குலாம் அலைக்கும்! சரட்!! – மஜீத்

ஹாரிபிள் ஹஜ்ரத்துக்குப் பிறகு அடுத்த 18++ , காதர்பாய் ரொம்பக் கெஞ்சியதால்.

’வாழ்க்கை எது? / ஒருவர் கேட்டார். / மண்ணில் மேல் / பிறந்து – நடந்து / மண்ணுக்குள் / படுப்பதுதான் / என்றேன்’  என்பார் கவிஞர் இஜட். ஜபருல்லா. சார்ஜா மஜீதின் வாழ்க்கையோ யாரைப்பார்த்தாலும் இந்தமாதிரி படக்னு ’குலாம்’ சொல்வதுதான். இந்த மஜீதைப்  பார்க்கும்போது மாத்ருபூதம் சொன்னதுதான் ஞாபகம் வரும் (’சுஜாதாட்ஸ்’-ல் இருந்தது). டாக்டர் சொன்னாராம் :  ’சின்னதா இருந்தா என்னங்க.. ரெண்டு இஞ்ச் போதும்னு என் பேஷண்டுகளுக்கு காட்டிக்காட்டி விரலையே மடக்க முடியலே’ . சலாம்ஜான்! – ஆபிதீன்

***

குலாம் அலைக்கும்! சரட்!!

நான்தான் இப்பிடின்னா என்கிட்ட வந்து சேர்றதெல்லாம் அப்டித்தான் வந்து சேருது. அதுமட்டுமில்ல, நான் போய்ச் சேர்ற இடம் மட்டும் என்ன ஒழுங்கா?” அதுவும் அப்டித்தான்.

ஏதோ துபாய்க்குப் போய் ஒழச்சுப் பொழச்சுக்குவோம்னு அப்பாவியாய் வந்திறங்கி, ஒரு வேலைல சேந்தேன்ல, அப்பவே ஆப்கானிஸ்தான்ல தலிபான் ஆட்சியப் புடிச்சுட்டாங்க. ஆனா பாருங்க இது ரெண்டு சம்பவத்துக்கும் நேரிடையாவோ மறைமுகமாவோ ஒரு தொடர்பும் இல்ல.

இருந்தாலும், நான் வேலைபாத்த கம்பேனி துபாய்ல இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பலதரப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி பண்றதும் நான் அங்கே இருந்து பலதரப்பட்ட ஜோக்குகள இறக்குமதி பண்றதும் நடந்துகிட்டே இருந்துச்சு. இப்டித்தான் நீங்க மேல படிச்ச தலைப்போட மொதப்பாகம் வந்துச்சு.

அங்கே இருந்து ஒரு மானேஜர் அடிக்கடி இங்க வருவார். மீசைதாடியெல்லாம் இல்லாம முழு வழுக்கைத் தலையோட மொழுமொழுன்னு அவர் வரும்போதே அவர்ட்ட ஏதாவது வம்பிழுத்தாத் தேவலைன்னு தோணும். ஒருநாள் ஒரு ’கிறுக்முறுக்’ வேலைபாத்து அவரை ஒரண்டை இழுத்தேன். இங்க பாரு என்னயப் பத்தி ஒனக்குத் தெரியாது, அப்பறம் எங்க ஊர் காய்கறிக் கடைக்காரர் எங்கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி நீயும் ஆயிருவேன்னு மிரட்டுனார். அதைச் சொல்லுய்யா முதல்லன்னு கேட்டேன். சொன்னார்;

அவர் பேரு குலாம்ஜான். ஒரு நாள் வேகமா போய் அவர்ட்ட, “சலாம்ஜான் குலாமலைக்கும்னேன்,

அவருக்கு லேசா நெருடுனாலும் முழுசா புடிபடலை.

அலைக்கும் சலாம்னார்.

எவ்வளவு கிலோ கத்தரி வெலை காய்னு கேட்டேன்.

