நான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி

முதலாவதாக – உனது வாழ்க்கை என்பது என்ன, அதில் வாழ்வது என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? நான் கேலி செய்யவில்லை. சாதாரணமாகவே கேட்கிறேன். உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை என்னவென்று அறிந்துகொள்ள நீங்கள் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். உங்கள் தந்தை, உங்கள் தாய், உங்கள் சமூகம், உங்கள் ஆசிரியர், உங்கள் அண்டைவீட்டார், உங்கள் மதம், உங்கள் அரசியல்வாதி ஆகியவர்கள் உங்களிடம் இதுதான் வாழ்க்கையென்று கூறுவது – உங்கள் வாழ்க்கை அல்ல. ‘இல்லை’ என்று கூறவேண்டாம். அது அப்படித்தான். அரசியல், சமய, சமுதாய, பொருளாதார, சீதோஷ்ண பாதிப்புகளால் ஆனதுதான் உங்கள் வாழ்க்கை. இந்த அத்தனை பாதிப்புகளும், ஒன்றாக உங்களிடம் குவிந்துள்ளது. நீங்கள் சொல்கிறீர்கள், ‘அதுதான் வாழ்க்கை, அதைத்தான் நான் வாழ வேண்டு’மென்று. எப்பொழுது நீங்கள் இந்த எல்லா பாதிப்புகளையும் புரிந்து கொள்கிறீர்களோ, அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையை வாழ முடியும். மற்றும் அதைப் புரிந்துகொண்டதிலிருந்துதான், நீங்கள் உங்கள் வாழ்வில் சிந்திக்கவும் வாழவும் துவங்குகிறீர்கள். பின் ’எப்படி நான் என் வாழ்க்கையை வாழ்வது’ என்று கேட்க வேண்டிய அவசியமில்லை. பின் நீங்கள் வாழ்கிறீர்கள். ஆனால் முதலில் நீ எல்லா பாதிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகம் உங்கள் மேல் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அரசியல் பேச்சுக்கள், அரசியல்வாதிகள், சீதோஷ்ணம், உணவு, நீ படிக்கும் புத்தங்கங்கள் இவைகள் உங்களை எந்த நேரமும் பாதித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட முடியுமா என்று நீங்கள் கேட்க வேண்டும். இது மிகக் கடினமான விசாரணைகளில் ஒன்று. கேட்டு, ஆராய்ந்த பின் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடையதோ அல்லது மற்ற எவருடையதோ அல்லாத ஓர் வாழ்வு முறையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். பின் அதுதான் வாழ்க்கை. பின் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இவை அனைத்திலும் எது முக்கியமானது? முதலில் இயந்திர இயல்பான வாழ்வை வாழக்கூடாது. இயந்திர இயல் வாழ்க்கை என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? யாரோ ஒருவர் உன்னைச் செய்யும்படி கூறியதைச் செய்வது, அல்லது ஒன்றைச் செய்வது சரியானது என்று நீ உணர்ந்து செய்வது. ஆகையால் அதை நீங்கள் திரும்பத் திரும்பச் செய்வதால், படிப்படியாக உங்கள் மூளை, உங்கள் உள்ளம், உங்கள் உடல் மந்தமாகி, கடினமாகி அறிவற்று போகிறது. அதனால் ஒரே மாதிரியான நடைமுறையில் வாழாதீர்கள். நீங்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி இருக்கலாம். நீங்கள் படித்துத் தேர்வில் தேறவேண்டி இருக்கலாம். ஆனால் அவைகளை புத்துணர்வோடும், ஆர்வத்தோடும் செய்யுங்கள். நீங்கள் கற்கும்போதுதான், உங்களால் புத்துணர்வுடன், வீரியத்துடன் அதைச் செய்ய முடியும். மேலும் நீங்கள் கவனத்துடன் இராவிட்டால் உங்களால் கற்க முடியாது.

