வணக்கம் நாகூர் ரூமி!

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும் – படே படே எழுத்தாளர்கள் பங்குகொள்ளும் – படைப்பிலக்கியப் பயிலரங்கில் (பார்க்க : இமேஜ் 1  & இமேஜ் 2 ) கலந்துகொண்டு , படைப்பது எப்படி என்று பாடம் கற்றுக்கொள்ளப்போகும் , மன்னிக்கவும் , ’சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்’ என்ற தலைப்பில் படுத்தவிருக்கும் நண்பர் நாகூர்ரூமிக்கு நல்வாழ்த்துகள். அவர் பேச்சு எப்டி இக்கிம்? சென்ற ஆண்டு ’தமிழன் டி.வி’யில் பேசியது போல – இஸ்லாம், இசை, இலக்கியம் என்று கலந்துகட்டி – இப்டி இக்கிம். ஓய், அஹ எல்லாருக்கும் நானும் தாஜும் சலாம் சொன்னதா சொல்லும்! 

கேட்க :

***

பயிலரங்கு பற்றிய விபரங்கள் அனுப்பிய சகோதரர் நூருல்அமீனுக்கு நன்றி.

9 பின்னூட்டங்கள்

 1. 18/09/2011 இல் 18:47

  சகோதரர் ரஃபி அவர்களின் பேச்சைக் கேட்டேன். தமிழ் பிறப்பால் from the birth செம்மொழிதான்; ஆதம்(அலை) பேசிய மொழி தமிழ் மொழிதான் இதை 20 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு பொறியாளர் எழுதியிருப்பதாக சொல்கிறார். அது இல்லெ அப்டீன்னு மறுப்பதா இருந்தா கொறஞ்சது பத்து வருஷம் உழைச்சுட்டுத்தான் சொல்லணும் என்கிறார்.

  அதை நான் மறுக்கவில்லை, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்? ஆதம்(அலை) யார்கிட்டே பேசினாஹ தமிழ்லெ? அல்லாஹ் ஆதம்(அலை) படைச்சு எல்லாத்தோட பேரையும் சொல்லிக்கொடுத்தாக சொல்றான், தமிழிலேயா சொல்லிக்கொடுத்தான் அல்லாஹ்?

  கொஞ்சம் படிச்ச ஆலிம்சாக்கள் இப்படித்தான் சொல்றாங்க: ஆதம்(அலை) பேசினது தமிழ்; ஹவ்வா(அலை) பேசினது அரபி அப்டீன்னு? எனக்கு தலை சுத்தலா இருக்கு, கொஞ்சம் தீர்த்து வைப்பீங்களா சகோதரரே..!

 2. 18/09/2011 இல் 19:53

  அன்புச் சகோதரருக்கு, சொற்பிறப்பியல்: வியத்தகு உண்மைகள் உலகத் தாய்மொழி தமிழ் (முதல் பாகம்) — என்ற தலைப்பில் எம்.ஆர்.எம். முஹம்மது ஹனீபா என்பவர் எழுதிய நூலைப் பற்றித்தான் நான் அந்த நேர்காணலில் குறிப்பிட்டேன் (அப்போது நூலின் பெயரும், ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை). ஆதம் நபியோடு அல்லாஹ் பேசினான் அல்லது பெயர்களைச் சொல்லிக் கொடுத்தான் என்பதற்கு மொழி தேவைப்பட்டிருககாது. இறைவனின் பேச்சுக்கு மொழி தேவையில்லை என்பது என் கருத்து. மொழி என்பதே மனிதர்களோடு தொடர்புடையதுதான். எனவே நூலின் கருத்துப்படி, ஆதம் நபி உலகில் இருந்த காலத்தில் மனைவி, மக்கள் போன்ற மற்ற மனிதர்களோடு பேசிய மொழி தமிழாக இருந்திருக்கலாம்.

 3. தாஜ் said,

  19/09/2011 இல் 08:32

  வணக்கம்… ரூமி!

  உங்களது பேச்சு என்பது
  இசைக் கச்சேரி மாதிரி!

