நாங்க பார்த்த(அ)து…! – ஹமீது ஜாஃபர்

‘குஞ்சாமணி வெளில வந்துடிச்சிம்மா’ என்று அந்த விஷப்பொடியன் சொல்லும்போது , ‘அத (ஜட்டி) உள்ள போட்டுக்கடா கண்ணு’ என்று அழகாகச் சொல்வாள் அந்த அம்மா. (என்ன பிரமாதமாக நடித்திருக்கிறார் இந்த பெண்மணி! ). படம் : பசங்க. நீங்கள் பார்த்திருக்கலாம். ஜாஃபர்நானாவின் வீட்டில் அந்தமாதிரி யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. எப்போதும் தொங்கவிட்டுக்கொண்டு (நினைவுகளைத்தான்) அலைகிறார் மனுஷன். ‘மார்க்கமா மூர்க்கமா?’ என்ற தலைப்பில் (இதில் சந்தேகம் வேறா?) ரஃபி சார் போல எழுதாமல் இப்படியெல்லாம் ஆபாசமாக எழுதுவது நன்றாக இல்லை நானா… சொல்லிவிட்டேன்.

ஆமா…, சனிக்கிழமை ‘பெரியவங்க’ இங்கே வரவேண்டாம்னுதான் சொல்லியிருந்தேனே… ஏன் வந்தீங்க நீங்கள்லாம்? உங்க ‘மனஅழுக்கு’ பற்றி தனியாக எழுதனும். மஜீத்பாயின் ‘ஹஜ்ரத்’ ஜோக் போட்டபிறகுதான் எழுதனும், இன்ஷா அல்லாஹ். தனியாக வலைப்பதிவு ஆரம்பத்திருக்கும் மஜீதிடம் (பார்க்க : http://majeedblog.wordpress.com/) ‘அதை’ அங்கேயே போடச்சொன்னேன். ‘அது மட்டும் நடக்காது!’ என்று சொல்லிவிட்டார். என்னை மாட்டிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்!

நாகூரைச் சுற்றியுள்ள ஊர்களில் மஞ்சக்கொல்லை குளம் மாதிரி அழகான குளத்தை நான் பார்த்ததில்லை. இனிமேல் அங்கே போகமாட்டேன் என்று நினைக்கிறேன்!

ஆபிதீன்

***

நாங்க பார்த்த(அ)து…!  – ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்மலரும் நினைவுகளில் ஆதிலச்சுமியப் பற்றி சின்னதா எழுதியதற்கு ”நானா தூள் கெளப்புறாரு , தொடர்ந்து எழுத சொல்லுங்க” என்று அருமை நண்பர் தாஜ் அவர்கள் ஆபிதீனுக்கு போன் பண்ணி சொல்லிருக்கிறார். ஆசையை ஏன் கெடுப்பானே! அதனாலெ இதனை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவரு ஒரு பக்கம்னா இந்த ஆபிதீன் இன்னொரு பக்கம். “நானா, கிளம்பும்போது எளுதுங்க”ன்னார். “எளுதும்போதுதாங்க கிளம்புது” என்றேன் நான். “தப்பா எடுக்காதீங்க நானா , ஐடியாவை சொன்னேன்.” என்றார். “அதைத்தான் நானும் சொல்றேன்” என்றேன். என்ன செய்யிறது , என்னை மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கனும்னு  ரெண்டுபேரும் ஒரு முடிவோடு இருக்காங்க…

