இன்னொரு மோசடி இன்னுமொரு எழுத்துத் திருட்டு

இன்னொரு ‘உதயனானு தார’மும் கூட.   பாவம் குளச்சல் மு. யூசுப்…  அவருக்கு  நேர்ந்த கொடுமையை குமுதம் ரிப்போர்ட்டர் வெளிக்கொணர்ந்திருக்கிறது (10 . 3. 2013 இதழ்) .   பார்க்க : இமேஜ் 1இமேஜ் 2 .  ஏழை என்  குமுறலை ஏக இறைவன் மட்டுமே அறிவான். அது அப்புறம் வரும், இன்ஷா அல்லாஹ்.  ‘பிழை திருத்தச் சொல்லிக் கொடுத்த நூலை, தங்கள் பெயரில் வெளியிட்டு என் பிழைப்பைக் கெடுத்துவிட்டார்கள் மலையாள எழுத்தாளர்கள் என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார் தமிழ் மொழிபெயர்ப்பாளர் யூசுப்’ என்று மிக மெதுவாக திருப்பணியைத் தொடங்கியிருக்கும் திருவட்டாறு சிந்துகுமாருக்கும் ரிப்போர்ட்டருக்கும் நன்றி கூறி இங்கே பதிவிடுகிறேன். ஏற்கனவே ஃபேஸ்புக் மூலம் இதை அறிந்தவர்களும் மீண்டும் பேசலாம். குளச்சலின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘சகலகலா கள்வன்  – ஒரு திருடனின் சுயசரிதை’யில்  ஒரு வரி வரும் : ஏற்றுமானூர் ஸ்டீஃபன் சொல்வதுண்டு “ஏற்றுமானூரப்பனின் விக்கிரகத்தைத் திருடி விட்டு வெளியே குதித்த இடத்தில் ஒரு யானை நிற்கிறது. அது தும்பிக்கையைத் தூக்கி ஒரு சல்யூட் அடித்தது!”

குளச்சல் மு. யூசுபுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.  – ஆபிதீன்

***

Scan_Doc0036தமிழ் மற்றும் மலையாள இலக்கியத்திற்கான பல்வேறு விருதுகளைப் பெற்றவர் குளச்சல் யூசுப். இவர் தமிழில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருவதுடன் மலையாளத்தில் மிகவும் புகழ் பெற்ற இருபத்தாறு நூல்களை முறையான அனுமதியுடன் மொழிபெயர்த்து தமிழ்நாட்டின் முக்கிய பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறார். வைக்கம் முகமது பஷீரின் எல்லா நாவல்களையும் மொழிபெயர்த்தவர். மலையாளத்தின் தொன்மம் சி றிதும் கெடாத வகையில் வெளியான நளினி ஜமீலாவின் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் கதை!’ இன்றளவும் பேசப்படும் ஒன்று. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் கீழ், தமிழக முதல்வரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் Central Institute of Classical Tamil  எனும் தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்காக, சங்க இலக்கிய அற நூல்களில் ஒன்றான நாலடியாரை இவர் மலையாளத்தில் மொழியாக்கம் செய்து சமர்பிப்த்த விவகாரத்தில்தான் மோசடி அரங்கேறியுள்ளது.

மலையாள எழுத்தாளர்கள் செய்த துரோகம் குறித்து வேதனையுடன் கூற ஆரம்பித்தார் குளச்சல் யூசுப்.

naladi-mal-kr“கடந்த டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றிருந்தபோது நாலடியார் பெயரில் ஒரு புத்தகம் இருப்பதைப் பார்த்து அதை எடுத்தேன். அதில் ‘முண்டியாடி தாமோதரன்’ என்ற பெயர் இருக்கவே எனக்கு அதிர்ச்சி. நான் நாலடியாரை மலையாளத்தில் மொழிபெயர்த்த அதே வரிகள் அச்சு பிசகாமல் அப்படியே வெளியாகி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாறுதல்களை மட்டுமே செய்திருந்தனர், நாலடியார் கவிதைகளை மலையாளத்தில் நான் மொழிபெயர்த்தபோது திருத்தங்களுக்காகவும் மதிப்பீடு செய்வதற்காகவும் மலையாளமும் தமிழும் நன்கறிந்த பலரது பார்வைக்குக் கொண்டு சென்றேன். இறுதியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளர் விஜயன் கோடஞ்சேரி என்ற என் நண்பருக்கு ஒரு பகுதியை அனுப்பி வைத்தேன். இவர் தன்னுடைய நண்பர் முண்டியாடி தாமோதரனுடன் சேர்ந்து, பிழை திருத்தித் தருவதாகவும் மிச்சமிருக்கும் பிரிண்ட் அவுட்களை அனுப்பி வைக்கும்படியும் கடிதம் மூலம் கேட்டு வாங்கினார். முதலில் சில பக்கங்களை மட்டுமே திருத்தி எடிச் செய்து அனுப்பினார்கள். அதன்பின் அவர்களிடமிருந்து எதுவும் வரவில்லை. ஆனால் திருவனந்தபுரத்தில் புத்தகத்தைப் பார்த்த பின்னர்தான் இவர்கள் திட்டமிட்டு என்னை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. நான் பிழை திருத்தக் கொடுத்த பிரதியை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து அசலை எனக்கு அனுப்பி விட்டு, ஜெராக்ஸ் நகலை வைத்து புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்.