  நான்,
  உங்கள் பேச்சில் மயங்கி
  விடிய விடிய
  உங்களை பேசவிட்டு
  கேட்டுக் கொண்டிருந்த போதும் சரி,
  இன்றைக்கு
  ஆபிதீன் பதிவில் பதியவிட்டிருக்கும்
  உங்களது இந்தப் பேச்சை
  கேட்டப் போதும் சரி…
  ‘இசைக் கச்சேரி’ என்கிற என் கருத்தில்
  இம்மியும் மாற்றமில்லை.

  *
  இந்தப் பதிவில்
  நேரம் குறைவு என்கிற
  காரணத்தினாலோ என்னவோ
  நீண்டு சொல்லத் தகுந்த
  பலவிசயங்களை
  ‘சட்டுப் புட்டு’ன்னு
  பேசித் தீர்த்திருக்கிறீங்க.

  குறிப்பாய்…
  இசை மேதை நாகூர் S.M.காதர் பற்றிய
  சங்கதிகள்
  நேரம் எடுத்துக் கொண்டு
  இந்த தமிழ்ச் சமூகத்திற்கு
  சொல்லவேண்டிய சங்கதிகள்.
  நீங்களே இப்படி
  ‘சிறுபான்மை சமூகத்தை’ச் சார்ந்த அவரை…..
  இப்படி இருட்டடிப்பு செய்தால் எப்படி?

  *
  இந்த…
  உலகின் முதல் மனிதனும்
  &
  இறைவனின் முதல் தூதருமான
  ஆதம் நபி அவர்கள்…

  (ஆண்டனின் ஹொதரத்தைப் பாருங்கள்…
  உலகில் மனிதர்கள்
  ஜனிப்பதற்கு முன்னமேயே
  மனிதர்களுக்கு…
  இறைவனின் செய்திகளை எடுத்துரைக்க
  நபி அனுப்பப்பட்ட துரிதம்
  எத்தனை முன் ஜாக்கிரதையான விசயம்?)

  பேசிய மொழி தமிழ் என்பதுப் பற்றி
  இன்னொரு 20 வருட ஆய்வாளர் ஒருவர்
  குறிப்பிட்டு இருப்பதில் புலகாயிதப்பட்டு
  எடுத்துரைத்திருக்கின்றீர்கள்!
  நிஜம் அப்படி என்றால்…
  சந்தோஷப்பட வேண்டிய ஒன்றுதான்!

  *
  தென் ஸ்ரீலங்காவில் காணும்
  மலைத் தொடரில்
  ஓர் மலை முகட்டிற்கு
  அல்லது
  அங்கே காணும் ஏதோ ஒரு குன்றிற்கு
  ஆதம் மலை என்று பெயர்!
  அங்கே…
  ஆதம் நமி அவர்களின்
  காலடிச் சுவடு இருப்பதாகவும்கூட தகவல்!

  (சில மலை ஸ்தலங்களில்
  மதம் சார்ந்த
  மூத்த முக்கியஸ்தர்களின் …
  காலடிச் சுவடு/
  நைந்துப் போன ஆடை/
  தலை முடி போன்றவை
  பாதுக் காக்கப்பட்டு பேணிவருவதாக
  ஒவ்வொரு மதமும்
  ஏதாவது ஓர் மலை ஸ்தலத்தை குறிப்பிடுகிறது.)

  அதாவது…
  இறைவன் ஆதம் நபியை
  படைத்தளித்த இடம்
  அந்த இடமென (ஆதஃம் மலை)
  ஸ்ரீலங்காவாழ்
  தமிழ் முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.
  கர்ணப் பரம்பரைக் செய்தியாக இது
  காலா காலமாக தொடர்ந்துப் பேசப்பட்டு வருகிறது!

