தவராஜ செம்மேருவே, ஷாஹுல் ஹமீதரசரே!

‘நல்லா ஓடுறீங்க..’ என்று சொல்லியிருப்பார்கள் போல.  டாக்டர் ஆயிஷாபீவியின் காதில் ‘நல்லா பாடுறீங்க’ என்று கேட்டு, பாடியும் விட்டார் – ‘எஜமானே நாகூரின் அரசே எந்தன் இசை உங்கள் தர்பாரின் பரிசே’ என்று. தலைதெறிக்க ஓடிவிட்டு  பிறகு நம் ஈ.எம்.ஹனீபாவை கேளுங்கள் – இளைப்பாற. யா காதிர் முராது ஹாஸில்…! (‘ஆண்டவரே , என் நாட்டங்களை நிறைவேற்றும்’) – ஆபிதீன்

***

***

குணங்குடி மஸ்தான்  :

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!

மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!

வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!

தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!

***

தம்பி இஸ்மாயிலின் முகநூல் பக்கத்திலிருந்து… :

இஸ்மாயில் : எனது பாட்டானார் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்கள் கம்பனை தொடுமுன்னே கன்ஜுல் கராமத்தை தான் தொட்டார்கள், அவர்கள் எஜமானின் முழுமையான ஆற்றலை எழுத்தில் வடிக்க எண்ணினார்கள், போதுமான ரெஃபரன்ஸும் சோர்சும் அவர்களுக்கு யாரும் தர முன்வரவில்லை, கம்பனை தொட எண்ணினார்கள், காலடியில் கொண்டு வந்து கொட்டி விட்டார்கள் அத்தனை சோர்சையும் விபரமானவர்கள்.

மறுமொழி :  இன்றைக்கும் அதே நிலை தான் இஸ்மாயில். அவர்கள் அணிந்த பழைய செருப்பு பத்திரமாக அங்கே இருக்கிறது. ஆனால் அவர்கள் எழுதிய நூல்களை காணவில்லை. என்ன கொடுமை இது ? எதை பாதுகாக்க வேண்டும் என அவர்களின் வாரிசுகளுக்கு தெரியாதா ? இதன் மோசமான விளைவு என்ன தெரியுமா ? சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் அன்றைய தஞ்சை மன்னருக்கு எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத நோயை நாகூரில் அடங்கியிருக்கும் இவர்கள் தான் நிவர்த்தி செய்தார்கள். அன்றைய மன்னருக்கே வைத்தியம் பார்த்தவர்கள். அதனால் தான் இந்த நாகூர் பகுதிகளை மன்னர் அவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன ? மன்னருக்கே மருத்துவம் பார்த்த ஆற்றல் வாய்ந்த மருத்துவரான அவர்களின் வாரிசுகள் உடல்நிலை சரியில்லை எனில் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். எதை பாதுகாப்பது என்பது தெரியாமல் போனதால் வந்த வினை இது !

இஸ்மாயில் :  Wonderful… மிகச் சரியாக அருமையாக சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே ஒரு வேறுபாடு… அவர்களின் பழைய செருப்பும் கூட பாதுகாக்கப்பட வேண்டியவை தான் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்… அது need to preserve… இது nice to preserve

***

அக்பர் அவையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பற்றி எரிகின்ற தன்மையுடைய ‘தான்சேன்” என்ற பாடகரை பற்றி படித்திருக்கிறோம் அல்லவா, தான்சேன் அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர் அல்லர், அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், அவருடைய ஆன்மிக வழிகாட்டியும் நமது எஜமான் அவர்களுடைய வழிகாட்டியும் ஒருவரே, அவர்களே ஹஜ்ரத் கௌது குவாலியர். (தான்சேன் அவர்களுக்கு பய்ஜு பவ்ரா என்பவருக்கும் நடந்த போட்டிகள் சுவையான வரலாற்று சம்பவங்கள்)
***

நாகூர் நாயகம் குவாலியர் எனும் நகரில் அன்னாருடைய ஆன்மிக குருவான ஹஜ்ரத் கவுஸ் (றஹ்) அவர்களுடன் 10 ஆண்டுகள் மூஸா நபியவர்கள் ஹில்ர் அவர்களிடம் கற்க விரும்பிய கல்வியை கற்று தேர்ந்தார்கள்.

***

எஜமான் அவர்கள் பிறந்த ஆண்டு: ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1504, நவம்பர் 17) வஃபாத்தான ஆண்டு: ஹிஜ்ரி 978, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1570, நவம்பர் 09) – அதிகாலை சுப்ஹுடைய நேரம் 4:30 மணியளவில் வஃபாத்தானார்கள்.

***

பொதக்குடி அஹ்மது, நாகூர் ஹனீபாவைத் தொடர்ந்து சிங்கை கமால் அளிக்கும் சிறப்பு போனஸ் :

நமனை விரட்ட மருந்தொன்று இருக்குது…. (mp3)

Download

***
நன்றி : அசனா மரைக்காயர், இஸ்மாயில்

2 பின்னூட்டங்கள்

 1. Ashraf said,

  24/04/2013 இல் 09:59

  அஸ்ஸலாமு அலைக்கும் நானா,

  தங்களுடைய வலைப்பதிவை கடந்த 1 வருடமாக தொடர்ந்து படித்தவனாகவும், எல்லோர் போல் ஒரு கமெண்ட் போடதவனாகவே இருக்கிறேன். (நாகூரான் இப்படி இருப்பது, ஆச்சரியம் இல்லை என்பதை, தாங்கள் அறிவதை அறியேன்)

  உங்கள் வலைப்பதிவு மிக நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஓவியே திறமையும்.

  இன்று.

  “அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
  அனைந்தருகில் நிற்பர் கோடி!”

  இந்த வரியில், என்னை தொலைத்தவன் நான்.

  யாரவது, யார் இந்த நாகூர் நாயகம் என்று? கேட்பவருக்கு, இந்த இரண்டு வரி போதுமானதாக இருக்கும் என அறிகிறேன். (நம்பியவருக்கு)

  பிழை இருந்தால் வருந்துகிறேன். நன்றி.

  • 24/04/2013 இல் 14:47

   வாங்க அஷ்ரப். எல்லோரையும் வெடைக்கும் நான், ‘எஜமான்’ என்றால் மட்டும் உருகிவிடுவேன் உருகி. உங்களுக்காக நண்பர் அசனாவைத் தொடர்புகொண்டு ஒரு ஜெதபு பாடலை இணைத்திருக்கிறேன், பதிவின் அடியில். கேளுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: