ஒரே ஃபோட்டோ ஃபோட்டிதான்! இன்று பிறந்தநாள் காணும் ’தினம் ஒரு பூண்டு’ புகழ் அஸ்மாவை வாழ்த்துகிறேன். முதன்முறையாக இணையத்தில் முகம் காட்டுபவளை சகோதரர்களும் வாழ்த்தலாம். இந்த ஃபோட்டோ, சென்றவருடம் மேலநாகூருக்கு சுற்றுலா சென்றபோது (நாகூரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது!) நான் கெடுத்தது. களை சொட்டும் புகைப்படங்கள் எடுக்க நான் ஒன்றும் கலைஞன் நௌஃபல் அல்லவே… இருந்தாலும் இந்த கோணத்தில் எடுத்தால் எல்லா மனைவிகளும் அழகாகவே இருப்பார்கள் என்பது என் எண்ணம். எது சார் உங்க அஸ்மா, மேகமா மரமா வானமா வைக்கோல் போரா என்று கேட்காமல் பாருங்கள். அற்புதமாக அஸ்மா எடுத்த ‘சபராளி’ ஆபிதீனின் புகைப்படத்திற்கான சுட்டி அடியில் இருக்கிறது. அவசியம் அதைப் பார்த்து அபிப்ராயம் சொல்லுங்கள். நன்றி. – ஆபிதீன்
அஸ்மா எடுத்த ‘சபராளி’ ஆபிதீனின் ஃபோட்டோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
தாஜ் said,
17/10/2012 இல் 11:38
அன்பு தங்கைக்கு
ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.
‘சபராளி’ ஆபிதீனை எனக்குத் தெரியாதா?
இப்படியெல்லாம் சுதந்திரமாய்.., பசுமையோடும், தனிக் கொடியோடெல்லாம் இருக்க மாட்டார்!
-தாஜ்
மஜீத் said,
17/10/2012 இல் 22:21
கரெக்ட் தாஜண்ணே, இவ்ரு எப்பவும் கண்ணாடி போட்டுக்கிட்ருப்பார்
abedheen said,
18/10/2012 இல் 10:15
’ஹை, உங்க கூட்டாளி சரியா சொல்றாஹலே!’ – அஸ்மா
Jafar Sadiq said,
17/10/2012 இல் 12:03
Abideenin kurumbu vayadhaaga aaga adhigamaagi konde pogiradhu.
ஜமாலன் said,
17/10/2012 இல் 15:37
வாழ்த்துக்கள்.
Hameed Jaffer said,
17/10/2012 இல் 20:03
துஆவுடன் வாழ்த்துக்கள்….. உங்கள் அஸ்மாவுக்கு
வருத்தம்: எப்படி இருந்த ஆபிதீன் இப்படிப்போயிட்டாரே….! அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க சேருவார்கூட சேரணும்னு. நல்லவேளை என்கூட சேர்ந்ததால் இந்த அளவுக்கு ஆனிங்க. இல்லேன்னா……..?
தாஜ் said,
18/10/2012 இல் 07:23
ஜெஹஃபர் நாநா…
உங்க ‘சபராளி’ போட்டோவ
ஒருதரம் காட்டுங்க பிளீஸ்.
அப்…பா,. நல்லவேளை
‘சபராளி’யில் இருந்து
நான் தப்பிச்சுட்டேன்!
லோலோன்னு அலையிற சொறி நாய் அளவுல
அல்லா என்ன காப்பாத்திட்டான்.
-தாஜ்
abedheen said,
18/10/2012 இல் 10:12
வெறிநாய்களால் விரட்டப்படும் வேதனைமிக்க ‘ஹமார்’களாக இங்கே இருப்பதற்கு சொறிநாய் உத்யோகம் எவ்வளவோ தேவலை தாஜ்.
அனாமதேய said,
05/03/2013 இல் 15:18
தமிழ்