  தமிழில் துடிப்பாக உள்ள
  ஆய்வாளர்கள் சிலர்
  அங்கீகாரமற்ற
  இன்னொரு செய்தியையும்
  சொல்கிறார்கள்
  அதாவது…
  பல ஆயிரம் வருடங்களுக்கு முன்
  தமிழகத்தின் தென்பகுதியில்
  லெமூரியா கண்டம் என்றொன்று
  இருந்ததாகவும்
  அப்போது
  தமிழ் மண்ணின் எல்லையும்
  ஸ்ரீலங்காவின் புவி எல்லையும்
  இணைந்திருந்ததாகவும்
  அந்தக் கண்டத்தில்
  தமிழ் பேச்சு மொழியாக(தாய் மொழியாக)
  இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
  ஏதோவொரு நூற்றாண்டில்
  லெமூரியாவை
  கடல் கொண்டதினால்
  அந்தக் கண்டம் சிதைவுக்கு
  உள்ளானது என்றும் அடித்து சொல்கிறார்கள்.

  So….
  இறைவனின்
  முதல் மனிதனும்
  முதல் நபியுமான ஆதம் நபி அவர்கள்
  ஸ்ரீலங்காவில் உள்ள ஆதம் மலையில்
  அவதாரம் கொள்ளப்பட்டதால்…
  அன்றைக்கு
  அங்கு வாழக்கில் இருந்த
  தமிழ் மொழியைத்தான் ஆதம் நபி பேசி இருப்பார் யென
  நம்மவர்கள் கணிக்கிறார்கள்!

  இந்த கணிப்புக்கான
  லாஜிக் இம்மியும் இல்லாது போனாலும்
  ஸ்ரீலங்கா தமிழ் முஸ்லீம்கள்
  ஆர்வத்தில் விடாது பேசி
  ஆதம் நபி,
  ஆதம் மலையில் அவதாரம் கொண்டதை
  சாதித்து வருகிறார்கள்.

  *
  ரஃபி,
  குறிப்பிடும்
  20-வருட ஆய்வாளரின்
  மூல ஆதாரம் இதுவாகத்தான் இருக்கும்.
  அந்த ஆய்வாளர் இல்லாமல்
  வேறு சில ஆய்வார்கள்
  இந்த மூல சங்கதியைப் பற்றி எழுதி
  நான் வாசித்திருக்கிறேன்.

  *
  ஏமன் நாட்டின்
  மேற்குகரையோறம்
  ஏடன் என்றொரு துறைமுகம் உண்டு.
  பிரசித்திப் பெற்ற நகரமும் கூட அது.
  ஆதம் நபி அங்கே அவதாரம் கொண்டதாக
  அந் நகர மக்களும் கூட சொல்லிவருகிறார்கள்.
  அதனால்தான் அந்த நகருக்கு ‘ஏடன்’ என்று
  பெயர் விளங்குவதாகவும் சொல்கிறார்கள்.
  இப்படி
  முதல் மனிதன்
  அவதாரம் கொண்ட இடம் குறித்து
  உலகில் இன்னும் சில இடங்களை
  குறிப்பிட்டு இன்னும் சில நாட்டினர் பேசுகிறார்கள்.

  *
  நான்
  விஞ்ஞான கண்டுப் பிடிப்புகளுக்கு
  செவி சாய்ப்பவன்.
  மனிதன்
  குரங்கில் இருந்து வந்ததை
  அது சொல்ல,
  முழுசாக ஐயமற நம்புபவன்.

  *
  ரஃபியிடம்
  உரிமையோடு
  ஒன்றை கேட்கிறேன்.
  “இருபது வருட ஆய்வை மறுக்கிறவர்கள்
  ஒரு பத்து வருடமாவது
  அது பற்றிய ஆய்வுக்குப் பிறகுதான்
  அதை மறுக்க வேண்டும் என்று சொல்வது…
  நடை முறை சாத்தியமான வாதமா?
  நீங்கள் மறுப்பதையும்/
  ஏற்பதையும்/
  அத்தனைக்கு
  தீர்கமாகவா
  காலவிரயப்படுத்திக் கொண்டா
  சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

  சரி…
  அந்த 20-வருட
  ஆய்வாளரின் கருத்தை
  குறைந்தப்பட்சம்
  எத்தனை வருட யோசிப்பிற்குப் பின்
  இப்படி தீர்க்கமாக
  டி.வி.க்குப் பேசினீர்கள்?

