Merry Christmas – நவகாந்த பரூவா கவிதையோடு

‘அன்பே,
எனக்கு ஒரு கடவுளைக் கொடு
எனக்கு சிந்திக்க ஒரு கடவுளைக் கொடு
எனக்குத் தப்புவதற்காக ஒரு கடவுளைக் கொடு’ என்று ‘தப்புதல்’ கவிதையில் சொன்ன அஸ்ஸாம் கவிஞர் ‘நவகாந்த பரூவா‘வின் கவிதை ஒன்று – ‘சைத்தான்’ சாதிக்கிடமிருந்து நான் தப்புவதற்காக! அயலவரை நேசிக்குமாறு போதித்த இயேசு பிரானின் வழியில் நாட்டு மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டத்தைத் தனது அரசு முன்னெடுத்துவருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் நத்தார் வாழ்த்துச் செய்தியை விட , இயேசுநாதர் இயலாதவர்களிடம் கருணை கொண்டது போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு என்று சொன்ன கலைஞரின் வாழ்த்துகளை விட இந்தக் கவிதை நன்றாகவே இருக்கும். நாகை நண்பர் லூயிஸுக்காக இதைப் பதிவிலிடுகிறேன்.

***

அளவுகள்

இப்போது பிற்பகல்
தையற்கடைக்குப் போகலாம், அளவு கொடுக்க.

கழுத்து, மார்பு, கைகள், தோள்களின் அளவுகள்
உள்ளங் கை, இதயத்தின் அளவுகள்
குடல், சிறுநீரகம், ஈரலின் அளவுகளைக் கொடுக்கமுடியும் நம்மால்
ஹார்மோன்களின் அளவுகளையும் நேசத்தின் அளவுகளையும் கொடுக்கலாம்.

வாழ்க்கையின் அளவுகளைக் கொடுப்போம்.
இது, அது மற்றும் அநேக விஷயங்களின் அளவுகளையும்.
அளவுகளை மட்டுமே கொடுப்போம்.
தைப்பது பற்றிப் பிறகு யோசிக்கலாம்.
இப்போதைக்கு வெறுமனே அளவு கொடுப்போம்.
நம்மால் அளவு கொடுக்கத்தான் முடியும்.

நம்மால் கணக்கிட மட்டுமே முடியும்.
தற்கொலைகள் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்று
பதிவு செய்யலாம் நாம்.
ஒரு சொற்பொழிவில் எழுத்துக்கள் எத்தனை என்று
எண்ணிக்கை தரலாம் நாம்.

அரேபியாவில் கிறிஸ்தவர்களின் தொகையைத் தரலாம்.

வெறுமனே அளவுகள் கொடுங்கள்.

தைப்பது பற்றி பிறகு யோசிக்கலாம்.
வெறுமனே யோசிக்கலாம்.

நமக்குப் பிறகு
நமது அளவுகள் தவறானவை என்று
எவரேனும் புதிதாக அளவெடுப்பார்கள்.
புத்தம் புதிதாக அளவெடுப்பார்கள்.
அளவு மட்டுமே எடுப்பார்கள்.

எவராவது
மனிதனுக்குப் பொருத்தமான உடை தைப்பது
எப்போது?

**

நன்றி : தினமணிசுடர்  (1995). அருமையாக மொழிபெயர்த்த நண்பருக்கும் நன்றி. மன்னிக்கவும், பெயர் தெரியவில்லை. நண்பர்கள் குறிப்பிடவும். 

*

Image Courtesy : GulfNews

*

தொடர்புடைய பதிவு : இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்

3 பின்னூட்டங்கள்

  1. 25/12/2010 இல் 11:11

    இன்னும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்;
    அளவு.
    ஓய்வு கிடைக்கும்போது
    அப்போதுதானே அம்மணமாக உணருகிறோம்?

    அதோ ஒருவர் வருகிறார்
    எம் மானங்காக்க.
    அணிவித்தார் அழகான கனமான ஆடை.

    நாம் அம்மணமில்லை இனி.
    நிம்மதி
    சொன்னார்
    இனி நீங்கள் அளவு கொடுக்க அவசியமேயில்லை.
    பிறகு?

    ஒருமுறை சிதறினால் போதும்.

  2. 25/12/2010 இல் 21:14

    அளவு கொடுத்து
    அளவாகவும் கொடுத்து – இப்போது
    அளவில்லை கொடுப்பதற்கு
    .
    நானோ நிர்வாணம் – அதன்
    மேல் ஆடை படர்ந்தால்
    யார் பார்ப்பார்கள்.

    ஆபிதீன்/ உங்கள் கைவசம் இன்னும் எத்தனை ஷைத்தான் இருக்கிறது?

  3. 27/12/2010 இல் 06:44

    (லொள்ளு சபாவில் பரதநாட்டியம் ஜதி சொல்வார்.. ‘தை தை..’ என்று .. அதற்கு மனோகர் சொல்வார், ‘தை தைங்கிறீயே.. எங்க ஐயா என்னா தையல் மெசினா வச்சிருக்காரு தச்சு கொடுக்க..’ என்று) அதெல்லாம் கிடையாது.. நீங்க எப்படி மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லலாம் – நீங்க காஃபிர் தான்.. இல்ல.. நீங்கள் முஸ்லீம் தான் என்றால்.. நீங்கள் வாழ்த்து சொன்னது ஹராம் தான்.. அதெல்லாம் கிடையாது..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s