யாருக்காக அழுதான்? – ஜெயகாந்தன்

Thanks : MrDearkutti

1 பின்னூட்டம்

  1. தாஜ் said,

    17/07/2011 இல் 08:28

    கருத்து தெரியாதப் பருவத்தில்
    கலைப்படங்களை
    தேடிப் பார்த்திருக்கிறேன்.
    அப்படி பார்த்த படங்களில்
    ஜெயகாந்தனின்
    ‘யாருக்காக அழுதானும்’ ஒன்று!

    முடிவெட்டும் கடைகளில்
    மக்கள் பத்திரிகைகளைப் படிக்கும்
    வழக்கம் ஒன்று
    நடைமுறையில் இருந்தக் காலகட்டத்து
    இளைஞனாக நான் இருந்தப்படியால்
    நானும் அப்படியே
    இளமையில்
    அறிவைத் தேடியவன்.

    வாசிக்கும் பத்திரிகைகளில்
    வியந்து பேசும் செய்திகளின் மீது
    ஈர்ப்பு அதிகரிக்க
    அதை நாடி தேடி அலைந்ததை
    மறக்க முடியாது.

    அப்படியொரு வியப்பு
    ஜெயகாந்தன் பேரிலும்
    யாருக்கா அழுதான் பேரிலும்
    கிளைக்க
    எங்க ஊர்
    ‘ஜூபிடர்’ (இப்போதைய ராஜா)திரையரங்கில்
    அப்படம் திரையிட்ட
    அன்று முதல் ‘ஷோ’ பார்த்ததும்
    எட்டு மணிக்கெல்லாம் படம் விடப்பட்டதும்
    என்னைச் சேர்த்து
    பத்து பேர்களுக்கு குறைவானவர்களே
    அப்படத்தைப் பார்த்ததும்
    ‘சகெண்ட்’ ரத்து என்கிற அறிவிப்பு
    பலகை வெளியே வைக்கப் பட்டிருந்ததும்
    நினைவில் நிழலாடுகிறது.

    படம் மனதில் பதிந்த ஒன்று
    மறக்க முடியாது.
    நாகேஷ் பிரமாதமான நடிப்பையும் மறக்க முடியாது.
    படத்தின் பல காட்சிகள்
    நெகட்டிவாகவே ஓடும் யுக்தியை
    ஜெயகாந்தன் உபயோகித்து இருந்ததின்
    பெரிய அர்த்தத்தை
    அன்றும் சரி/ இன்றும் சரி விளங்கவில்லை.

    சத்திய ஜித்ரே
    கல்கத்தாவில் பெயர் போட்ட நேரம் அது.
    ஜெயகாந்தன்
    தமிழகத்தில்
    அப்படியொரு பெயர் போட விரும்பினார்.
    அது நடக்கவில்லை.

    என் கணிப்பின்படிக்கு
    அதற்கு தகுதியானவர்தான் ஜெயகாந்தன்
    ஆனால் அவரிடம் நிறைந்திருந்த
    தான் என்கிற செறுக்கும்
    ஒன்று பாக்கியில்லாத
    தனி மனித சேட்டைகளும்
    அவரை அவர் எதிர்பார்த்த
    அந்தத் தகுதிக்கு கொண்டு சேர்க்கவில்லை.

    சத்திய ஜித்ரே
    உலகலாவிய பெயர் கொண்டார் என்றால்
    அவர்
    தான் கைக் கொண்டதை மட்டுமே
    சிந்தித்தார்/ செயல்பட்டார்.
    தவிர
    ஜெயகாந்தனைவிட
    கலை நுட்பத்தில் பன்மடங்கு உயர்ந்தும் இருந்தார்.
    -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s