  -தாஜ்

 4. 19/09/2011 இல் 18:32

  அன்புள்ள தாஜ்…

  நீங்கள் சொல்லும், அல்ல… டார்வினின் பரிணாம கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குமட்டுமல்ல என் நண்பர்கள் ஒரு சிலரும் அப்படியே. !

  ஆய்வாளர்கள் அல்லது டார்வின் மனிதனின் முன்னோடி குரங்கு(Ape) என்கிறார்கள். அதாவது குரங்கிலிருந்து பிறந்தவன் என்கிறார்கள்.

  ஒரு உயிரினம் பரிணாம வளர்ச்சி அடையும்போது திடீரென்று முற்றிலுமாக மாறிவிடாது; படிப்படியாகத்தான் (மாறி) வளர்ச்சி அடையும். இதை நீங்கள் ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறேன்.
  அந்த வகையில் பரிணாம வளர்ச்சி அடையும் அந்த உயிரினம் முழு வளர்ச்சி அடைந்தபின் ஏற்கனவே இருந்த (ஆரம்ப நிலையிலுள்ள) உருவம் இருக்காது. புதிய ஒரு உருவம் ஏற்பட்டிருக்கும். பழைய உருவத்துடன் ஒப்பிடும்போது சில ஒற்றுமைகள் இருக்கலாம், ஆனால் பாரதூரமான வித்தியாசம் இருக்கும்.

  ஆனால்……… இங்கே முழுமைப் பெற்ற மனிதனும் இருக்கிறான் பழமை உருவம் கொண்ட Ape ம் (உருவ மாற்ற மில்லாமல்) இருக்கிறது. இது எப்படி சாத்தியம்….?

  இந்த கேள்வியை என் நண்பர் தன் ஆசிரியரிடம் கேட்டு அவர் முழி முழி என்று முழிச்சு “நீ சொல்வது சிந்திக்க வேண்டிய விஷம்” என்றார். (இதை உங்கள் சிந்தனைக்கும் விட்டுவிட்டேன்.)

  என் சிந்தனைக்கும் அகப்படவில்லை. ஆனால் மனிதன் எப்படி தோன்றினான் என்று கேட்காதீர்கள், என்னிடம் பதில் இல்லை.

  • தாஜ் said,

   19/09/2011 இல் 20:59

   //ஆனால்………
   இங்கே முழுமைப் பெற்ற
   மனிதனும் இருக்கிறான்
   பழமை உருவம் கொண்ட
   Ape ம் (உருவ மாற்ற மில்லாமல்) இருக்கிறது.
   இது எப்படி சாத்தியம்….?

   இந்த கேள்வியை
   என் நண்பர்
   தன் ஆசிரியரிடம் கேட்டு
   அவர் முழி முழி என்று முழிச்சு
   “நீ சொல்வது சிந்திக்க வேண்டிய விஷம்” என்றார். (இதை உங்கள் சிந்தனைக்கும் விட்டுவிட்டேன்.)//

   *
   அன்புடன்
   நாநாவுக்கு….

   உங்களது சந்தேகத்திற்கு
   பதில் சொல்லலாம்.
   முடியுமென நம்புகிறேன்.

   முதலில்…
   மாணவன்-ஆசிரியர்
   சங்கதியைப் பார்ப்போம்.

   மாணவனின் கேள்வி கரேட்…..
   மாணவர்களுக்கு
   அப்படித்தான்
   குய்தியான கேள்விகள் முளைக்கும்
   புத்திசாலியான மாணவன்
   இப்படியான கேள்விகளில் இருந்துதான்
   வெடித்துக் கிளம்புகிறான்.

   இங்கே…
   அந்த மாணவனுக்கு
   பதில் சொல்லமுடியாதுப் போன
   அந்த ஆசிரியரின்
   போதாமைதான் பரிதாபத்திற்குறியது.