இலங்கை எழுத்தாளர் ஜனாப் எபிஎம் இத்ரீஸ் அவர்களின் வலைப் பதிவில் இப்னு சீனா அவர்களின் உளவியல் பற்றிய தகவல்களை நம்ம ஆபிதீன் படித்துவிட்டு “நானா…!” என்று அதிர்ந்துவிட்டார். ஏற்கனவே அறபாத் கதையைப் படித்துவிட்டு அண்ணார்ந்து பார்த்தவர் ‘இன்னும் தெரியலையே’ என்று தலையைத் தொங்கப் போடாமலே இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு வைத்தியம்! மனுசன் என்னதான் செய்வார்? துபை என்ற இசுலாமிய நாட்டில் புளுபுளுவென மேயும் ஃபிலிப்பைனி மஞ்சக்கொளுப்பான் (ஒரு வகை சிட்டுக்குருவி) , ஆப்ரிக்க நாட்டு கானாங்கோழிகள் , இன்னும் வானவில் போன்று வர்ண ஜாலம் காட்டும் பன்னாட்டு பஞ்சவர்ண கிளிகள், ‘நூருல் லைலா’க்கள், சீனத்துப் பொன்வண்டுகள்… இத்தியாதி இத்தியாதிகளைப் பார்த்துப் பார்த்து கண் பூத்துப் போகிறதே தவிர தொடக்கிட முடியாது. எனக்கொரு ஆசை , ஹூர்லின்களை கனவிலாவது பார்க்கனும்னு. அந்த ஆசை இங்கேதான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆமாம் , அங்கே ஹூர்லின்களைப் பார்க்கலாம் , ஆனால் தொடமுடியாது, அவர்கள் ஒளியினால் படைக்கப் பட்டவர்கள் என்று எங்க ஹஜ்ரத் சொன்னாக, நமக்கு சொர்க்கம் கெடச்சாவுல்ல?

யாருக்குத் தெரியும் எது கிடைக்கும்னு?

ஹைஸ்கூல்லெ படிக்கிற காலம்… சாதாரணமா சனி ஞாயிறு லீவு வந்தா வூட்லெ இருக்கிறதில்லை . வெளியேத்தான் நாள் முழுவதும். மதியம் சோறு உண்டபிறகு எங்கவூர் பள்ளிவாசல் மகிழ மரத்தடி. அங்கே இருக்கிற இரண்டு மகிழ மரத்து நிழலும் பள்ளிவாசல் குளத்துத் தண்ணீரில் பட்டு வரும் காற்றும் ஜிலுஜிலுன்னு இருக்கும். அங்கே இருந்துகொண்டு நாங்க ஏழெட்டு பேர் அரட்டையடிப்போம் , அஸருக்கு பாங்கு சொல்லும்  வரை. சில நாட்களில் அஸர் தொழ வரும் ‘மானா முனா மாமா’ சத்தம்போட்டாத்தான் போவோம். அவர் என் கூட்டாளி ஹாஜா மெய்தீனுடைய வாப்பா, ஆள் வாட்டஞ்சாட்டமா ஆறடிக்குமேல் உயரமும் அதைவிட தடியுமாக பார்க்க கம்பீரமாக இருப்பார். எல்லோருமே மரியாதை கொடுப்போம் அவருக்கு. இப்பவெல்லாம் சின்னபிள்ளை பெரிய மனிதர் என்கிற வித்தியாசம் இல்லாம போயிடுச்சு. வேறே ஒண்ணுமில்லை அட்வான்ஸா போய்கிட்டிருக்கோம்.

எங்கவூர் குளத்தைப் பத்தி சொல்றதா இருந்தா ஒரு பெரிய கட்டுரையே எழுதனும். சுருக்கமா சொல்லிபுடுறேன். இந்த குளத்துக்கு அஞ்சு படித்துறை இருக்கு. அதிலெ ஒன்னு பள்ளிவாசலோடு இருக்கிற படித்துறை. அப்பவெல்லாம் ஒரு சில வீடு தவிர மத்த வீடுகளில் தனி பாத் ரூம் வசதி எல்லாம் கிடையாது. இந்த குளத்துலெதான் நாங்க எல்லோரும் குளிக்கனும். பொம்பளைங்க அதிகாலையிலே குளிச்சுட்டுப் போயிடுவாங்க. ஆம்பளைங்க காலையிலெ குளிப்பாங்க. சில பொம்பளைங்க மதியம் மூணு மணிக்கு குளிப்பாங்க. தண்ணீர் எப்போதும் இருக்கும், கோடையிலெ கொஞ்சம் வத்தி இருக்கும். அதனால அக்கம்பக்கத்திலுள்ளவங்க எல்லோரும் இங்கேதான் குளிக்கும். மதியானம் குளிக்கிற பொம்பளைங்க குறிப்பிட்ட ஒரு படித்துறையிலெதான் குளிப்பாங்க, அதனாலெ ஆம்பளைங்க யாரும் அங்கே போகமாட்டாங்க.

