ஷைத்தானும் சஜ்தா செய்திருந்தால்…!?

‘ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டே இங்கே காலந்தள்ள முடியலெ… விசுவாசிகளா நடந்து சொர்க்கத்துக்குப் போனா அங்கே பல ‘ஹூர்லின்’ கன்னியர் மனைவியா கிடைப்பாங்களே, என்னா பண்ணுறது? இதேமாதிரி பெண்ணுக்கும் அங்கே பல மாப்பிள்ளைங்க கிடைப்பாங்களா?ஆணுக்கு மட்டுமா ஆசை இருக்கு, பெண்ணுக்கு நம்மைவிட ஒன்பது பங்கு ஆசை இருப்பதாக சொல்றாங்களே..!’ என்று வேடிக்கையாகப் பேசும் ஹமீது ஜாஃபர் நானா உண்மையில் விபரமான ஆள். அறுபதுக்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்களை தமிழுக்கு வழங்கிய ஹஜ்ரத் , மறைந்த எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் முக்கிய சீடர்.

ஹமீது ஜாஃபரின் மின்னஞ்சல்: manjaijaffer@gmail.com 

கல்லெறியுங்கள்!

***

ஷைத்தானும் சஜ்தா செய்திருந்தால்…..!?

ஹமீது ஜாஃபர்

 ஹமீது ஜாஃபர்

ஆபிதீன் போன் பண்ணி , ‘ஏன் நானா உங்க ப்ளாக்-ஐ அப்டேட் பண்ணாம இருக்கீங்க? உங்க சைட்டுக்கு லிங்க்‘லாம் கொடுக்குறேன் அங்கபோறவங்க பழசயே பாத்துக்கிட்டிருந்தா எப்படி?’ன்னு ஒரு கேள்வியை கேட்டார்.

அவரு சொல்றதுலே ஞாயம் இருக்கு. ஒரு மாசத்துக்கு முந்தி அப்டேட் பண்ணுனது. முன்னெ மாதிரி இப்பொவெல்லாம் உட்கார்ந்து டைப் பண்ண முடியலை. இடுப்பு வலி . கூடவே ஆக்ஸிடெண்ட்லெ தண்டு எலும்பு லேசான டேமேஜ். என்ன செய்யிறது? 42 டிக்ரி செல்ஸியஸிலிருந்து 22 டிக்ரி செல்ஸியஸுக்கு வந்தா? ஆமா, வெளியே 42, உள்ளே – அது ஆபிஸானுலும் சரி ரூமானாலும் சரி – 22 டிக்ரிதானே! ஒரு நாள் இரண்டு நாளா? முப்பது வருஷமா இப்படி இருந்தா இல்லாத வியாதியெல்லாம் வராம என்ன செய்யும்? அதுவும் இந்த ஊர்- தண்ணீருக்கு கிட்னி ஸ்டோன், சாப்பாடுக்கு டயாபட்டீஸ் சீதனமா வருவது.

டாக்டரிடம் எத்தனை தடவை காண்பிச்சாலும் கிரீம், லோஷன், மாத்திரை. போவுமா வலி? அதனாலெ கோழிக்கோடு-செலவூர் போய் பதினஞ்சு நாள் ஆயுர்வேத வைத்தியம் செஞ்சுகிட்டு வந்த பிறகு கொஞ்சம் தேவலை. ஆனா வைத்தியம் செஞ்சா மட்டும் பத்தாது,  நல்ல ரெஸ்ட்டும் எடுக்கணும். எனக்கு எங்கே இருக்கு பொறுமை? வரும்போதே பாலக்காட்டுலெ இறங்கி மலம்புழா டேமையும்   பார்த்துட்டு வந்தா.. உருப்புடுமா உடம்பு? திப்பு சுல்தான் கோட்டை வேறு இருக்குதுன்னு சொன்னாங்க  ஆனால் அங்கு கவர்மெண்ட் ஆபிஸ் இருக்காம், டைம் வேறு இல்லாததினால் அங்கே போகலை.

அங்கே ஏண்டா போனேன்னு கேட்கக்கூடாது பாலக்காட்டுலெதான் தம்பி ஃப்ரண்டு கோவை சிராஜ் இருக்கார். நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மெனக்கட்டு அபுதாபி வந்து பார்த்துட்டுப் போனார். இப்பொ கோவையிலெ பிஸினஸ் , பாலக்காட்டுலே வீடு. தினம் ரயில்லே பாடாப்படுறார்.

‘நானா, பொதுத்தொண்டு செய்ங்க நானா’ -இது ஆபிதீனுடய வேண்டுதல். நம்ம தண்டயே பாக்க முடியலெ  இதுலே பொது தண்டா, சாரி, தொண்டா?! அதனாலத்தான் வலியெக்கூட பொருட்படுத்தாமல் வேலைகளுக்கிடையில் எழுத வேண்டியிருக்கிறது. ஆபிதீனுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் டைம் இருந்தால்  போடுபோடுன்னு போடுவேன். பாப்பாத்தியம்மா மாடு வந்தா கட்டுங்கிற கதைதான். அவரோட அரபி மொதலாளி எப்பவாவது ஆபிஸுக்கு வருவான், ஆனால் எப்போன்னு சொல்லமுடியாது, வந்தான்னா இஸ்ராயில் (அலை) வர்ரமாதிரி வந்து கொதவளையெ புடிப்பான். அவன் போனபொறவு ‘சலவாத்து’ ஓதிக்கிட்டிருப்பார்.

