பூர்றாஹா…!’’வாயிற்றே!

 2. 17/06/2013 இல் 14:19

  காணாததக் கண்டதுமாதிரி இருக்கு-
  படத்தப் பாத்தவொடனே! அம்புட்டு சந்தோஷம்!!

  எங்கூர்ல அந்தக்காலத்துல சொல்றது:
  பால்காச்சுறாஹ
  (வாடகைவீட்டுக்கும் காச்சுவாஹல்ல? 🙂

  • 17/06/2013 இல் 20:04

   ரொம்ப சந்தோஷப்படாதீங்க; ரெண்டு நாள்ல அங்க வந்துடுவேன்!

  • தாஜ் said,

   17/06/2013 இல் 20:19

   மொழி ஆராய்ச்சின்ன இப்படில்ல இருக்கனும்!
   எங்கப் பக்கத்து பாஷையில
   ‘குடி புகுருறாங்க’
   ‘பால் காச்சுறாங்க’ என்பது
   குடு புகும் முன்னாலான நிகழ்வு.
   இதல்லாம் விட…
   பல வருடங்களுக்கு முன்
   புது மனை புகு விழா சடங்கு
   காலை நாலு மணிக்கே தொடங்கிவிடும்.
   உறவுக்காரப் பெண்கள் பலர்
   தானியப் பானைகளோடும்,
   சில்லரைக் காசுகள் ரொப்பிய சொம்புகளோடும்,
   குத்துவிளக்கு ஏந்தி
   அது அணையாமல் காத்தப்படிக்கும்…
   பழைய குடி இருப்பில் இருந்து
   புது மனைக்கு
   ஃபஜர் பாங்கு அழைப்புக்கும் முன் செல்வார்கள்.

   இன்னும் பல இடங்களில்
   வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும்
   ஆடு அறுத்து இரத்தத்தைப் பாச்சுவார்கள்.
   (வீட்டுக்கு காவு கொடுப்பதாக இருக்கலாம்)

   புது மனை புகுவிழாவில்…
   எனக்குப் பிடித்தது
   காலையில் கட்டாயம் தரப்படும்
   பாச்சோறும்
   அதற்கு துணையாய் தரப்படும்
   சின்னச் சின்ன அதிரசங்களும்….
   அப்பா எத்தனை ரசனை.

   இப்பவெல்லாம்
   மத்திய நேர
   பிரியாணி மட்டும்தானாம்.
   பிரியாணி…..
   ஹும்….
   எப்படித்தான் தின்கிறார்களோ?
   கொஞ்சமும் அலுக்காமல்!
   ‘தலப்பாகட்டு’ பிரியாணியெல்லாம்
   கண்ட சந்திலும் பொந்திலும்
   சிரிப்பாய் சிரிக்கும் போதும்.

   • 17/06/2013 இல் 21:58

    சுவாரஸ்யம். இங்கேயும் பிரியாணிதான் தாஜ். ஆனால் அதைவிட பிரமாதம் ரஃபியின் இன்னொரு கமெண்ட். ஏதோ ஒரு அவசர வேலையாக எங்களைக் கடந்து சென்ற அவர் தம்பி , ‘பேசாம போறேன்னு வருத்தப்படாதீங்க நானா’ என்றார் என்னிடம்.
    ‘நீ பேசினால்தான் அவர் வருத்தப்படுவார்!’ – ரஃபி

 3. A.Mohamed Ismail said,

  17/06/2013 இல் 21:06

  7 manaaraa teriyuthe

 4. kulachal yoosuf said,

  15/07/2013 இல் 18:54

  புதுமனை புகுவிழா / ‘கிருஹப்பிரவேசம் / ‘ஊடு குடி பூர்றது /குடி புகுருறது / பால் காச்சுறதுன்னு இவ்வளவு பேரு இருக்குதா அதுக்கு? நான் இப்ப ஒரு மாசத்துக்கு முன்னால தான் ஒரு ஊட்டுக்குக் குடி பூந்தேன். நான் குடி புகுருகிற பதினெட்டாவது ஊடு இது. ஏன்னு கேக்க மாட்டீஹளா? நீங்க கேக்கவே வேண்டாம், உடுங்க. என் பக்கத்து ஊட்டுக்காரன் ஒருததன் பெரீய பங்களா கட்டி வெச்சி என்னைக் கடுப்பேத்துறான். இதுல நான் ஏன் கடுப்பாகுறேன்னா, அதுக்கு அவன் தற்காலிக இல்லம்னு பேரு வெச்சிருக்கான். பேருந்த நிறுத்த நிழல் குடைக்குக் கூட இப்படிப் பேர் வைக்கமாட்டான். யா அல்லா, ஸப்பு ஸுப்புக்கும்….

  • 16/07/2013 இல் 10:11

   பக்கத்துவீடு பங்களாவாக மாறுவதால் பலர் பைத்தியமாகிப் போவதுண்டு. நல்லவேளை, நீங்கள் அப்படியில்லை. வாழ்க. அப்புறம்… ‘தற்காலிக இல்லம்’னு ஏன் அவன் பேரு வெச்சிருக்கான்னா குளச்சல் அங்க சீக்கிரம் போய்டுவார்னுதான். கவனம் : வீட்டில் மட்டும் பூறவும்!

 5. kulachal yoosuf said,

  17/07/2013 இல் 17:36

  மரணத்தைப் பற்றியே பயமே அது குறித்து மனிதர்களை அதிகமாக நினைக்கத்தூண்டுகிறது. (சிந்திக்க அல்ல) இந்தத் ’தற்காலிக இல்லம்’ எல்லாம் ஒருவகையான மனச்சிக்கல். இறப்பை சந்திக்க நான் தயார் நிலையிலுள்ளேன் என்பதை ஒரு உள்நடுக்கத்துடன் விளம்பரம் செய்வது. மேலும், வீட்டில் மட்டும் பூறச்சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. பரிந்துரையாக இருந்தால், மன்னிக்கவும் சாத்தியமில்லை.

 6. அனாமதேய said,

  26/08/2013 இல் 13:41

  THANKS TO MR. ABIDEEN’S PAGES… IT CONTENT VIKADAM WITH MEANINFUL LINES…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s