அவர் 20 ஆப்கானின்னு சொன்னவுடனே பக்கத்துக்கடைப் பையன் சிரிச்சுட்டான். நான் ஏதோ தற்செயலா டங்கு சிலிப்பானது எனக்கே தெரியாதது மாதிரி, அந்தப் பையனை டேய் எதுக்குடா சிரிக்குறேன்னு அதட்டுறமாதிரி ஆக்டு குடுத்துட்டு, கத்திரிக்காய வாங்கிட்டு நடையைக் கட்டிட்டேன். அதுக்கப்புறம் அந்தப்பையன் போட்டுக்குடுத்துருக்கனும்; இப்பல்லாம் நான் போனாலே, எல்லா வேலயையும் விட்டுட்டு, என் வாயமட்டும் பாத்துக்கிட்டு, வெரப்பா நின்னுகிட்டு பேசுறார்னு சொன்னார். 

அந்தக் குசும்பர் ஒரு ஒன்ரை வருசத்துக்கப்புறமா வரும்போது பெரிய தாடியோடு வந்தார். நான் ஏதோ இந்தாளு இபாதத்தா இருக்குறாருன்னு நினச்சுக்கிட்டேன். அவர் ஊருக்குத் திரும்பிப் போற சமயத்துல ஒரு நைஸ் துணிய விரிச்சுக்கிட்டு அப்பப்ப, அதை மூஞ்சில வச்சு அழுத்திக்கிட்டு, கண்ணாடில பாத்துக்கிட்டு இருந்தார். ஏய்யா என்னாச்சு? என்ன பண்றே அடிக்கடி?ன்னு விசாரணயப் போட்டேன்.

அடப் போப்பா; இப்பல்லாம் பிரச்சினையா இருக்குப்பா; தாடி வக்கிறது கட்டாயம்னுட்டாங்க. அதுவும் ட்ரிம் பண்ணக்கூடாதாம். யாராவது ட்ரிம் பண்ணது தெரிஞ்சா அடிக்கிறாங்களாம்ப்பான்னார். அவுங்களுக்கு சந்தேகம் வந்தா ஆளக் கூப்பிட்டு அவுங்க மூஞ்சில மஸ்லின் துணியை வச்சு அழுத்துறாங்கப்பா. அந்தத் துணிவழியா தாடி மயிர் நொழஞ்சு வெளில வந்து நீட்டிக்கிட்டு இருந்துச்சுன்னா அவன் செத்தான், தர்ம அடிதான்னார். அதான் நான் செக் பண்ணிப்பாத்தேன்னார்.

இதெல்லாம் எப்பல இருந்துன்னு கேட்டேன். இப்பக் கொஞ்ச நாளாதான் எல்லாரும் தாடி வச்சுக்கிறனும்னு சொல்றாங்க; மொதல்ல கவுருமெண்டு ஆபீசர்களும் போலிசுக்காரங்களும்தான் கட்டாயம் தாடி வைக்கனும்னு சொல்லிருந்தாங்க. அப்பெல்லாம் நாங்க அதை வச்சு ஜோக்கடிப்போம்; இப்ப எங்களுக்கே இந்த நெலமைன்னு புலம்புனாரு. யோவ் ஒம்பொலம்பல நிறுத்திட்டு அந்த ஜோக்க சொல்லுய்யான்னு நச்சரிச்சேன்.
எடுத்துவிட்டார் பாருங்க:

ஒரு பஸ்ஸுல உக்காந்திருந்த எல்லார்க்கும் கண்டக்டர் டிக்கெட் போட்டுக்கிட்டே வந்தார். ஒருத்தர் சொன்னார், நான் டிக்கெட்லாம் வாங்க மாட்டேன், நான் போலிசுன்னார். அதுக்கு கண்டக்டர் அதுக்கு என்ன ஆதாரம்னு கேக்க, எம்மூஞ்சியப் பாத்தாத் தெரில? தாடி வச்சுருக்கேன் பார்னு மிரட்ற மாதிரி சொல்லவும், எதுக்கு வம்புன்னு கண்டக்டர் நகந்துட்டார். இதைப்பாத்த இன்னும் ரெண்டு எதார்த்த தாடிகளும் நானும் போலிசுதான்னு சொல்லி, டிக்கட்ட ஆட்டயப்போட்ருச்சுக. இதெல்லாத்தயும் சத்தமில்லாமப் பாத்துக்கிட்டு இருந்த ஒரு அராத்து, “ஆஹா, நமக்குத் தாடி இல்லையே, இருந்திருந்தா இந்நேரம் நம்மளும் டிக்கட்டை ஆட்டைபோட்ருக்கலாமே”ன்னு வருத்தப்பட்டுச்சு. கண்டக்டர் நம்மட்ட வரட்டும், ஏதாச்சும் பண்ணிப்பாப்போம்னு ஒரு முடிவோட இருந்துச்சு.