   ஒரு போதமை ஆசிரியரை முன் வைத்து
   டார்வினின் பரிணாம கொள்கையை
   கேள்வியாக்குவதற்கு முன்
   நாமே கொஞ்சம்
   அதுக் குறித்து யோசிக்கலாம்.

   சற்று நேரம்…
   டார்வினையும்
   அவரது பரிணாம கொள்கையினையும்
   தூர வைத்துவிட்டு பேசலாம்.

   உலக வாழ்க்கையில்…
   உலக நடப்பில்…
   எந்த ஒன்றின்
   பரிணாமமும் கிளைக்கவில்லை என்றால்…
   அடுத்த அடுத்த நிலையை
   தொடர்ந்து நாம்
   பெறவில்லை என்றால்..
   நாமும் நம் வாழ்வும்
   சகிக்க முடியாத கர்ண கொடூரமாக
   விடியாது இருந்திருக்கும்.

   மாற்றம்தான்…
   அந்த பரிணாம வளர்ச்சித்தான்…
   நம்மை இன்றைய மனிதனாக..
   ந்ம்மைப் பார்த்து நாம்
   சந்தோஷம் கொள்ளும்படியாக
   நம்மை செழிக்க வைத்திறுக்கிறது.

   இப்போது டார்வினை அழைத்துக் கொள்வோம்.
   டார்வினின் பரிணாம கொள்கை
   குரங்கிலிருந்து மனிதன்
   ஜனித்ததை மட்டும் பேசவில்லை.
   மரம்/செடிக்/கொடி/புல்பூண்டு./புழுப் பூச்சி தொட்டு
   விலங்குகள் மனிதன் வரை பேசுகிறது.

   உலகில் நாம் காணும் அத்தனையும்
   பரிணாமம் கொண்டவைத்தான்!
   மனிதன் ஓர் மிருகம்(Man is a animal) என்கிறது
   அரசியல் விஞ்ஞான
   தியரி சார்ந்த
   முதல் பாடத்தின் முதல் வரி!
   அப்படியானால்….
   டிறிலியன் டிறிலியன் கோடிகள்
   வயதுக் கொண்ட
   லோகத்தின் முதல் உயிர்தான் என்ன?
   அது… பாசி.
   நீர் நிலைகளில் காணும் பாசிதான்
   அந்த முதல் உயிர்.
   குரங்கிற்கும் பல கோடிக்காலம் முந்திய
   நம் மூத்தக் குடி அது என்றால்
   மறுக்க முடியாது.

   *
   ஜாஃபர் நாநா ரசித்த
   அந்த துடுக்கான மாணவனின்
   கேள்விக்குள்
   இப்போ கட்டாயம் போவோம்.

   ‘பரிமாணம் கொண்டு
   குரங்கில்(Ape ) இருந்து
   மனிதன் தோன்றினான் என்றால்…
   பிறகு ஏன் இன்றைக்கும்
   குரங்கு(Ape ) இருக்கிறது?
   எப்படி இது சாத்தியம்?’
   என்பது கேள்வி.

   எல்லா குரங்கும்
   ஓர் மந்திரத்தில்
   திடுமென மனிதனாக மாறிவிடவில்லை.
   ஆங்காங்கே
   மாற்றம் கொண்ட
   சில எண்ணிக்கையிலான அந்த இனம்…
   படிப்படியாக மனிதனாக
   பரிமாணம் கொண்ட செயல் என்பது
   கோடிகளிலான காலம் கொண்டது.
   So,
   குரங்கும் மனிதனும்
   உலகில் இருக்க சாத்தியம் உண்டு.

   *
   ஒட்டு மரத்துக் கிளையையும்
   இன்னொரு ருசியுள்ள
   மரக்கிளையையும்
   ஒட்டிட்டு
   புதிய மா கன்றை உருவாக்கி
   அதில் வித்தியாசமான மா கனியை
   உண்டாக்கி சாதிக்கிற
   விவசாயின் தோட்டத்தில்
   அதன் பிறகும்
   புதிய மா கன்றுடன்
   பழைய இரண்டு மரங்களும்
   வழக்கமாதிரி
   இருக்கவே இருக்கும்.
   அதே பழைய காய்ப்பின் சுவையோடு!

