மன இயக்கத்தின் பங்கு – ஸ்ரீ பகவத்

ஷாஹூல்ஹமீது என்ற சகோதரர் சில மின்நூல்களை சமீபத்தில் அனுப்பிவைத்தார்-  ‘Please read the books with openness’ என்ற வேண்டுகோளுடன். மனத்துயரங்களிலிருந்து விடுபட யோசனை சொல்லும் மின்நூல்கள். அவ்வளவு துயரங்கள் எனக்கு என்று அறிந்து வைத்திருக்கிருக்கிறாரே மனுசன்! ஸ்ரீ பகவத் அவர்கள் எழுதியது. உடனே பதிவிடவேண்டுமே என்று இன்னொரு துயரம் சூழ்ந்துவிட்டது! அதிலிருந்து ஒரு கதையைப் பதிவிடுகிறேன். பழைய கதைதான், ஆனாலும் பலருக்கும் உதவக்கூடும். முழு மின்நூலையும் டவுன்லோட் செய்வதற்கான சுட்டி /  முகவரியை கீழே கொடுத்திருக்கிறேன். ஞானம் பெறுவதற்கு பெருமுயற்சி தேவையில்லை என்பதை அறிந்த வழக்கறிஞர் ஸ்ரீ பகவத் , ஆன்மீக நாட்டம் உடையவர்களுக்கு ஞானத்தை – அதை அடையும் வழிமுறையை எளிமையாக விளக்குவதாக அரங்கநாதன் ஐயா (தமிழாசிரியர் (ஓய்வு) சொல்கிறார். இன்று பலரும் பல ஆன்மீக அமைப்புகளில் ’ஏதோ கிடைக்கப்போகிறது’ என்று ஈடுபட்டு ஏமாற்றமடைந்து கொண்டிருக்கும் வேளையில் உதித்துள்ள சரியான புத்தகம் இது புரிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு. (நான் இன்னும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!) என்று சொல்லும் Retr. Executive Engineer திரு K. ஜெயகோபால் B.E. சொல்வதையும் நான் புரிந்து கொள்கிறேன் 🙂

ஆபிதீன்

**

மன இயக்கத்தின் பங்கு – ஸ்ரீ பகவத்

ஒரு விவசாயி தனது மாடுகளை ஏரில் பூட்டி தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அந்த மாடுகளுக்குச் சற்று வயதாகிவிட்டதால் அவற்றைக் கொடுத்துவிட்டு வேறு மாடுகள் வாங்கலாமென்று விலை பேசி வந்தார். பலரும் மாட்டைக் குறைந்த விலைக்கே கேட்டு வந்தார்கள்.

அவர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது அந்த வயலை ஒட்டிய பாதை வழியாக ஒரு வழிப்போக்கர் சந்தைக்குப் போய்க்கொண்டிருந்தார். அது சந்தைக்குப் போகும் சரியான வழிதானா என்பதில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக விவசாயியிடம் “இந்த வழியாகப் போனால் சந்தைக்குப் போய்விடலாமா?” என்று கேட்டார்.

விவசாயி அந்த வழிப்போக்கரிடம், ”அதெல்லாம் கட்டாது” என்று கோபத்துடன் கூறினார்.

விவசாயி பேசியது சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருப்பதுபோல் வழிப்போக்கருக்குத் தோன்றியது. அந்த விவசாயிக்குக் காது சரியாகக் கேட்காது என்ற முடிவுக்கு வந்து வேறு எவரிடமாவது விசாரித்துக் கொள்ளலாம் என்று வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து போய்விட்டார்.

உண்மையில் விவசாயிக்குக் காதுகளில் எந்தக் குறையும் கிடையாது. அவர் மனதில் மாட்டை விற்பதைப் பற்றிய கவலையே இருந்து வந்ததால் வழிப்போக்கர் அவரிடம் வழி கேட்டது, மாட்டைக் குறைந்த விலைக்குக் கேட்பதுபோல் தோன்றியது. ஆகவே ‘அதெல்லாம் கட்டாது’ என்று கூறி அனுப்பிவிட்டார்.

அவருடைய மனைவி அவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார். மனைவிக்கும் ஒரு மனக்குறை இருந்துவந்தது. அவர் எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து சமைத்தாலும் அவரது கணவரான விவசாயி ‘சாப்பாட்டில் ருசியில்லை’ என்று அடிக்கடி கூறிவந்தார்.