சில்லரைப் பசங்க கூட்டமா பள்ளிவாசல் துறையில் இருக்கானுவலே.. நாம குளிக்கிறதைப் பார்த்துக்கிட்டிருப்பானுவலோ என்று அவங்களுக்கு எந்த அச்சப்பாடும் கிடையாது, பெருசாவும் எடுத்துக்கிறதும் கிடையாது. அதேமாதிரி அவங்க குளிக்கிறதை பார்த்துக்கிட்டு இருக்கிறதும் கிடையாது. கிராமங்கள்லெ இதெல்லாம் சர்வ சாதாரணம். இன்னும் உள் கிராமங்கள்லெ பத்தடி தள்ளி ரெண்டு பேருமே குளிப்பாங்க, ஒரு பிரச்சினையும் இருக்காது. கிராமத்து மக்களிடம் கள்ளம் கபடமெல்லாம் இருக்காது. எல்லாம் இயற்கையோடு ஒன்றி இருக்கும். பட்டணங்களில் இருக்கிற மாதிரி artificial life எல்லாம் கிடையாது.

நாங்க எதிர்புறமா முகத்தை திருப்பிக்கிட்டு அரட்டையும் பேச்சுமாத்தான் இருப்போம். இருந்தாலும் சில நேரங்கள்லெ இலைமறைவு காய்மறைவா கண்ணுலெ படாம தனங்கள் இருப்பதுமில்லை.

தனம் என்றால் செல்வத்தைக் குறிக்கும், தனவந்தர் என்றால் செல்வத்தை உடையவர் என்று பொருள் கொண்டாலும் அது கொடை கொடுப்பவரையும் குறிக்கும் என்று தமிழாசிரியர் புலவர் இரா. இராசு அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு மாணவன் எழுந்து “தனத்துக்கு வேறே அர்த்தம் இருக்கா ஐயா?” என்று குசும்பா ஒரு கேள்வியைக் கேட்டான். அவர் மிக மென்மையானவர், பயல் எதைக் கேட்கிறான் என புரிந்துக் கொண்ட அவர் “ஆம், முல்லைக்கு இடை இன்மை” என்றார். பயலுக்குப் புரியலை தலையை சொரிஞ்சிக்கிட்டே உட்கார்ந்துட்டான். இதையே பெரியவர் கோவை இளஞ்சேரனிடம் கேட்டிருந்தால் ஓங்கி ஒரு அரை விட்டிருப்பார். பய தப்பிச்சுட்டான்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் பாரி வள்ளல் ஏன் தேரை முல்லைக்கு கொடுத்தான்? என்று. இப்பத்தான் விளங்குது காரணமில்லாமல் கொடுக்கலைன்னு. காட்டு முல்லை வஞ்சகமில்லாம மானாங்கனியா வளர்ந்திருக்கும் அதுவும் தன்னந்தனியா அல்லாடிக்கிட்டிருந்ததைப் பார்த்தவுடன் அண்ணார் இல்லை மன்னர் மயங்கிட்டார். தேரைக் கொடுத்தால் ஒரு பய தீண்டமாட்டன், அரசருடைய சொத்துன்னு பயப்படுவான் பாருங்க, அதனாலெ அடுத்த செகண்டே கொடுத்து முல்லையை தன் வசப்படுத்திட்டார்.