   இதில்
   கேள்வியோ… வியப்போ…
   என்னவேண்டிக் கிடக்கிறது.
   -தாஜ்

 5. 20/09/2011 இல் 09:39

  அன்பு தாஜ்,
  மாலாய்காரர்களுடன் நம் ஊர் முன்னோர்கள் சிலர் நடத்திய ஹலாலான ஒட்டு உறவினால் மலாய் முகத்துடன் செந்தமிழ் பேசும் சிலரை நான் ஊரில் பார்த்திருக்கின்றேன்.

  எந்த எந்த ஒட்டுகள் குரங்கை மனிதனாக மாற்றியது. ஒட்டு மாங்காய் போல் ஒரு வருடத்துக்குள் முளைத்த புதிய இனமல்லவே மனிதன். இது பல தலைமுறைக்கு சன்னம் சன்னமாகத் தான் நடந்திருக்கும் என்றால். இந்த சங்கிலித் தொடர் ஏன் நின்று விட்டது. குரங்கிலிருந்து மனிதனாக மாறிக் கொண்டிருக்கும் இனம் எங்கே இருக்கிறது?

 6. தாஜ் said,

  20/09/2011 இல் 14:37

  அன்புடன்
  நூர்….

  உங்களிடம்
  சொல்லிக்காட்ட வேண்டிய
  செய்தி ஒன்று உண்டு.

  உங்களது வலைத் தளத்தில்
  என்னை
  ‘நார்த்திகவாதி’யாக
  உங்களது வாசகர்களுக்கு
  அறிமுகம் செய்திருக்கின்றீர்கள்.
  அது
  அத்தனைக்குச் சரியல்ல.

  எனக்கு கருத்துத் தெரிந்தப்
  பருவத்தில் இருந்து
  பெரியாரை வியப்புடன் பார்ப்பவன்தான்.
  என்றாலும்
  முழுமையாக அவரைப்
  பின் தொடர்ந்தவன் இல்லை.
  சரியாகச் சொன்னால்
  இயலாமல் போனது.

  நார்த்திகம் என்பது
  மிகப் பெரிய தெளிவும்
  மனத்துணிவும் கொண்ட விசயம்.
  எனக்கு
  அந்தத் தெளிவோ
  துணிவோ கிடையாது.

  என்னைப் பொருத்தவரை
  பெரியார் சொல்லிவிட்டார் என்பதற்காக
  அப்படியே அத்தனையும்
  ஒப்புக் கொள்பவனும் கிடையாது.

  ஒவ்வொரு கூட்டப் பேச்சின் முடிவிலும்
  பெரியாரும் அதைத்தான் சொல்வார்.
  ‘நான் சொல்கிறேன் என்பதற்காக
  யோசிக்காமல் அப்படியே ஒப்புக்கொண்டு விடாதே..
  மதம் சொல்கிறது என்பதற்காக
  மதவாதிகள் அதனைத்தான் செய்கிறார்கள்!
  நீங்களும் அப்படி நடக்கக் கூடாது.
  தீர யோசித்து முடிவு செய்யுங்கள்’ என்பார்.
  அப்படித்தான் நான்.
  என் அனுபவத்தில்
  எதிர்படும் சங்கதிகளை உரசிப் பார்த்து
  சரி என்பவற்றை ஏற்பவனாக மட்டுமே இருக்கிறேன்.

  எனக்குத் தெரியும்
  நான்…
  எத்தனையோ விசயத்தில்
  பெரியாரிடமிருந்து மாறுப்பட்டு இருப்பதை.