அன்றும் அவர் கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும் வழிப்போக்கரைப் பற்றி, ”மாட்டைக் குறைத்துக் கேட்டான். அதெல்லாம் கட்டாது என்று கூறிவிட்டேன்” என்று கூறினார்.

அதற்கு அவர் மனைவி, ‘நீர் என்றைக்குத்தான் நல்லா இருந்தது என்று சொல்லியிருக்கிறீர்?’ என்று கோபத்துடன் கேட்டுவிட்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார்.

அவருக்கும் காது செவிடு கிடையாது. ஆனாலும் தனது கணவர் கூறியது தனது சமையலைப் பற்றித்தான் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, ‘நீர் என்றைக்குத்தான் நல்லா இருந்தது என்று சொல்லியிருக்கிறீர்?’ என்று கேட்டிருக்கிறாள்.

அவருடைய வீட்டின் வாசலில் அவருடைய மகள் உட்கார்ந்திருந்தாள். திருமண வயது கடந்துபோய்க் கொண்டிருந்தும் அவளுக்கு இன்னும் சரியான மாப்பிள்ளை அமையவில்லை. அவள் வயதுடைய அவளுடைய தோழிகள் அனைவரும் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கின்றனர்.

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையுடன் உட்கார்ந்திருந்த அவளிடம் வந்த தாய், தான் கொண்டுபோன சாப்பாடு நன்றாக இல்லையென்று தகப்பனார் (கணவர்) கூறியதால் ’நீர் என்றைக்குத்தான் நல்லா இருக்கு என்று சொல்லியிருக்கிறீர் என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறினாள்.

அதற்கு மகள், ‘இப்படி வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் கழித்துக்கொண்டே வந்தால் பிறகு எனக்கு வயசாகாமல் என்ன செய்யும்?’ என்று கேட்டாள்.

அவள் தாய் கூறியதைத் தனது போக்கில் எடுத்துக் கொண்டு தன்னைப்பற்றிக் கூறுவதாக நினைத்துக் கொண்டு இவ்வாறு கேள்வி கேட்டிருக்கிறாள்.

இங்கு தகப்பானார், தாய், மகள் மூவருமே காது கேளாதவர்கள் அல்லர். ஆயினும் நடக்கும் நிகழ்வினை அவரவர்கள் தம் போக்கில் அர்த்தப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

**

தெளிவை நோக்கிய, முழுமையை நோக்கிய பயணமாக வாழ்க்கை இருக்க இந்த மின்நூலை (pdf) தரவிறக்கச் சொல்கிறார் ஷாஹூல்ஹமீது.

வாழ்க வளமுடன்!

***

ஆசிரியரை தொடர்புகொள்ள அணுக வேண்டிய முகவரி :
பகவத்
ஸ்ரீமத் பகவத் பப்ளிகேஷன்,
102, நீதிமன்ற வீதி, திருச்செந்தூர் – 628 215
தொலைபேசி : 04639-245377, 99442 15677

**

நன்றி : ஸ்ரீ பகவத், ஷாஹுல்ஹமீது (anshahul@gmail.com )

19 பின்னூட்டங்கள்

 1. நாகூர் ரூமி said,

  16/04/2011 இல் 13:19

  ஷாஹுல் எனது ஆல்ஃபா மாணவர்தான். ஆரம்பத்தில் அவர்தான் எனக்கு பி.ஏ. மாதிரி சென்னையில் எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தார். பின்பு அவர் கவனம் புத்த தியானம், பகவத் என்று சென்றுவிட்டது. ஆன்மிகத்தில் ’கடுமையான’ நாட்டம் கொண்ட அறிவார்ந்த இளைஞர். பழக இனிமையானவர். எனக்கும் பகவத் அவர்களுடைய நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பினார். நாளை மாலை, (ஆல்ஃபா தியான வகுப்பு முடிந்த பிறகு) ஷாஹுலோடு சென்று பகவத் அவர்களைக் காணச் செல்கிறேன் (ஷாஹுலின் விருப்பத்துக்கு இணங்க). சென்று வந்த பிறகு அவர் பேசியவை,நான் கேட்டவை பற்றி எழுதுகிறேன்.

 2. J. Daniel said,

  16/04/2011 இல் 13:29

  எல்லா வேலையிலும் ஈடுபாடு இருப்பது போல் இருந்தாலும், ஈடுபாடு இல்லாமலே இருக்கச்செய்கிறது மனங்கசிந்த வாழ்க்கை.
  நல்ல கதை. நன்றி

 3. 16/04/2011 இல் 14:25

  கதை மிகவும் அழகு.

