மைலாஞ்சி விவாதங்கள்

நண்பர் ஹெச்.ஜி. ரசூலின் ‘பிணம் தற்கொலை செய்தது’ கவிதையைப் படித்ததும் எனக்கு உயிர் வந்தது. ’மைலாஞ்சி’ சம்பந்தமாக (எனது கூகிள்பக்கங்களில்) முன்பு இருந்த கட்டுரைகளை இங்கே பதிவிடுகிறேன் – புதிய எதிர்வினைகளையும் சேர்த்து .  அவசியமான சில சுட்டிகளின் தொகுப்பு மட்டும்தான் இது.  இணைப்பு சரியாக வேலை செய்யாவிடில் தெரியப்படுத்துங்கள். முழுதாக இங்கேயே பிறகு பதிவிடலாம். நன்றி.

**

December 4, 2003
மைலாஞ்சி – பலவீனமும் பலமும் – நாகூர் ரூமி

**

December 11, 2003
நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம் – ஆசாரகீனன்

**

October 17, 2010
இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின் – ஹெச்.ஜி.ரசூல்

**

October 18, 2010
பகுத்தறிவின் விளிம்பில் – ரமீஸ் பிலாலி

**

November 14, 2010
புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து – ஹெச்.ஜி.ரசூல்

6 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  06/08/2011 இல் 17:20

  ஹெச்.ஜி. ரசூலின்
  ’மைலாஞ்சி’ கவிதைத் தொகுப்பைப் பற்றி
  எனது அபிப்ராயத்தை கூறினால்…
  அந்தத் தொகுப்பின் கவிதைகளை
  அதன் அர்த்தப் பாங்கை
  மெச்சுபவர்களுக்கு
  பிடிக்கவே பிடிக்காது.

  ஹெச் ஜி ரசூல்
  அவரது ஆக பெரிய
  மண்டைச் சூட்டுக் காச்சலின் போது
  ‘மைலாஞ்சி’ என்கிற
  வம்பு வளர்ப்பை
  எழுதி முடித்திருக்க வேண்டும்.

  கவிதைத் தொகுப்பாக
  அறியப்படும் ‘மைலாஞ்சி’
  நிச்சயமாக கவிதைகளின் தொகுப்பே அல்ல.
  மதத்தைச் சீண்டும்
  கோணங்கித் தனமான
  வசன நடை அது!.

  இப்படி…
  அவர்
  அதைக் கவிதையாக
  சொல்லிக் கொள்ளாமல்…
  அப்படி செய்யாமல் …
  கட்டுரையாக எழுதி இருக்கலாம்.
  என்னை ஒத்தவர்கள்
  அதனை
  உறுத்தல் இல்லாமலாவதுப்
  படித்திருக்கலாம்.

  இஸ்லாத்தைப் பற்றி
  இவ் வகை
  வம்பு வளர்ப்புகளை
  ‘திண்ணை’ பக்கங்களில்
  இந்து அடிப்படைவாதிகள்
  ஒருபாடு எழுதித் தீர்த்ததை
  திண்ணையின் செல்லப் பிள்ளை
  ஹெச் ஜி ரசூல் அறியாதவரா?

  (இஸ்லாத்தின்
  அடிப்படை குறைகளை சுட்டி
  சம்பவச் சுத்தமாக
  மட்டு மரியாதைகளோடு
  புனைப் பெயரில் ஒருவர் எழுதினார்.
  அவரது கருத்துப் பகர்வுகளும்
  ஹெச் ஜி ரசூலின்
  கருத்துப் பகர்வுகளும்
  ஒத்த நிலையில் இருப்பதாக
  நான் யூகிக்கிறேன்.
  அவர்தான் இவரா?
  திண்ணைக்காரர்களின் நட்புக்காக
  அவர் அப்படி எழுதினாரா? என்பதை
  வாசகர்களின் உணர்தலுக்கு விடுகிறேன்.)

  சரி,
  மதம் சார்ந்து
  கடவுளர்கள் சார்ந்து
  அதன் கோட்பாடுகள் சார்ந்து
  அதன் பூராண சம்பவங்கள் சாந்து
  அச்சு அசல் தெளிவோடு
  உலகில் எந்த சமயங்களாவது
  உண்டா என்ன?

  பெரியாரை பேச ரசூலுக்கு போதாது.
  பித்த நிலைக் கொண்டவர்களுக்கு
  தெளிவென்பது ஆகாது.
  அவர்
  தனது முற்போக்கு எல்லையில் நின்றே
  எனக்கு பதில் செய்யட்டும்.