  அவருக்கு அசாத்திய தெளிவும்
  அதனை வெளிப்படுத்த
  திடமான மனோ பலமும் இருந்தது
  வாழ்வை அதற்காகவே செலவிட்டவர் அவர்.
  தவிர,
  அவருக்குப் பின்னால்…
  அவர் சொல்வதை கேட்க
  லட்சக்கணக்கில் மக்கள் திரண்டார்கள்.
  அவர் எது ஒன்றையும்
  சொல்ல முடிந்தது.
  நான் சாதாரணமானவன்.
  எனக்குப் பின்னால்
  என் சமூக நண்பர்கள் கிடையாது.
  ஏன்…
  என் குடும்பம் கூட
  நிற்க மாட்டார்கள்.
  நான்
  ஒவ்வொரு கணமும்
  யோசித்து யோசித்து பேசவேண்டிய
  பாதுகாப்பு அற்ற சூழலில் வாழ்பவன்.

  என்னால் எல்லாம்
  நார்த்திகம் என்கிற பேருண்மைக்குள்
  காலத்திற்கும் நுழைய முடியாது.
  நான் உங்களை மாதிரியானவன்
  என்றாலும்
  சற்றைக்கு மாறுப்பட்டவன்.
  மூட நம்பிக்கைகளில் இருந்து
  நிச்சயமாகத் தப்பித்தவன்.

  மதத்தின் கட்டு
  எனக்கு ஒரு நாளும் ஆகாது.
  சொர்க்கமும் நரகமும்
  என் சிந்தையில் இல்லை.
  வாழ்வென்பது ஒரு கொண்டாட்டம்.
  அதை அனுபவிப்பதே சுகம்.
  தவிர,
  எனக்கு எதிலும் சுதந்திரம் வேண்டும்.
  நான் தற்கொலை செய்துக் கொள்வதாக
  இருந்தாலும் கூட.

  *
  இப்போது…
  உங்களது ஐய்யப்பாட்டிற்குப் போகலாம்.

  ‘மனிதன் என்கிறப் பரிமாணம்
  பல தலைமுறைக்கு
  சன்னம் சன்னமாகத் தான் நடந்திருக்கும் என்றால்.
  இந்த சங்கிலித் தொடர் ஏன் நின்று விட்டது.
  குரங்கிலிருந்து
  மனிதனாக மாறிக் கொண்டிருக்கும் இனம்
  எங்கே இருக்கிறது?’

  மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்பதையும்
  அவனது மனைவியானவள்
  அவனது விலா எழும்பிலிருந்து
  படைக்கப்பட்டவள் என்பதையும்
  கேள்வியில்லாமல் ஒப்புக் கொள்ளும் நீங்கள்
  டார்வினின் பரிணாம கொள்கையை
  கேள்வி கேட்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
  எனக்குத் தெரியும்…
  ஆண்டவனின் சொல்லை
  ஏற்றுக் கொண்டிருப்பதினால்தான்
  டார்வினின் தியரியை மறுக்கின்றீர்கள் என்று.

  இன்றைய மனிதர்களின்
  செயல்பாடுகளை கவனிக்கும் போது
  குரங்கிலிருந்து மனிதன் தேன்றியத் தொடர்
  நின்றுவிட்டதாக யாரால் கருதமுடியும்?
  அவன் முழுமைப் பெற
  இன்னும் பல யுகங்கள் ஆகலாம்.
  அவனை முழுமைக் கொண்ட மனிதனாக மாற்றத்தான்
  உலகில் போதிக்கப்பட்ட கடவுள்களும்
  அவர்களது வேதங்களும்
  பெரும்பாடு படுகின்றன.

  மனிதன்
  தனது குரங்குத் தனத்திற்கு
  அவன் இறைவனிடம் அவ்வப்போது
  பாவமன்னிப்பு கோறுகிறானேத் தவிர
  முழுமையடைய மாட்டேன் என்கிறான்.

  நீங்கள்
  சில காட்டுவாசிகளையும்
  (பெரும்பாலும் ஆப்ரிக்க காட்டுவாசிகள்)
  வினோதமான தீவுகளில் வாழ்பவர்களையும்
  உற்றுக் கவனித்தால்
  அவர்கள்
  ஒரு ஆயிர வருடக் காலக்கட்டத்தில்
  மனிதனாக மாறியதை யூகிக்க முடியும்.