கண்டக்டர் வந்தார்; எங்க போகனும்? டிக்கட் வாங்கிக்கிங்கன்னார். உடனே நம்ம அராத்து என்ன சொன்னுச்சு தெரியுமா? நானும் போலிசுதான். டூட்டிலதான் இருக்கேன்னு சொன்னுச்சு. உடனே கண்டக்டர் இங்கபாரு, போலிசுன்னா தாடி வச்சிருக்கனும். ந்தா, அங்க பாரு, அவுகல்லாம் போலிசுதான், தாடி வச்சுருக்காங்க பாத்தியா? ஒழுங்கா ஏமாத்தாம டிக்கட்ட வாங்குன்னார்.

ஒடனே அந்த அராத்து ஒரு கண்ணை மட்டும் லேசா மூடி, கழுத்தை அவர் பக்கம் லேசா சாச்சு, யோவ் இங்க வாய்யா பக்கத்துலன்னு, குரலத் தாத்தி சொல்லுச்சு. கண்டக்டர் லேசா குனிஞ்சு, என்னய்யா, இப்ப சொல்லுன்னார். அதுக்கு அந்த அராத்து, “நான் ரகசிய போலிசுய்யா. சந்தேகம்னா நல்லாப் பாத்துக்கய்யா, ஆனா யார்ட்டயும் சொல்லாதே”ன்னு சொல்லிட்டு சரட் னு பேண்ட்டு ஜிப்பை இறக்கிருச்சு. கண்டக்டரும் சத்தமில்லாம நகந்துட்டார். (தலைப்போட ரெண்டாவது பாகம் இந்த ‘சரட்’தான்)

கதையை முடிச்சுட்டு என்னப் பாத்து கண்ணடிச்சார். இப்ப நான் நகந்துட்டேன்.

***

நன்றி : மஜீத் | ’சலாம்’ சொல்ல :   amjeed6167@yahoo.com

4 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  15/03/2012 இல் 15:41

  என்ன மஜீத்…..
  பெரிய பெரிய விஷயங்களை எல்லாம்
  தடப்புடலா சொல்றீஹலே!.
  ஆபிதீன்தான் பாவம்.

  *
  ஆனா பாரு
  நல்லா சிரிச்சேன்.
  அந்த மொட்டை தலை
  அடுத்தத் தடவை வந்தானுல்ல
  அதை எப்ப எழுதப் போறீங்க?

  *
  பக்கத்தில…
  தாடி வைச்ச போட்டோவ காணுமே?.
  பஞ்சமாயென்ன?

  -தாஜ்

 2. haja mydeen said,

  16/03/2012 இல் 03:28

  taj,its realy wonderful. haja.

  • தாஜ் said,

   17/03/2012 இல் 16:39

   ஹாஜா….
   ரசிச்சியா.
   உனக்குத் தெரியும் மஜீதே.
   ரியாத்திலே என்னுடன் பார்த்திருக்கக் கூடும்.
   அறிமுகப்படுத்தணும்னா…
   புத்திசாலி.
   -தாஜ்

  • 20/03/2012 இல் 12:52

   நன்றி ஹாஜாபாய்.

   1989 ல் அந்துலேஷியா குரூப்ல இருந்தீர்களா?
   அப்படியென்றால் நான் உங்களை ஒருமுறை
   ரியாதில் சந்தித்ததான எனது நினைவும் சரி.
   தொடர்பிலிருப்போம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s