நிக்காஹ்

’காக்கா’ என்று என்னை அழைக்கும் (இப்படி எல்லாருமே கூப்டா நான் யார கூப்டுறது நானா?!) அன்புச் சகோதரர் நூருல்அமீனின் செல்வப்புதல்விக்கு இன்று (22-5-2011) நிக்காஹ் . மணமக்கள் N. நிலோஃபர் முஸ்தாகியா – A. முஹம்மது ரில்வானுல் ஹஸன் ஃபைஜி B.Com., ACCA-யை வாழ்த்தி அவர்களின் நல்வாழ்விற்கு துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள். விருந்து உபசரிப்பு நாகை முஸ்லிம் சமுதாயக் கூடத்தில், இந்திய நேரம் பகல் 12 மணிக்கு . சமயம் இருக்கிறது. கிளம்புங்கள்!

**

எந்த மனிதனுக்கு நான்கு தன்மைகள் கொடுக்கப்பட்டதோ அவனுக்கு இரு உலகை விட சிறந்ததை கொடுக்கப்பட்டது என அண்ணலார் கூறினார்கள்.

1. எல்லா நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு.
2. எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய உள்ளம்.
3. பொறுமையையும் அமைதியையும் தனதாக்கிக்கொண்டிருக்கும் சரீரம்.
4. மூஃமினான சாலிஹான மனைவி.

இந்த நான்கும் கொடுக்கப்பட்டவன் மிகப்பெரிய பாக்கியசாலியாவான்.

– தில் நவாஜ் ஃபைஜி ஷாஹ் நூரி

5 பின்னூட்டங்கள்

 1. 22/05/2011 இல் 10:39

  நானா ஒரு ஃபிளேஷ் பேக்.. நான் ஹஜ்ரத் வீட்டிலேயே தங்கும் காலமது..

  ஹஜ்ரத் அவர்களிடம் கவிஞர் சலீம் நானா தனது மகனாரின் திருமண பத்திரிக்கையை நீட்டினார்கள்.

  பேச்சுக்கிடையில், ஹஜ்ரத் அவர்கள் சலீம் நானாவிடம் சொன்னது, ‘நீங்களும் நிக்காஹ்ன்னு தான் போட்டிருக்கீங்க.. அது நிக்காஹ் இல்ல.. நிகாஹ்..”

  ————

  மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  • 22/05/2011 இல் 11:35

   //’அது நிக்காஹ் இல்ல.. நிகாஹ்.’// இருக்கலாம் இஸ்மாயில். ஆனால் ‘NIGAH’ என்று படிக்க வாய்ப்பு இருக்கிறதே. எனவே ‘நிக்காஹ்’ என்று அழுத்தமாக எழுதுவதே சரி என்று நினைக்கிறேன். அரபில ஒண்ணு சொல்ல முடியலேப்பா! சரி, ஹனிபாஅண்ணன் பாடிய திருமண வாழ்த்துப் பாடலைக் கேட்போம் (கச்சேரிப் பாடலை பிறகு பதிவிடுகிறேன்). சுட்டி : http://www.tamilislamicaudio.com/audio/nagoorhanifa/Vazgha_Mana_Makkal_NE.mp3

 2. 22/05/2011 இல் 11:31

  மணமக்களுக்கு எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்!

 3. 23/05/2011 இல் 20:51

  மணமக்களுக்கு மனமுவந்த நல் வாழ்த்துகள்

 4. Noorul Ameen said,

  27/05/2011 இல் 16:48

  Thanks for All.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s