  நிச்சயம்
  வடிவுக் கொண்ட நீங்களும்
  அவர்களும் சமமாக மாட்டீர்கள்.

  மனிதன்
  மிருகங்களோடு உடலுறவு கொண்ட சமூகம்
  ஒரு காலக்கட்டத்தில்
  நம்மில் இருந்தது.
  வளர்ந்த நாகரீகம்
  அதை கபளீகரம் செய்து கொண்டு இருக்கிறது.
  என்றாலும் உண்டு.

  இன்றைக்கும்
  நம் இரத்தத்தில் ஊறிய
  அந்த மிருகத் தொடர்பு
  சமூகத்தில்
  வேறு வேறு வடிவங்களில்
  இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
  இதனாலாகும்
  உயிரின் பரிமாணங்கள்
  வித்தியாசப்படுவதும் யதார்த்தம்.

  ஆதியில்…
  வெவ்வேறு மிருகளுக்கிடையான
  உடல் உறவின் சங்கதிகளினால்தான்
  பல்வேறு புதிய உயினங்கள் தோன்றின.
  மனித உரு கொண்ட ஓர் மிருகமாகத்தான்
  ஆதியில்…
  நாம் நிர்வாணமாக அலைந்தோம்.
  உடுத்த…
  விதவிதமான ஆடைகள் பெருத்துவிட்ட
  இக் காலக்கட்டத்தில் இருந்துக் கொண்டு
  நீங்கள்
  கோடானக் கோடி வருடத்துக் கேள்வியை
  கேட்கிறோம் என்ற நினைவும் உங்களுக்கு எழவேண்டும்.
  நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொல்லான
  அந்த ‘அகக் கண்’ கொண்டே
  அத்தனையும்,
  அத்தனைக் காலக்கட்டத்தைத் தாண்டிப் போய்
  நுட்பமாய் யோசிக்க வேண்டும்.

  திரும்பத் திரும்ப
  குரங்கு-மனிதனைப் பற்றித்தான்
  உங்களிடம் இருந்து கேள்வி எழுகிறதே தவிர
  மரம் எப்படி வந்திருக்கும்?
  பூச்சி எப்படி வந்திருக்கும்?
  பல நூறு மிருகங்கள்
  எப்படி தோன்றிக்கும்? என்கிற மாதிரியான
  கேள்விகளே எழுவதில்லையே ஏன்?

  நீங்கள் நம்புவது மாதிரி
  ‘தோன்றுக’ என்றதும்
  தோன்றிய சங்கதிகளாக
  நிச்சயம் இருக்க முடியாது.
  அதற்கு விடைத்தேட
  அகக் கண்களையும்/ நுட்பம் கொண்ட சிந்தையையும்
  பரிணாமக் கொள்ளையை விட்டால்…
  யதார்த்த பதில்
  வேறு எதிலும் கிட்டவே கிட்டாது.

  அன்புடன்
  -தாஜ்

 7. 20/09/2011 இல் 20:07

  தாஜ்…….

  எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…..!
  பெரியார் எப்போ நார்த்திகம் பேசினார்?
  இப்பொ உங்கள்ட்டெ இருப்பது என்ன?
  நார்த்திகமா?
  சவுத்திகமா?
  இல்லை நார்த்தங்கா தீகமா?

  அது சரி….!
  மனுசனை விட்டுட்டு ஏன் மரத்துக்கு தாவிட்டிங்க?
  அதை கொஞ்சம் வெளக்குங்களேன்…….

  • தாஜ் said,

   20/09/2011 இல் 21:01

   நாநா…
   விடுங்க.
   இப்படியெல்லாம்
   குத்தம் கண்டுப்பிடிச்சா எப்படி?

   மனுசன்களைவிட
   மரம் ரொம்ப அர்த்தமா இருக்கு நாநா!
   பறவையா பொறந்திருக்கலாம்….
   போதாத நேரம்
   குரங்கா பொறந்தாச்சு.
   என்ன செய்ய?
   -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s