ஏன் இந்த சோதனை நியாயமா?

அஸ்மாவையும் பிள்ளைகளையும் பிரிந்து ஓரிரு நாளில் துபாய் போகிறோமே என்று மனசு சரியில்லாமல் ஜபருல்லாநானாவை பார்க்கப் போனால் ’இவ்ளோ சளியும் காய்ச்சலும் வச்சிகிட்டு ஏங்கனி போறா?’ என்று அதட்டி, என் நெஞ்சு முழுதும் விக்ஸ் பூசினார். பூசியதோடு நில்லாமல் ‘இத கேளுங்கனி’ என்று குலாம் அலியின் ’ஏ ஹுஸ்னு பே பர்வா’ கஜலைப் போட்டார். அத்தோடு விட்டிருக்கலாம். அதே டியூனில் – மர்ஹூம் வாஹித் கேட்டதற்கிணங்க – தான் இயற்றிய பாடலையும் பாடிவிட்டார். துக்கம் எல்லை கடக்காமல் என்ன செய்யும்?!

***

ஏன் இந்த சோதனை நியாயமா?
ஏழை என் நெஞ்சம் தாங்குமா?
வல்லோனே உனக்கிது ஆகுமா?
வளம் எந்தன் வாழ்வில் கூடுமா?

(ஏனிந்த)

எல்லோரும் நலம்பெற வேண்டினேன்
எழிலான கவிதைகள் பாடினேன்
வீணே என் திறமைகள் மாய்வதா?
விதியே என்றெண்ணி ஓய்வதா?

(ஏனிந்த)

அழவைக்கும் அடுத்த சரணத்தை அப்புறம் பதிவிடுகிறேன். ஒரிஜினல் கஜலைக் கேளுங்கள். இது சும்மா காதல் சமாச்சாரம். இறைக்காதலோ ? இஸ்மாயில்பாய், அர்த்தம் சொல்லுங்கள் . எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை. இசையமைத்தது தாலிப் ஹுசைன்; குலாம்அலி அல்ல என்று ஒருவர் கருத்து சொல்லியிருக்கிறார். இருக்கலாம். பிறர் இசையமைப்பில் எத்தனையோ பாடல்கள் குலாம்அலி பாடியிருக்கிறார். ’கொலவெறி’யோடு அலைபவர்கள் கலைவெறியோடு குலாம்அலி பாடும் கஜலைக் கேட்பார்களாக!

***

***

See another Version : http://www.youtube.com/watch?v=CKFrbTx82q8

2 பின்னூட்டங்கள்

  1. நாகூர் மாமி said,

    30/11/2011 இல் 16:30

    வீணே என் திறமைகள் மாய்வதா?
    விதியே என்றெண்ணி ஓய்வதா?

    உண்மையிலேயே ரொம்ப அற்புதமான வரிகள்.

  2. 30/11/2011 இல் 21:42

    ஆபிதீன்,

    நீங்க ஏன் அங்கே போனீங்க, மனுசன் எல்லாத்தையும் கொழப்பி விட்டுடுவார். அவருடைய லாஜிக் நமக்கு ஒத்துவருமா?

    புறப்படும்போது அப்படித்தான் இக்கிம். மனசெ கல்லாக்கிட்டுத்தான் வரணும். வாங்க இங்கெ சிரிக்கிறதுக்கு ஆள் இல்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s