இந்தத் தீபாவளியும் இசைதான்!

போன வருடம் , நம் ஜானகிராமனின் எழுத்தோடு வாழ்த்தினேன். இம்முறை, மனதைக் குளிரவைக்கும் சௌராஸியாவோடும் மழையோடும். ’அஸ்மா’வை சுற்றிக்கொண்டிருப்பதால் ஆபிதீன் படுபிஸி சார். எழுத நேரமில்லை. எனவே இது. Chandrakauns ராகத்தைக் கேட்டு சந்தோஷப்படுங்கள். இதே ராகத்தில், மர்ஹூம் ஹெச்.எம். ஹனிபா பாடிய ‘திருநபிப் பேரர் நாதரே’ என்ற பாடல் இருக்கிறது. அவையோர் அலறுவதற்காக அப்புறம் பதிவிடுவேன், இன்ஷா அல்லாஹ். சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நிஜமாகவே சொக்குதே மனம்…! :

***

Download (MP3)

6 பின்னூட்டங்கள்

 1. 25/10/2011 இல் 12:10

  எல்லா ராகமும் உமக்கு நல்லாவே பிடிபடுது. அஸ்மா கிட்ட இருப்பதாலா??

  • abedheen said,

   25/10/2011 இல் 12:40

   //கிட்ட இருப்பதாலா?// எட்ட இந்தாலும் பிடிப்பேங்னி!

 2. 25/10/2011 இல் 19:50

  கொஞ்ச நேரம் – 11 நிமிஷம் 43 வினாடி எங்கேயோ அழைக்கிட்டுப் போயிட்டீங்க ஆபிதீன்; சக்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிஞ்சது மாதிரி திவ்வியமா இருந்துச்சு; அமோகமா இருந்துச்சு – வாழ்க வளர்க…!

  Happy Diwali‏

  ஜாஃபர் நானா.

 3. தாஜ் said,

  25/10/2011 இல் 20:56

  சகோதரர்கள்
  அனைவர்களுக்கும்
  வித்தியாசம் காட்டும்
  என் கவிதையோடு
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  -தாஜ்

  வித்தியாசப்படு
  ———————–
  எல்லோரும்
  கத்திரிக்காய் வாங்கினால்
  நீ
  வெண்டைகாயாவது வாங்கு
  அவர்கள் இல்லை நீ
  எவருமில்லை எவரும்
  இயற்கையை மீறுவானேன்
  சுவை கிடக்கட்டும்
  ஆரம்பி.

  ****

  சகோதரர்களுக்கு
  மீண்டும்……..
  என் இனிய
  தீபாவளி வாழ்த்துக்கள்.
  -தாஜ்

  • 26/10/2011 இல் 12:44

   வெகுஜனம்:

   எல்லோரும்
   கத்தரிக்காய் ஒரு கிலோ வாங்கினால்
   நீ அதே கத்தரிக்காயை
   ரெண்டு கிலோ வாங்கி…….
   “வித்தியாசப்படு”
   அதிமுக்கியம்: விற்பவர்

   அதைவிடுங்க,
   இந்த வருஷ ஸ்பெஷல் ஸ்வீட்- சந்த்ரகாவ்ன்
   கரைஞ்சு உருகி உள்ளே போகுது
   அனுபவிப்போம்

   சகோதரர்களுக்கு
   தீபாவளி வாழ்த்துக்கள்!

 4. maleek said,

  26/10/2011 இல் 19:31

  தேன் சிந்துதே (சௌராஸியா) வானம்!


%d bloggers like this: