ரெட்டை சந்தோஷம் , ஒரு ஓவியத்துடன்!

??… இன்று  என் பிறந்தநாள் + திருமணநாள் (WeLding Day!). நம்ம  வடிவேலு அடி வாங்கும் வீடியோவை இங்கே போடுமாறு சீர்காழி சாதிக்கின் வேண்டுகோள். சிம்பாலிக்கா சொல்றாராம்… அது உண்மைதான், போட்டா மேலும் அடிப்பாளே… போதும் பட்டது.  ஃபேஸ்புக்கில் நேற்றே அமர்க்களப்படுத்திய இரு நண்பர்களுக்கும் அங்கே  வாழ்த்திய உள்ளங்களுக்கும் என் செல்லப் பிள்ளைகளுக்கும் நன்றி.  ‘இன்றுதான் – உங்கள் யோசனைப்படி – குறைந்தது நான்குமுறையாவது நான் பொண்டாட்டி காலில் விழும் நன்னாள்.  வாழ்த்துங்கள் கவிஞரே..’ என்று சொன்னதற்கு , ‘சித்தி உண்டாகட்டும். வாழ்நாள் பூராவும் (நூறு வருஷமாவது) . வாழ்த்துக்கள்’ என்று பதில் எழுதிய அனுபவஸ்தர் தாஜூக்கு 1989ல் நான் கிறுக்கிய – என்னை மேலும்  மேலும் கிறுக்கனாக்கும் – ‘அஸ்மா’வின் ஓவியத்தை  பரிசாக அளிக்கிறேன். ஒருவழியாக எழுதி முடித்த  140 பக்க புதிய சிறுகதையை இந்த வருடத்திற்குள் இணையத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ் . – ஆபிதீன்

Ayisha-1989-Abedeen

19 பின்னூட்டங்கள்

  1. தாஜ் said,

    13/03/2013 இல் 12:25

    தங்கைக்கு என் வாழ்த்துக்கள்.
    இந்தச் சித்திரத்தை தீட்டியமைக்காவது
    உங்க வீட்டுக்காரரை
    அப்பப்ப மன்னிச்சுடலாம்தானே.

    மீண்டும் வாழ்த்துக்கள்.
    -தாஜ்

  2. 13/03/2013 இல் 12:33

    ஹேப்பி டபுள் டமாக்கா!

  3. 13/03/2013 இல் 12:37

    இவ்வளவு எழுதி பதிவு போட்டதுக்கு இந்த வீடியோவப் போட்ருக்கலாம்….

    இதுல அல்வா வாசு நானாக்கும் 🙂

    • abedheen said,

      13/03/2013 இல் 13:05

      சூப்பர். சைக்கிள்ல வந்தது யாரு, நம்ம கவிஞரா?

  4. சாதிக் said,

    13/03/2013 இல் 13:30

    ஆயுஷ் மான் பவ, வாழ்த்த வயசில்லை வணங்குகிறேன் குருவே.எப்ப எழுதிய நாவல்களை வெளியிடுவதான உத்தேசத்தையும் கூறியிருக்கலம்.அதுதான் இரட்டிப்பு சந்தோசம்.பிறந்தநாள்+கல்யாணநாள் பரிசாக,,,,,ட்ரிபுல் தமாக்கா! வாழ்க வளமுடன்.

  5. Nagore Rumi said,

    13/03/2013 இல் 16:18

    பிறந்தவுடனேயே திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு ‘வளர்ச்சி’ கண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    • abedheen said,

      14/03/2013 இல் 09:58

      ஓய், ‘வளர்ச்சி’ அன்னைக்கே நின்னுடுச்சிங்கனி!

  6. 13/03/2013 இல் 18:32

    Blowhole இல்லாத X-ray we(L)d(d)ing. 100 ஆயுஷு பவ…

    ஆமா எனக்கு எப்பொ weLding நடந்துச்சு? சுத்தமா ஞாபகமில்லெ. பாஸ்போர்ட் கையிலெ இருக்கிறதனாலெ பொறந்த தேதி மட்டும் ஞாபகத்துக்கு வருது. அதும் இல்லேன்னா…..!?

  7. 14/03/2013 இல் 08:58

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  8. abedheen said,

    14/03/2013 இல் 10:16

    அழிச்சாட்டியம் செய்யும் ஹமீதுஜாஃபர்நானாவுக்கும் அன்புநிறைந்த அமீன்பாய்க்கும், ஃபோனில் வாழ்த்திய அய்யனார், சத்யா, சென்ஷிக்கும் நன்றி.

  9. 14/03/2013 இல் 17:58

    இங்கயும் என்னோட வாழ்த்துகள் (தாமதமாகவேனும்) சொல்லிக்கறேன்.. பிறந்தநாளன்று தரிசனந்தந்து, பிற சாதம் தராமைக்கு கண்டனங்கள்!

  10. a.maleek said,

    14/03/2013 இல் 18:07

    எதை நினைத்து இத்தனை சிந்தனை .
    வாழ்த்துக்கள்

    • abedheen said,

      16/03/2013 இல் 10:18

      வேறென்ன, பிழைக்கத் தெரியாத இலக்கியவாதியிடம் பிடித்துக்கொடுத்துவிட்டார்களே என்ற கவலைதான் அவளுக்கு. என் கவலையை எப்படிச் சொல்ல?

  11. Nagore Rumi said,

    15/03/2013 இல் 12:20

    அன்னிக்கே ’வளர்ச்சி’ ’நின்னு’டிச்சா? அதுதான் ஆம்பளைக்கு அழகு! அன்னிக்கி நிக்க ஆரம்பிச்சது, இன்னும் உடகாரவே இல்ல போலிருக்கே!

    • abedheen said,

      16/03/2013 இல் 10:20

      நேரில் நான் காட்டும்வரை நீர் உட்காரமாட்டீர் போல. வருகிறேன்.

      • தாஜ் said,

        16/03/2013 இல் 13:26

        என்ன இது….
        என்னையொத்த
        சின்னப் புள்ளிங்க இருக்கிற இடத்துல!

      • abedheen said,

        16/03/2013 இல் 16:15

        பல்லே இல்லாவிடினும் பலமான நம்பிக்கை உண்டு உமக்கு!

  12. தாஜ் said,

    16/03/2013 இல் 20:49

    ஒண்ணும் சொல்ல முடியல.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s