சிராஜுல் மில்லத்

குறிப்பு : 19-01-1995-ல் ஜபருல்லாநானா எழுதியது.

***

சிராஜுல் மில்லத்-

என்
தந்தையின்
ஸ்தானத்தில் இருக்கும் தலைவர்…

என்
சிந்தனைக் கேணியின்
ஊற்றுக்கண்…

இவருடன் செய்த
கார்ப் பயணங்கள்
என்னுடைய
கல்லூரி வகுப்புக்கள்…

அவர் பேச்சுக்களே
என் –
பல்கலைக்கழகப் பாடங்கள்…!

இவர் –
சில சமயம்
என்மேல் கோபட்டதுண்டு
ஏர்முனை கீறுவது
மண்ணைப் பண்படுத்தத்தான்…
அவரின் –
கோப வார்த்தைகள்
என் –
நெஞ்ச நிலத்துக்கு
ஏர்முனை ஆனது…!

இவர் –
என்னைக் கண்டித்ததுண்டு
அவை
என் மன வயலுக்கான வரப்புகள்…!

இவர்
என் எழுத்துப் பயிருக்கு
கருத்து உரம் இட்டவர்

இவர் –
என் எண்ணவிளைச்சலுக்கு
பாராட்டு மழை பொழிந்தவர்…!

நான் –
இவரின் ’மணிவிளக்கால்’
வெளிச்சமானவன்…!

இவர் –
முஸ்லீம் லீக் ராஜாங்கத்தின்
முன்னுரிமை பிரஜை நான்…!

இவர் –
உண்ணும் மாத்திரைகளில்
ஏராள வண்ணங்கள் உண்டு
இவர் உள்ளம் மட்டும்
எப்போதும் வெள்ளை…!

***

நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119

1 பின்னூட்டம்

 1. தாஜ் said,

  25/07/2011 இல் 12:26

  ‘சிராஜுல் மில்லத்’ யென
  ‘தாய்’ முஸ்லீம் லீக்கின் தொண்டர்கள்
  (இன்றைக்கு ஏகப்பட்ட முஸ்லீம் லீக்
  நம்மில் உலா வருவதால், அதன் தாய்கழகத்தை
  ‘தாய்’முஸ்லீம் லீக் யென குறிப்பிட்டேன்)
  அன்புடன் அழைத்த
  ஜனாப். அப்துல் ஸமது பாய் அவர்கள் குறித்து
  நான் ஒன்றை இங்கே குறிப்பிட ஆசைப் படுகிறேன்.

  அரபியில் இருந்து தமிழுக்கு
  மொழி மாற்றம் செய்த பெரியவர் ஒருவரின்
  மகனார் ஸமது அவர்கள் என்றும்,
  கூறிய சிந்தைக் கொண்ட கல்விமான் என்றும்
  நான் கேள்விப்பட்ட என் சிறு வயதில்…
  அதனை நம்புவது கடினமாக இருந்தது.

  நான் துக்ளக் இதழை விடாது தொடர்ந்து
  வாசிக்கிற பருவத்தில்
  அந்த இதழில் வரும்
  அனைத்துப் பகுதிகளையும்
  விரும்பி வாசிப்பேன்.
  என்றாலும்…
  விமர்சனப் பார்வையில்தான் வாசிப்பேன்.

  துக்ளக் இதழில் ஒருதரம்
  எல்லா மூத்தத் தலைவர்களையும்
  ‘சோ’ நேர்முகம் கண்டார்.
  திராவிட கழக வீரமணி அவர்களை
  பேட்டிக் கண்ட ‘சோ’
  சர்வ சாதாரணமாக
  அவரை மடக்கி
  பல நேரம் அவரை பதில் சொல்ல முடியாத
  இக்கட்டில் நிறுத்தி
  ‘சோ’ சாதனைப் புரிந்தார்.

  இப்படி…
  துக்ளக் ‘சோ’விடம்
  வீரமணி தோற்றதில்
  மனதிற்குள் எனக்கு வருத்தம்.
  வீரமணி என் அளவில் அறிவாளி!
  இரண்டு,
  நான் வேறு பெரியாரை நேசிக்கிறவன்.
  ‘சோ’வின் சாதூர்த்தியமான கேள்விகள் மீதும்
  ‘சோ’வின் மீதும் மிகுந்த கோபம் தளைத்தது.

  அடுத்த வாரம்..
  அப்துல் ஸமதை ‘சோ’ நேர்காணல் கண்டார்.
  ‘சோ’ சீண்டிய எல்லா கேள்விகளுக்கும்
  மிகச் சர்வ சாதாரணமாய்
  ஆனாலும் தீர்க்கமாய்
  பதில் அளித்து
  ‘சோ’வை/அவரது லாஜிக் கேள்விகளை
  ஒன்றுமில்லையென ஆக்கினார் ஸமது பாய்!

  மாட்டின் கறியை திண்பது குறித்து…
  ‘சோ’ கேள்வி எழுப்பினார்.
  “முஸ்லீம்கள் மட்டும் மாட்டுக் கறியை
  தின்கிறார்கள் என்றுவிட முடியாது
  பெரும்பாலும் தமிழகத்தில்
  மாட்டுக் கறியை விரும்பி சாப்பிடும்
  முஸ்லீம்கள் குறைவு.
  பொதுவாக..
  சமூகத்தில் பலதரப்பட்ட இனமக்களும்,
  குறிபாய்
  ஏழை எளிய மக்கள்
  அதன் விலை மலிவு என்கிற காரணத்தினால்
  விரும்பி சாப்பிடுவதாக அறிகிறேன்.” என்றார்
  அப்துல் ஸமது அவர்கள்.

  ‘சோ’
  அடுத்து ஸமதை லாஜிக்காக
  கேள்வியில் மடக்க எண்ணி…
  (இப்படித்தான் பல தலைவர்களிடமும் மடக்கினார்)
  “அப்போ விலைக் குறைவென்றால்
  நீங்கள்(முஸ்லீம்கள்)
  எதுவேண்டுமானாலும் சாப்பிடுவீர்களா?”
  என்று கேட்டார்.

  உடனே ஸமது பாய்…
  “விலை குறைவு என்பதற்காக
  நீங்கள் எதையேணும் வாங்குவீர்களா யென
  எனக்குத் தெரியாது….
  நாங்கள் எதை உண்ணவேண்டும்
  எதை உண்ணக் கூடாது யென
  எங்கள் இறைவன்
  எங்களுக்கு போதித்திருக்கிறான்.
  அதன் படிக்குத்தான்
  நாங்கள் நடக்க வேண்டும்.
  நடக்கவும் செய்கிறோம்”
  என்றார் ஸமது பாய்!

  ஜனாப் அப்துல் ஸமது அவர்கள்
  கல்விமான்தான்
  அறிவாளியாகத்தான் இருக்க முடியும்.
  மனதளவில் ஒப்புக் கொண்டேன்.
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s