mundiyadi-kodanjeriஅடிப்படைத் தமிழ்கூட தெரியாத இவர்கள் இருவரும் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முற்பட்ட நாலடியார் கவிதைகளை மோசடி செய்து தங்கள் பெயரில் மொழிபெயர்ப்புப் புத்தகமாக வெளியிட்டதுடன் முன்னுரையில் நானே இதனை அவர்கள் பெயரில் வெளியிட அனுமதி கொடுத்ததுபோல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் மலையாளத்தில் என்னுடைய முதல் முயற்சியையே சீர்குலைத்ததுடன் மனக்கஷ்டத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

ஏற்கனவே வார இதழ் ஒன்றில் பேசி வைத்து வாரம்தோறும் வெளியிட ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். இதற்கு கணிசமான சன்மானம் கிடைத்திருக்கும். பின்னர் நூலாக வெளியிட்டால் ராயல்டியும் வந்திருக்கும். மொழிபெயர்ப்பைத் திருடியதால், பெரிய அளவில் பண இழப்பு. மொழிபெயர்ப்புதான் என் தொழில். என் பிழைப்பைக் கெடுத்து விட்டார்கள்.

மேலும் நூல் குறித்து விளக்கம் கேட்பவர்களிடம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிற நோக்கத்தில் ‘நாலடியார் என் மூலம் மலையாளத்தில் வெளிவருவதற்காக வழியமைத்தவர் தமிழின் பிரபல மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு. யூசுப்’ என்று முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தனைக்கும் நான் முண்டியாடி தாமோதரனைப் பார்த்ததுகூட இல்லை. ஆனால் விஜயன் கோடஞ்சேரி, திட்டமிட்டு ஒன்றரை ஆண்டு உழைப்பில் உருவான நூலை முண்டியாடி தாமோதரனிடம் கொடுத்து அவர் பெயரில் வெளியிட்டிருப்பதோடு, விஜயனே முன்னுரையும் வழங்கி மோசடி செய்திருக்கிறார்.

இதுபற்றி விளக்கம் கேட்டபோது எனக்கு குழப்பமாக பதில் தந்திருப்பதோடு அபகரித்து பொருளின் உரிமையாளரையே பங்குதாரராக சேர்த்துக் கொள்வதுபோல் ‘நான் செய்த நாலடியாருக்கு இனியொரு பதிப்பு இறங்குமென்றால் மொழி பெயர்ப்பாளர் என்று எழுதி தங்களுடைய பெயரையும் சேர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நான் செம்மொழிக்காக என்னுடைய பணியை நிறைவு செய்து அனுப்பி விட்டேன். நாளைக்கு இது புத்தகமாக வரும்போது முண்டியாடி தாமோதரனின் நாலடியாரை நான் திருடியதாகக் கூறுவார்கள். அதற்காக அவர்கள் தவறு செய்ததை மலையாள இதழ்கள் வாயிலாக வெளிப்படுத்தவேண்டும் என்றும் நஷ்ட ஈடு கேட்டும் சட்ட பூர்வமான நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறேன். கேரளாவிலுள்ள இலக்கியவாதிகள் அனைவரும் என் பக்கத்து நியாயத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று?” என்றார் விரக்தியுடன்.