  // “இன்று” பலரும் பல ஆன்மீக அமைப்புகளில் ’ஏதோ கிடைக்கப்போகிறது’ என்று ஈடுபட்டு ஏமாற்றமடைந்து கொண்டிருக்கும் வேளையில்//

  இன்று மட்டுமல்ல, என்றுமே ஏமாற்றம்தான், ஆன்மிக அமைப்புக்கள் மூலம் ஆன்மீகத்தைத் தேடுவோர்க்கு.

  தம்மில் அதைத் தேடுவோரே வெல்வர், தேடுவது கிடைத்தால்.

  தேடியது கிடைக்கவிட்டாலும், அவர் வென்றவர்தான்.
  ஆமாம், ‘தேடினேன்-ஆனால் கிடைக்கவில்லை’ என்பதை ஒப்புக்கொள்வதே வெற்றிதான்.

  அமைப்புக்கள் அப்படி ஒப்புக்கொள்ளவிடாதது மட்டுமின்றி, தமக்கு ‘கிடைத்ததை’த் தம்மை அண்டியவரிடம் திணிக்கும்;

  குழப்பமாகத் தெரிந்தால், எம்மை தொடர்பு கொள்ளவும்.
  (மேலும் குழம்ப)

  • தாஜ் said,

   16/04/2011 இல் 17:07

   மஜீதை வழிமொழிகிறேன்.
   ஆன்மீகம் என்பது
   பலகாலமாக…
   பக்குவமாக..
   போதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பொய்!

   விடுதலைப் பற்றி
   ஓயாதுப் பேசும்
   அதே மனிதன்
   தன்னைத் தானே
   சிறைப்படுத்திக் கொள்ள
   தவிக்கும் தவிப்பு அது!

   ஆன்மீகம் என்பது
   மதம் சார்ந்த
   வித்தைக்காரர்களின் மொழி!
   அப்பட்டமான மாயை!
   எத்தனைக்குத்
   தேடினாலும்
   சிக்காத/ தட்டுப்படாத/
   மாயமான்!

   இந்த உலகத்தில்
   வாழ்ந்து மடிந்த
   எந்தவெரு
   ஆன்மீகப் பெரிசுகளும்
   மனிதவாழ்வின் அவஸ்த்தைகளில் இருந்து
   தப்பித்ததாகச் சரித்திரமே இல்லை!

   அவர்களது
   ‘தத்துவங்கள்’ கூட
   பெரும்பாலும் அவர்களுக்கே உதவாது/
   அல்லது
   அவர்களை நெறிப்படுத்த
   இயலாதுதான் முடிந்திருக்கிறது.

   ஆன்மீகம் போதிக்கும்
   தத்துவ கீர்த்திகள் எல்லாம்
   வாசிக்கவும் ரசிக்கவும்
   கவிதை மாதிரி/
   அதில் என்னமோ இருக்கிற மாதிரி தோணும்.
   அவ்வளவுதான்.
   அந்தத் தோற்றம்தான்
   அதைத் தொடரும் மக்களுக்கு நிம்மதி.

   எந்தவொரு
   ஆன்மீக போதனைகளையும்
   தனிமனிதனோ
   அல்லது கூட்டமோ
   தொடர்ந்து கடைப்பிடித்தது என்பது இயலாது!

   நான், சில காலம் சொக்கிப் போய் கிடந்த
   ஜே.கிட்டு கிருஷ்ண மூர்த்தி அவர்களின்
   நிஜத்தின் நிஜமான
   சுத்த இயற்கைத் தத்துவங்களை
   இன்றைய வாழ்வை முன் வைத்து/
   சூழலை முன் வைத்து
   கடைப்பிடிக்க முடியவில்லை.
   முடியாது.

   எந்த பட்டு குஞ்சம் வைத்த ஆன்மீக மொழியும்
   தொடர்ந்து என்றைக்கும் சபையேறியதாக
   சரித்திரமே கிடையாது.

   சில ஆன்மீக சாஸ்ட்டானங்கள்
   மதத்தின் போர்வை போர்த்திக் கொண்டு
   வந்து
   பெரிய பயம் காட்டும்.
   பேர்வையை விளக்கிப் பார்ப்போமேயானால்
   பார்க்க பரிதாபமாக இருக்கும்!
   தர்க்கத்தின் ஊன்றுகோள் துணையோடு
   அது கொள்ளும் அவஸ்த்தை சொல்லி மாளாது.