எங்க ‘கான்ஃபரன்ஸ்’ வாரத்துலெ இரண்டு நாள் நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. மெம்பர்ஸ் கூடும் அல்லது குறையும். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அது ஒரு ஆடிமாசம்.  “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. நுங்கும் நுரையுமாகப் பொங்கி வரும் புது வெள்ளம், பதினெட்டாம்  பெருக்கு எல்லாம் ஆடியில்தானே. “ஆடி வந்தால் அம்மியும் நகரும்” என்பார்கள் கிரமத்தில். சைக்கிளில் கூடப் போகமுடியாது அந்த அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும். இதெல்லாம் அந்த காலத்தில் இப்போது ‘தண்ணி’தான் கிடைக்கிறது 365 நாளும், தண்ணீர் கர்நாடகத்திடம் பிச்சை எடுக்க வேண்டும். புது தண்ணீர் வச்சு பள்ளிக்குளம் நிறைஞ்சு இருந்துச்சு. எப்போதும் போல வழக்கமா வர்ற ஜனங்கள் குளிக்க வந்துச்சுவ. அவங்களோட ஒரு சின்ன பொண்ணும் வந்துச்சு. பத்து பதினோறு வயசு இருக்கும், பாக்கியம் அக்காவுக்கு சொந்தக்காரப் பொண்ணு ஊர் காரைக்கால் பக்கம். அக்கா தங்கச்சி மூணு பேர். மூணு பேருமே கடிச்சு திங்கிற மாதிரி இருப்பாங்க, லட்டு மாதிரி கொள்ளை அழகு; சுண்டிவிட்டால் ரத்தம் வரும் அவ்வளவு சிகப்பு. ஆண்டவன் ஓரவஞ்சனைக்காரன் ஒருத்தருக்கே எல்லா அழகையும் கொடுத்துடுறான்.

என் வாத்தியார் N.G சார்தான் சொல்வார், “டேய் கடவுள் மனுசனைப் படச்சுட்டு கடைசியாதான் மூளையை வைப்பார். அப்பொ ஒரு கையிலெ மூளை ஒரு கையிலெ களிமண் இருக்கும். ஒவ்வொருத்தனுக்கும் கொஞ்சம் மூளை கொஞ்சம் களிமண்ணுன்னு வைப்பார். அப்படி வச்சுக்கிட்டு வரும்போது அவசரத்துலெ சில பேருக்கு களிமண்ணுக்கு பதிலா மூளையையே வச்சுடுவார்; சில பேருக்கு மூளைக்கு பதிலா களி மண்ணை மட்டுமே வச்சுடுவார். நீங்க எல்லாம் இந்த களிமண் கேஸுடா” என்பார். அந்த மாதிரி ஆண்டவன் அவசரத்துலெ ஒரே ஆளுக்கு அழகை கொடுத்துடுவான் போலும்.

அந்த சிறுமிக்கு குளத்துலெ குளிச்சு பழக்கமில்லை போலும், அள்ளி ஊத்தி குளிக்கிறதுக்காக சின்ன பக்கெகட்டை கையிலெ வச்சுக்கிட்டு கடைசி படித்துறையிலெ உட்காரும்போது வேகமா அடிச்ச காத்து பாவாடையை தூக்க  மின்னல் வெட்டுற மாதிரி பளிச்சின்னு ‘அது’ கண்ணுலெ பட நாங்க ஒன்னுரண்டு பேரு வெலவெலத்துப் போயிட்டோம்.

மறுநாள் நானும் பக்கத்து வீட்டு கூட்டாளி நோமானியும் ஸ்கூலுக்கு போயிக்கிட்டிருந்தோம். எதுக்க வந்த அந்த பொண்ணைப் பார்த்து “இந்தா, உன் பேரு என்ன?” என்றான் நோமானி,

“மலர்விழி”.

“நீ ரொம்ப அழகா இருக்கே!”