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ’ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவிப்போம்’ புத்தகத்திலிருந்து (கே.எஃப்.ஐ வெளியீடு)

**

நன்றி : ரா. ஸ்ரீனிவாஸன், தினமணிசுடர், தாஜ்

**

மேலும்… :  ஜே கிருஷ்ணமூர்த்தி –  பிரமிள் ( நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை / 1991)

10 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  23/07/2011 இல் 13:52

  ஜே.கிருஷ்ண மூர்த்தியை
  எம் மக்கள் படிக்க வேண்டும்.
  அவரது
  மொழியின் வசீகரம் வேண்டியாவது
  அவரை
  படிக்க வேண்டும்.
  நம்மை இலேசாக்கி
  இலையாக்கி
  கற்றில்
  மிதக்கவிடும்
  அவரது வல்லமையை
  கொஞ்சமேணும்
  அனுபவிக்க வேண்டும்.
  ஞானத்தின் கதவுகளை
  சற்று திறந்துப் பார்ப்பதென்பது
  நிச்சயம்
  தவறாகிவிடாது.
  -தாஜ்

 2. 23/07/2011 இல் 15:54

  தாஜை நான் வழிமொழிகின்றேன். அவரது உபதேசங்களின் (இந்த வார்த்தையை ஜே.கே ஆட்சேபிப்பார். ) சாரமான “அறிந்தவற்றிலிருந்து விடுதலை” நுலையாவது அனைவரும் படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் Freedom from Known.

  • தாஜ் said,

   23/07/2011 இல் 20:53

   //அவரது உபதேசங்களின்
   (இந்த வார்த்தையை
   ஜே.கே ஆட்சேபிப்பார். ) //

   நூருல் அமீன்
   மிகச் சரியாக
   குறிப்பு வைத்திருக்கிறார்.
   உபதேசங்கள் என்கிற சொல்
   ஜே.கே.க்கு
   பிடிக்காத ஒன்றுதான்.

   சென்னை அடையாரில்
   அவர் தங்கி இருக்கும்
   அத்தனை நாளிலும்
   முன் இரவில்
   அவர்
   தன்னைத் தேடிவந்தரும்
   அபிமானிகளோடு
   அமர்ந்துப் பேசக்கூடியவர்.
   அதனை ஒரு நாளும்
   ‘உபதேசம்’ என்று குறிப்பிடமாட்டார்.
   நண்பர்களோடான
   அல்லது
   மக்களோடான
   கலந்துரையாடல் என்றே குறிப்பிடுவார்.

   உபதேசமற்று
   மக்கள் தங்களுக்குள்ளாகவே
   தேடி அடையும்
   நிஜங்களையே/ அந்தவகை ஃபிடத்தையே
   அவர் வரவேற்பவராக இருப்பார்.

   நன்றி
   அமீன்

   -தாஜ்

 3. 23/07/2011 இல் 23:34

  சரி சரி..
  எல்லாத்தையும் வெவரமா படிச்சு முடிச்சுட்டு ………….,
  யாரோ எப்பவோ சொன்னதை கண்ணை மூடிக்கிட்டும், யாரோ ஒருத்தர் இப்ப சொல்றத கண்ணைத் தொறந்துகிட்டும்,

  அப்படியே பின்பற்றுவோமாக!!!

 4. 24/07/2011 இல் 10:38

  அன்புள்ள மஜீத்!
  அகவெளிச்சம் பெற்ற மகத்தான மானிடர்களின் கருத்துகளில் conditioning என ஜே.கே சொல்லுவார் அந்த சூழ்நிலையின் பதப்படுத்துதல், தன் அனுபவங்களின் colouring இன்னும் பிற பிரமை phantasy இவைகளின் பாதிப்பு 100% நீங்கி விடுவதில்லை.
  வஹி என்பது மனித மனதின் குருக்கீடுகள் அற்ற நிலையில் மனதை மனதை படைத்தவனால் உள்ளுணர்வாக வழங்கப்படுவது. அந்த வழிகாட்டுதல்கள் தான் வேதங்கள். மனிதனால் உய்துண்ரப் பட்ட கருத்துகள் எவ்வளவு உன்னதமாயினும் அது வேத வெளிச்சத்திற்கு முரண்படாதவரை பின்பற்றத் தக்கவைதான்.
  ஜே.கேயாகட்டும் இன்னும் பிற ஞானிகளாகட்டும் அவர்களின் கருத்துகளின் சாரம். நான் மாணவனாய் என்றும் கற்று வரும் ஞானத்தை இன்னும் உறுதிப்படுத்துவதாகத் தான் உள்ளது நண்பரே!
  ஆக இங்கே பின்பற்றுதல் என்பது கண்களை மூடிக் கொண்டல்ல. உள்ளும் புறமும் விழிப்புணர்வுடன் செய்யப்படும் ஒன்று.
  அன்புடன்,
  அமீன்

 5. 24/07/2011 இல் 17:05

  நன்றி அமீன்,

  நான் ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொன்னதுபோல், நாம் யாரும் மாறப்போவது இல்லை.