   நிஜத்தில்
   பட்டறிவின் துணையோடு
   சட்டங்கள் அற்ற
   பெரு வாழவுதான்
   யதார்த்தமான வாழ்வு!
   அவனை அவனே
   எந்நேரமும் கண்காணிக்க வேண்டும்.
   அவனை அவனே
   எந்நேரமும் சமநிலைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

   மனிதன் என்பவன்
   மிருக ஜாதி!
   லட்சோப லட்சம் வருஷப் போக்கில்
   அவன் சீர் கொண்டு இருக்கிறான்.
   திரும்பவும் திரும்பவும்
   அவனை மனிதனாக்க முயற்சிப்பதுகூட
   வீண் வேலை!
   *
   -தாஜ்

   • 19/04/2011 இல் 11:30

    //ஆன்மீகம் போதிக்கும்
    தத்துவ கீர்த்திகள் எல்லாம்
    வாசிக்கவும் ரசிக்கவும்
    கவிதை மாதிரி/
    அதில் என்னமோ இருக்கிற மாதிரி தோணும்.
    அவ்வளவுதான்.//

    இருந்தாலும், (யாரு என்ன சொன்னாலும்) ‘கவிஞர்’கள் கவிதைகளை எழுதிக்கொண்டேதான் இருப்பார்கள்!!!

 4. 16/04/2011 இல் 19:24

  எதில் மனம் லயிப்பு கொண்டிருக்கிறதோ அதுவாகத்தான் எல்லாம் தெரியும், அது பாசிட்டிவ்வாக இருந்தாலும் சரி நெகட்டிவ்வாக இருந்தாலும் சரி. அது காதலிலும் இருக்கும் வேதனையிலும் இருக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லலை(வேறு பழமொழி ஞாபகத்துக்கு வரலை) அது மாதிரி.

  அந்த கதையின் உட்கருத்து இதுதான். இதுக்குப் போயி மஜீதுக்குப் பின்னால் தாஜும் ஜே போடுறாரே..! எது எது… ரூமிக்கு (அல்ஃபா) ஆப்பு வச்சுடுவீங்க போலிருக்கே…!

  ஆபிதீன், கொஞ்ச நாளா தாஜு சரியாவே இல்லை அவரை கேரளாவுக்கு கூட்டிக்கிட்டுப் போனாதான் சரியாவரும்.

  • தாஜ் said,

   16/04/2011 இல் 20:55

   அன்புடன் ஜாஃபர்….
   இங்கே கதையல்ல
   மையமான ஆன்மீகம்தான் முக்கியம்.

   //அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் //
   மன்னிக்கனும்
   என் கடிதத்தில்
   நான் காட்டத் தவறிய உவமானம் அது!

   மீண்டும் மன்னிக்கனும்
   ஆன்மீகவாதிகளின் பார்வையில்
   இன்று நேற்றல்ல
   கருத்து தெரிந்த பருவத்தில் இருந்தே
   நான் சரியில்லாத ஆள்!

   கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவது எளிது…
   என்ன செய்ய…. முடியலை.
   -தாஜ்

 5. maleek said,

  17/04/2011 இல் 03:09

  தமிழ்நாட்டில, ஏற்கனவே ஒரு குடும்பம் படுத்துறது போதாதா?
  இங்கேயும் இப்படி ஒரு குடும்பமா!

  • abedheen said,

   17/04/2011 இல் 09:30

   அதானே..! ஓரிரு வரிகளில் ’நச்’சென்று கமெண்ட் கொடுக்கிறீர்கள் மாலிக். வாழ்க வளமுடன்!

  • தாஜ் said,

   17/04/2011 இல் 10:14

   அன்புடன் மாலிக்

   ஆபிதீன் அளவில்
   நான் புத்திசாலி இல்லை.
   கொஞ்சம் டூயூப் லைட்.!
   நிஜமாகவே….
   நீங்கள் எழுதியிருப்பதின்
   உள்ளார்ந்த அர்த்தம் பிடிப்படவில்லை.
   விளக்குங்கள்
   பிஸீஸ்.
   சரியை
   சரியாக ஒப்புக் கொள்பவன்
   நான்.
   -தாஜ்

 6. 17/04/2011 இல் 18:48

  தாஜ் ட்யூப் லைட் உதாரணமெல்லாம் கொடுக்காதீங்க. அது கடந்த காலம். இப்பொ வர்ற ட்யூபெல்லாம் உடனே எரியும். எனர்ஜி சேவர். அதனாலெ நீங்க எனர்ஜி சேவர் ட்யூப்.