முண்டியாடி தாமோதரனைத் தொடர்பு கொண்டோம். “இது விஷயமா நீங்க எல்லா விவரத்தையும் விஜயன் கோடஞ்சேரியிடம் பேசிக் கொள்ளுங்கள்” என்றார். விஜயன் கோடஞ்சேரியிடம் பேசியபோது, “யூசுப்புக்கு மலையாளம் ஒண்ணும் நல்லாத் தெரியாது. அவரோட மொழிபெயர்ப்பில் நிறைய தப்பு. முண்டியாடி தாமோதரன் ஆங்கிலத்தில் வந்த நாலடியாரைத்தான் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். எனக்கும் தாமோதரனுக்கு தமிழி மொழி பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது, நாங்ஜ்கள் அப்படி மொழிபெயர்த்தது இல்லை!” என்றார்,

குளச்சல் மு. யூசுப்புக்கு நியாயம் கிடைக்குமா?

***

நன்றி : குளச்சல் மு. யூசுப், குமுதம் ரிப்போர்ட்டர், தாஜ், மஜீத்

13 பின்னூட்டங்கள்

 1. 07/03/2013 இல் 13:07

  பெற்ற பிள்ளையை பறிகொடுததை விட கொடுமையான சோகமிது. குளச்சல் யூசூப் அவர்களின் வேதனையை உணர முடிகின்றது. அவருக்கு நியாயம் கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன்.

 2. தாஜ் said,

  07/03/2013 இல் 14:26

  எனக்காகவும்
  என் நூருல் அமீன் துவா செய்ய வேணும்.
  எப்படியோ
  குளைச்சலுக்கு நீதி கிடைத்தால் சரி..
  -தாஜ்

  பின்குறிப்பு:
  //ஏழை என் குமுறலை
  ஏக இறைவன் மட்டுமே அறிவான்.
  அது அப்புறம் வரும்,
  இன்ஷா அல்லாஹ்.//
  – ஆபிதீன்

  இன்ஷா அல்லா…!

 3. kulachal yoosuf said,

  07/03/2013 இல் 14:49

  kk

 4. kulachal yoosuf said,

  07/03/2013 இல் 14:54

  முதலில் நீண்டதொரு மறுமொழி எழுதினேன். அது எங்கே போய்த் தொலைஞ்சுதோ தெரியவில்லை. அது போகட்டும். குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த மகிழ்ச்சியை விடவும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஆப்தீன் பக்கங்களில் வெளிவந்ததில். இதற்கான முக்கியக் காரணம் இதன் வடிவமைப்பாகவும் இருக்கலாம். நண்பர்கள் ஆப்தீனுக்கும் தாஜிக்கும் ஓ. நூருல் அமீனுக்கும் மிகவும் நன்றி. மேலும் இது குறித்து சற்று விரிவாக பிறகு எழுதுகிறேன்.

  • abedheen said,

   07/03/2013 இல் 15:32

   //முதலில் நீண்டதொரு மறுமொழி எழுதினேன்// எது, ‘kk’ன்னு இருக்கே, அதா?!

 5. kulachal yoosuf said,

  07/03/2013 இல் 15:45

  இல்லை. காணாமல் போன பிறகு நடந்த சோதனை முயற்சி அது. kk சோதனையில் வெற்றிபெற்ற பிறகுதான் அந்தச் சிறு குறிப்பை எழுதினேன். kk யைக்கூட பின்நவீனத்துவ வாசிப்புக் குட்படுத்தும்போது, கட்டுக்கடங்காத அர்த்தத்தளங்களை அதனுள் கண்டடைய இயலும். நான் எழுதியதை மட்டுமே வாசகன் வாசிக்க வேண்டுமென்ற கருத்தியல் அராஜகத்தை பகடிக்குட்படுத்துகிற வாசக சுதந்திரத்தை அந்த kk க்கள் வலியுறுத்துகின்றனவே.

 6. kulachal yoosuf said,

  07/03/2013 இல் 15:50

  சிறு திருத்தம்: ஒரு திருடனின் வாழ்க்கைக் கதை இன்னும் வெளியாகவில்லை. அதன் பெயரை “சகலகலா கள்வன்” என்று இன்னும் முடிவு செய்யவுமில்லை. அதைப் பற்றிய ஒரு குறிப்பெழுதும்போது இந்தப் பெயரைச் சூட்டினேன். அவ்வளவுதான்.