  அவரது
  ‘மைலாஞ்சி’ கவிதைகளில்
  எதில் ஒன்றிலாவது…
  பொது சமன்பாடு என்கிற சிந்தனையில்
  பிற மதங்களில்
  மலிந்துக் காணப்படும்
  மதம் சார்ந்த
  கோட்பாட்டு கோளாறுகளை
  ஏன் சீண்டவில்லை?
  என்ன காரணம்?
  தூரப் பார்வை கொள்ளும்
  ஒருவனது பதிவு
  எல்லாவற்றையும் காணும்
  பார்வையாக இருக்க வேண்டும்.

  கருத்து மட்டத்தில்
  அவலம் என்பது…
  இஸ்லாத்திற்கு மட்டுமானதல்ல.
  சொல்லப் போனால்
  ஆக குறைவானது
  இஸ்லாமாகத்தான் இருக்கும்.

  மறுப்படியும்
  புறப்பட்ட இடத்திற்கு வருகிறேன்.
  ஹெச் ஜி ரசூல் தனது ‘மைலாஞ்சி’யை
  கவிதைத் தொகுப்பென்கிறார்.
  நான்
  அத் தொகுப்பில் உள்ளவைகளை
  கவிதையே இல்லை என்கிறேன்.
  அவரது ‘மைலாஞ்சி’ கவிதைகளை
  எந்த மட்டத்திலேனும்
  கவிதைகள்தான் யென
  அவர் நிரூபித்து விட்டாரேயானால்
  இனி நான்
  கவிதைகள் எழுதுவதையே விட்டுவிடுகிறேன்.

  -தாஜ்

 2. 06/08/2011 இல் 18:28

  பகுத்தறிவின் விளிம்பில் என்ற ரமீஸின் கட்டுரை மிக அற்புதமானது. அதற்கு பதில் சொல்வதாக அமைந்த ரசூலின் கட்டுரையில் ஒரு பதிலும் இல்லை. ரமீஸின் கேள்விகளுக்கு ரஸூலால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. ரஸூல் பற்றி ரமீஸ் சொல்வதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ரமீஸின் கட்டுரைகள் நூலாக வரும்போது இக்கட்டுரை நிச்சயம் இருக்க வேண்டும்.

 3. Malik M said,

  06/08/2011 இல் 19:33

  “நரக வாசலில் நின்று அழும் நபி” என்ற அவரது கவிதை, ஹெச்ஜியின் மனதினைப் பற்றித் தெளிவாக சொல்கிறது.

  இரு பொருள் பட பேசி, அதில் ஒரு பொருள் நபி அவர்களைக் கேவலப்படுத்துவதாக இருந்தால், அது பற்றி எனக்கென்ன வேண்டிகிடக்கு என்ற மனோபாவம் கொண்டவர் இந்த ஹெச்ஜி.

  அவர் திண்ணைகளில் எழுதும் கவிதைகளால் விகாரச் சிந்தனைகளும் அறுவருப்பு துர்நாற்றங்களும் வீச்செமெடுக்கின்றன.

  அவரது கட்டுரைகளும் இத்தகைய ரகம் தான். இஸ்லாம் சந்திரக் கடவுளை வணங்கும் ஒரு மதம் என்ற தனது கருத்தை திண்ணையில் பகிர்ந்து கொள்ளும் போது, நான் அது பற்றி எழுதிய விமர்சனம்: http://vilambi.blogspot.com/2010/02/blog-post.html
  (ஆனால் என்னப் பிரச்சனை என்றால், அவர் வெளிப்படையாக தான் நினைப்பதினைக் கூறுவதில்லை)

  • 07/08/2011 இல் 10:20

   அன்பு மாலிக், ’நரக வாசலில் நின்று அழும் நபி’ சம்பந்தமாக கவிஞர் ஜபருல்லா வேறுவித கருத்து – அது சிந்திக்கத்தக்க வரிகள் என்பதாகச் – சொல்வார். அவரை தொடர்புகொண்டு இதுசம்பந்தமாக எழுதச் சொல்கிறேன். எப்படியும் முப்பது வருடத்திற்குள் எழுதிவிடுவார்!

   தாஜ்பாய்க்கும் ரூமிபாய்க்கும் ஆபிபாயின் அஸ்ஸலாமு அலைக்கும்!

   • அனாமதேய said,

    04/01/2014 இல் 19:56

    a

 4. 08/08/2017 இல் 13:05

  ஹெச்.ஜி.ரசூல் – நினைவேந்தல்
  ரமீஸ் பிலாலி
  http://pirapanjakkudil.blogspot.ae/2017/08/blog-post.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s