கொஞ்சம் உச்சி குளிர்ந்து, “தேங்க்ஸ்” என்றாள்

“இந்தா மலர்விழி, உனக்கு குளத்துலெ இறங்கி குளிக்கத் தெரியாதா?” என்றான்.

“பயமா இருக்கு அண்ணே.”

“என்கூட வாரியா நீச்சலடிக்க கத்துத்தாரேன்”

“ச்சீ போ…”ன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு.

“மோசமான ஆளா இருக்கிறியே” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது “ஊ…ஊ………..” என்று ரயில் இன்ஞ்சின் ஊளை சத்தம் கேட்க ஸ்கூல் போவதற்கு ஒன்பதேகால் டிரைனைப்  பிடிக்க ஓடினோம்.

(நினைவுகள் இன்னும் மலரும்…)

***

நன்றி : ஹமீது ஜாஃபர்   

manjaijaffer@gmail.com

5 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  18/12/2010 இல் 11:43

  நானா, மச்சி நம்ம இழுத்த இழுப்புக்கு வருவாகண்ணு சொல்லிருக்கீங்க, நூருல் அமீன்பாயிடம்.

  இப்ப நான் சொல்றேன், மச்சி எதயோ காய வச்சு ‘எதுலயோ’ இழுக்கிறது உறுதி.

  அன்சாப்பு படிக்கும்போது பொம்பளப்புள்ளகளுக்கு நடந்த ஸ்கிப்பிங்க் போட்டில முதலாவதா வந்துக்கிட்டிருந்த புள்ளயோட முழுபாவாடை காத்துல சிக்கி, மேல போய் முகம் தலயெல்லாம் மறச்சுருச்சு. பாவம் அந்தப்புள்ள தோத்துப்போச்சு.

 2. 18/12/2010 இல் 22:54

  “ஆம், முல்லைக்கு இடை இன்மை” இதை நாங்கள் கல்லூரியில் இப்படி சொல்வோம். கார்னர் என்றால் அங்கிலத்தில் மூலை… கர்னர் எள்றால்… என்று… ஹா ஹா. ஹீருல்ஹைன் ஒளியால் படைக்கப்பட்டவர்களா? லேசர் ஹோலோகிராமா?

  • மஜீத் said,

   19/12/2010 இல் 10:59

   முதலாண்டு தமிழ் வகுப்பில் குசும்பு செய்த மாணவனை தமிழாசிரியர் அறிவுறுத்திவிட்டு, வெறுப்பில், நீயெல்லாம் எங்கே உருப்படபடப் போகிறாய்; விளையும் பயிர் முளையிலே தெரியும்னு சொல்வாங்க; சரியாத்தான் இருக்கும் என்றார். அந்த ஹராத்து மறுபடி எழுந்து ‘ ஐயா எதுல தெரியும்?’ என, அவர், உட்கார், உன் முகம்தான் பால் வடியும் முகம், உன் நினைப்பு எல்லாம் பால்வடியும் வேறு ஒன்றில்தான் இருக்கிறது. மற்ற மாணவர்களை படிக்கவிடு என்று முறைத்தவுடன் அவன் நிறுத்திக் கொண்டான்.

 3. 18/12/2010 இல் 23:24

  தாஜுக்கு சமர்ப்பணம் என எழுதியிருந்தீர்கள். நான் படித்த வரை அவரது எழுத்துகள் மிகவும் கண்ணியமானவை.

  நீங்களும் மிகவும் கண்ணியமாக எழுதக் கூடியவர் தான். எழுத்து உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் என வியந்திருக்கின்றேன்.
  வரமே சாபமாகி விடுமோ என அஞ்சுகின்றேன். உங்களை குறை சொல்ல எனக்கு வயதில்லை. இந்த உங்கள் வளர்(வீழ்)ச்சியை பார்த்து கொண்டிருக்க எனக்கு மனமில்லை.

 4. maleek said,

  19/12/2010 இல் 02:31

  அது ஆதிலச்சுமி -இது ஜோதிலச்சுமி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s