இறைவா…!
இருட்டும் வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ…!
அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ…!
வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்..!
வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்…!
என்றாலும்
“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்…!
ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா…?
***
கொடுத்ததற்கு நன்றி : இஜட். ஜபருல்லாஹ் (Cell : 0091 9842394119 )
ranjani135 said,
07/08/2012 இல் 09:12
கவிதை மிக அருமை. எளிமையான வார்த்தைகளால் இறைவனின் பெருமையை மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்!
இறைவன் கொடுப்பதெல்லாம் நல்லவைதான், நாம்தான் நன்றி பாராட்ட மறந்து விடுகிறோம்.
பாராட்டுக்கள் அன்பரே!
abedheen said,
07/08/2012 இல் 09:34
நன்றி . இந்த வலைப்பக்கத்திலுள்ள அண்ணன் ஜஃபருல்லாவின் மற்ற ஆக்கங்களையும் படித்துப் பாருங்கள் (வகைகள் -> நாகூர் எழுத்தாளர்கள்-> இஜட். ஜபருல்லா).
Abdul Qaiyum said,
27/12/2012 இல் 18:21
நல்ல கவிதை. நீ கொடுத்தது அல்லவா?