  நாம் எல்லோரும் (மாற்று மத நண்பர்களும் இதில் அடக்கம்) அவரவர் சிந்தனைகளினூடே பயணித்து இணக்கமாக வாழ முயற்சிப்போம்.

  அவரவர் நம்பும் இறைவர்கள் அவர்களுக்கு நிம்மதியளிக்கட்டும்;

  • தாஜ் said,

   24/07/2011 இல் 19:41

   அன்புடன் மஜீத்
   நீ சொல்லியிருப்பது சரி.

   மனிதன் மாறுவது
   அத்தனை எளிதல்லதான்.

   ஆனால்….
   நாம் எத்தனை
   வளமான சிந்தனைகளை
   தவறவிட்டு
   வளர்ந்திருக்கிறோம்
   என்கிற
   கணக்கெடுக்கவேணும்
   இப்படியான வாசிப்பு
   பயன்தரும்.

   தவிர,
   ஜே.கே.யின்
   முன் நிகழ்வுகள்
   ஏக வித்தியாசம் கொண்டது.
   கிருஷ்த்துவ மதத்தின் தளகர்த்தர்கள் பலர்
   உலக நாடுகள் பலவற்றிலும்
   ஜே.கே.க்கு இன்ஸ்டிடூசன் ஏற்படுத்தி
   அது தொடர்ந்து இயங்க
   நிறைய சொத்துக்களை
   அந்த அமைப்புகளின் மீது எழுதிவைத்து
   ஜே.கே.வை இறைத் தூதுவராக கண்டு
   அவரது சொற்பொழிவை கேட்க
   அவரை பின் தொடர்ந்தனர்.

   ஜே.கே…..
   ஒரு காலக்கட்டத்தில்
   அத்தனையையும் உதறிவிட்டுவிட்டு
   நான் அப்படியானவனெல்லாம் இல்லை.
   நான் இன்னொரு சாதாரணமானவன் என்று
   அங்கிருந்து/ அந்த சுகப் போகங்களில் இருந்து
   வெளியேறி
   Freedom Life-யை பற்றி
   அவரது காலம்வரை
   மக்களிடம் பேசியவர்!

   இயற்கையை அதிகத்திற்கும் அதிகமாக நேசித்தவர்!
   ஒரு நாள் மிகச் சாதாரணமாக
   மரத்திலிருந்து இலைப் பழுத்து விழுவது மாதிரி
   உயிர்ப் பிரிந்தார்!.

   இன்னும் இப்படி
   ஜே.கே.யைப் பற்றி
   சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

   இயற்கையை நான் நேசிப்பதும்/
   ஒன்றின் நுட்பத்தில்
   இன்னும் இன்னுமென நான்
   நுட்பம் தேடி அலைவதும்
   ஜே.கே.விடம் நான் பெற்ற கொடை..

   இன்றுவரை
   அதைச் சரியென்றே தொடர்கிறேன்.
   சந்தோஷமாக.
   -தாஜ்.

 6. shivam said,

  24/06/2013 இல் 19:23

  வணக்கம்

  கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
  நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், …. இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
  இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80

  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

 7. R.MANIKKAVEL said,

  13/02/2014 இல் 14:27

  நன்றி திரு.ஆபிதின்

 8. யூஸஃப் குளச்சல் said,

  13/02/2014 இல் 21:47

  வெறுமையைத் தேடுவதும், விட்டு விடுதலையாக நினைப்பதுவும் செயல்பாடுகள்தான். ரமணரின் கண்டிஷனிங் சொற்களற்ற வெறுமை. போதிக்க இயலாத அனுபவம். மரம்போன்ற மனநிலை அபூர்வ கணங்களில் வாய்க்கக் கூடும். மீண்டும் அறிவுத் தேடல்கள்… எண்ணங்கள்… கண்டடைதல்கள். மனத்தின் தோல்விகளை மறைக்க வெற்றிக் கூச்சல்கள். மீண்டும் ரணமாகும் மனங்கள். மீண்டும் அருமருந்து போதனைகள்… மறுபடியும் பிறக்காதவர்கள், சிரமங்களுடனாவது மகிழ்ச்சியாக வாழ்ந்துத் தீர்த்து விடலாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s