  வாழ்க வளமுடன்

 7. maleek said,

  17/04/2011 இல் 20:25

  புலவர்களே !சாந்தமாக உரையாடுங்கள் .டுயூப் லைட், எனெர்ஜி
  சேவர் என்பதெல்லாம் வேண்டாம்.நம் நக்கீரரே(யாரை போடலாம்?)
  நல்ல தீர்ப்பு சொல்லட்டும்.

  • 19/04/2011 இல் 00:21

   வேற யாரப்போட முடியும்?
   ஆசிரியர் ஆபிதீன்தான் நக்கீரர்!
   (வேற யாரச்சொன்னாலும் தற்காப்பு நடவடிக்கை தேவைப்படும்ல?)

 8. shahul said,

  17/04/2011 இல் 22:46

  அன்புள்ள நண்பர்களுக்கு

  என்னுடைய ஆன்மீக பயணத்தின் ஆரம்பம்( குரு ) ஹழ்ரத் அப்துல் வாஹ்ஹாப் பாகவி அவர்கள் (அடுத்த வினாடி புத்தகம் .நன்றி திரு நாகூர் ரூமி ) பயணத்தின் முடிவு ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள்,உங்களுக்கு கிடைத்த இந்த ஆன்மீக பொக்கிஷத்தை ஆர்வமும் அக்கறையும் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இனி எனது ஆசான் வாழ்க்கை எப்போதும் வாழ்கையின் மாணவன் நான்.

  ஷாகுல் ஹமீது

  மொபைல் 9710078134

 9. shahul said,

  17/04/2011 இல் 23:06

  ஸ்ரீ பகவத் அய்யா அவர்களின் புத்தகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

  நித்ய பிரவாஹம் பதிப்பகம்

  31,இராமலிங்க சாமீ தெரு ,அம்மாபேட்டை ,சேலம்-6 செல்: 9789165555, 9994205880.

  SRI BAGAVATH AYYA AVAILABLE AT CHENNAI TILL 28.04.2011

  ADDRESSES

  H-93,T-4,SEA VIEW APARTMENTS,TNHB FLATS,FIRST SEAWARD ROAD,VALMIKI NAGAR,THIRUVANMIYUR,CHENNAI-600044.

  33,BRUNDHAVANAM EXTN STREET,SUNDARAM FLATS,FIRST FLOOR,WEST MAMBALAM,CHENNAI.

  MB: 99442 15677

  92452 28512

  94432 90559

  • தாஜ் said,

   18/04/2011 இல் 07:58

   அன்புடன்
   ஷாஹுல்….

   உங்களது ஆன்மீகப் பயணத்தைக் குறித்து
   சுட்டிக் காமித்திருக்கின்றீர்கள்!
   அது….
   உங்களது உள்ளத்தின்
   மொழியாகவும் இருக்கிறது!
   சிலிப்பான விஷயம்!

   ஸ்ரீ பகவத் அய்யா அவர்களது
   புத்தகங்களிடமிருந்தும்
   அந்தப் பெரியவரிடமிருந்தும்
   நீங்கள்
   அறிந்த/ உணர்ந்த
   விசேச விசேசமான
   ஆன்மீக செருக்கைப்பற்றி
   எங்களது
   இந்த ஆபிதீன் பக்கங்களுக்கு
   நீங்கள்
   தீர்க்கமான
   கட்டுரை ஒன்றை எழுத வேண்டும்!
   பணிவுடன் அதை இங்கே
   கோரிக்கையாகவும் வைக்கிறேன்.
   நன்றி!
   -தாஜ்

 10. shahul said,

  18/04/2011 இல் 13:26

  IF ANYTHING(EVERYTHING) WRONG IN MY WORDS.

  PLEASE EXCUSE ME FRIENDS.

  WITH LOVE

  SHAHUL HAMEED.

  • 18/04/2011 இல் 16:49

   Nothing seems wrong in your words, Shahul!

   திறந்த மனசும், தெளிந்த பார்வையும், வேஷமற்ற வார்த்தைகளும், யாருக்கும் தீங்கிழைக்காத நடத்தையும் எப்போதும் தவறாகாது.

   உங்கள் ஆன்மீகப்பயணத்தில் தற்போது வந்து சேர்ந்த ஆசானான ‘வாழ்க்கை’யைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆசான்களிலேயே மிகச்சிறந்தவர் அவர்தான்!

 11. தி.ப.சாந்தி said,

  16/04/2017 இல் 14:06

  நன்றி பகவத்ஐயா உங்கள் கருத்து உகெங்கும் பரவவேன்டும்


J. Daniel க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s