 7. 07/03/2013 இல் 20:15

  நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பு செய்து விட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு அனுப்பியதற்கு ஆதாரங்கள் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

  எனது அறிவியல் குரு ஸ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜா முன்னெச்சரிக்கையாக ஒரு விசயத்தை கடைபிடிப்பார். தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளின் செய்முறைகளை விரிவாக எழுதி தான் வேலை பார்க்கும் அந்தனப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தன் வீட்டு அட்ரஸுக்கு acknowledgement register ல் போஸ்ட் பண்ணிவிடுவார். போஸ்ட் செய்யப்பட்ட கவர்(பிரிக்காமல்), அக்னாலட்ஜ் ரசீது எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்திருப்பார். காரணம் நாளை எவனாவது ஒருத்தன் இவருடைய கண்டுபிடிப்புகளை தன்னுடையது என்று உரிமைக் கொண்டாடினால் நீதிமன்றம் வழக்கு என்று வரும்போது போஸ்ட் ஆபிஸில் போட்ட முத்திரை, அதிலுள்ள தேதி, உடைக்கப்படாத கவரிலுள்ள செய்முறை விளக்கம் அனைத்தும் கோர்ட்டில் சாட்சியாக நிற்கும். இதைவிட ஒரு ஆதாரம் வேண்டுமா..?

  இனிமேலாவது இந்த முறையை கையாளுங்கள்.

 8. தாஜ் said,

  08/03/2013 இல் 01:52

  குளைச்சல்….
  பார்த்திங்கள நம்ம நண்பர்கள் என்னமான
  ஐடியாவெல்லாம் தராங்கன்னு.
  தவிர,
  ஆபிதீன் பக்கங்கள்…
  இந்திய, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய்ன்னு
  பெயர் போட்ட கீர்த்தி..

  கவலை வேண்டாம் குளைச்சல்…
  எல்லோரின் துவாவும்
  உங்கள் எண்ணத்தை ஈடேற்றும்.

  • abedheen said,

   09/03/2013 இல் 10:50

   //இந்திய, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய்ன்னு..// ஆமாம் தாஜ், தினம் ஆறுபேர் பார்க்கிறார்கள் (நாகூரையும் சேர்த்துக்கொண்டேன்!)

 9. 09/03/2013 இல் 14:15

  மலையாள நாலடியார் மறுபடியும் குளச்சல் பெயரில் வரவேண்டும்……வந்தே தீரவேண்டும்….

  வரும்….
  காத்திருப்போம்
  குளச்சலுக்குத் துணையிருப்போம்….

 10. தாஜ் said,

  10/03/2013 இல் 18:18

  //தினம் ஆறுபேர் பார்க்கிறார்கள் (நாகூரையும் சேர்த்துக்கொண்டேன்!// ஒரு பெருமையையும் சொல்லவிட மாட்டீங்களே.

 11. kulachal yoosuf said,

  31/03/2013 இல் 07:06

  அனைவருக்கும் நன்றி.

  ஜாஃபர் அவர்களுக்கு, என்னுடையது தான் என்பதற்காக அனைத்து ஆதாரங்களும் கைவசமிருக் கிறது. வழக்குப் போடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

  இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் சற்று முன்கருதல்களுடன்தான் அதனைச் செய்ய இயலும். வழக்கறிஞர் நண்பர்கள் சிலர் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க் காமல் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நோட்டீஸ் அனுப்புவது, வழக்கு சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் வந்தால் கூப்பிடுவார்கள், செல்வேன். தேனீர் அல்லது சுக்குக்காப்பி தருவார்கள்.

  நண்பர் தாஜ், நாலடியார் மலையாளம் என் பெயரில் வெளி வருவது குறித்து இன்னமும் நான் முடிவு செய்யவில்லை. ஏனென்றால் அந்தக் கஸ்மாலம் எழுதிய பதிலில் ”அடுத்தும் ஒருவர் நாலடியாரை மலையாளத்தில் கொண்டு வர இருக்கிறார். அவர்மீதும் நீங்கள் வழக்குத் தொடுப்பீர்களா” என்று கேட்டி ருக்கிறது. அப்படி ஒன்று வருமானால் நிச்சய மாக இரண்டாவது கஸ்மாலம்மீது வழக்குப் போட இயலாது. ஆக, எதையாவது செய்து அதை சீரழிக்க அவனால் இயலும். இந்நிலையில் என்பெயரிலும் அதைக் கொண்டு வருவது நன்றாக இருக்காது. பரவாயில்லை. இப்போது சிவவாக்கி யரை மலையாளத் தில் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கி றேன். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது எனும் ஐந்து நூல்களையும் மொழியாக்கம் செய்து ஒரே நூலாகக் கொண்டு வரும் பணியையும் ஆரம்பித்திருக்கி றேன். நாலடியாரைப் பொறுத்தவரைக்கும் மலையாளத்தை மறந்துவிட வேண்டியதைத் தவிர வேறுவழியிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கலாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s