அவனை மாதிரியே இவரு என் கொதவளையையும் புடிப்பார். நான் என்னவோ பெரிய ஆலிம்சா மாதிரியும் தான் என்னவோ ஒன்னுந்தெரியாத பாப்பா மாதிரியும் நெனச்சிக்கிட்டு ஏதாச்சும் கேள்வி கேட்பார்.

“நானா, நல்லபுள்ளையாட்டம் ஷைத்தானும் ‘சஜ்தா’ (சிரம் பணிதல்) செஞ்சிருந்தா எப்படி இருந்திருக்கும்?” – என்றார் ஒருநாள்

“கேள்வி நல்லாதான் இருக்கு, அது அவனுக்கும் அல்லாவுக்கும் உள்ள பிரச்சினை. இது உங்களுக்கு தேவையா?”

“தேவைதான்,. சொல்லுங்க. அல்லாஹ் , பின்னாலெ போயிருப்பானோ?”

சிரித்துக்கொண்டே, “கேள்வி கேட்க நீங்களும் , பதில் சொல்ல நானும் இருக்கமாட்டோம்!”  என்றேன்.

“அப்டீன்னா?”

“அப்டீன்னா… அந்த ‘கோதுமைக் கனி’ கெடச்சிருக்காது, ஆதம்-ஹவ்வா ரெண்டுபேரும் இப்பவும் சொர்க்கத்து நந்தவனத்துலே கண்ணாமூச்சி விளையாடிக்கிட்டிருப்பாக; இல்லை ரொபாட் மாதிரி கொடுத்த வேலையெ செஞ்சிக்கிட்டிருப்பாங்க. ஏன் இவங்களைப் படைச்சோம்னு தலையிலே கையெ வச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பான் அல்லா.”

“அப்பொ ஷைத்தான் செஞ்சது சரிதான் என்கிறீங்களா?”

“அல்லா கன்ஜுமக்ஃபியா (மறைவான பொக்கிஷம்) சும்மாதானே இருந்தான். அப்படியே இருக்கவேண்டியதுதானே. அவனுக்கு ஆசை வந்துச்சு. விளைவு எல்லாத்தையும் படைச்சு அததெக்குன்னு தனித்தன்மையெக் கொடுத்தான். இதோடு நிறுத்திருந்தா பிரச்சினை வந்திருக்காது, மனுசனை மட்டும் பிரத்தியேகமா கவனிச்சான், எக்ஸ்ட்ராவா சிலதைக் கொடுத்துபுட்டு இவனை சும்மா விட்டா, தான் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டு நம்ம தலையிலேயே கையெ வைக்க ஆரம்பிச்சுடுவான். அதனாலே அவன் யார்? – அது அவனுக்கே தெரியக்கூடாதுன்னு ஏற்பாடு பண்ணிட்டான்.”

“அப்டீன்னா ஷைத்தான் அவனோட ஏற்பாடா?”

“கரெக்ட், அவன் வேலைதான். ‘நாம் எதையும் வீணாகப் படைக்கவில்லை’ என்று குர்ஆன்லெ அல்லஹ் சொல்றானே. ஆனால் ஒரு கண்டிஷன் போட்டிருந்திருக்கனும், மனுசனுக்கு இவ்வளவுதான் தொல்லை கொடுக்கனும்னு ஒரு limitation வச்சிருக்கனும் அப்படி இல்லாததாலே நம்மட மெயினை புடிச்சிக்கிட்டு படாதா பாடு படுத்துறான் ஷைத்தான். சிரிக்காதீங்க ஆபிதீன், உண்மை அதுதான். ஷைத்தான் ரத்த நாளங்களில் நீச்சலடிச்சு கடைசியில் டைவ் அடிக்கிறது அங்கே தானே, அதானே ஆழமா இருக்கு. “திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களின் ரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறான் (இன்னஷ் ஷைத்தான லயஜ்ரீ மிநிப்னி ஆதம மஜ்ரத்தமி) ஷைத்தான் மனிதர்களின் அமருமிடங்களில் (மர்மஸ்தானங்களில்) விளையாடுகிறான் (இன்னஷ் ஷைத்தான யல்அபு பிமகாஇதி பனீ ஆதம) இது ஹதீஸ்லெ  இருக்கு. இந்த கேள்வியெ நம்ம தலைவர் ஜபருல்லா நானாவிடம் கேட்டேன், “அல்லா எல்லாத்தையும் கலைச்சிருப்பான், நெகடிவ் இருந்தாத்தானே பாசிடிவ்-க்கு வேலை இருக்கும், அது இல்லாவிட்டா  இதுக்கு ஏது வேலை? ஷைத்தான் இருந்தாத்தான் அல்லாவுக்கு வேலை, இல்லேன்னா என்னை மாதிரி தூங்கிக்கிட்டிருப்பான்” அப்டீன்னார்!’

கேள்வி பதில்கள் இருக்கட்டும். நேற்று என்னிடம் ஷைத்தான் வந்து வாலை ஆட்டினான். நான் பஸ்ஸில் போய்கிட்டிருக்கும்போது முன் சீட்லெ ஒரு பொண்ணு முழுசா முக்காடு போட்டுக்கிட்டு உட்கார்ந்திருச்சு. என்ன நினைச்சதோ விண்டோ சைடு திரும்பி முக்காட்டை தூக்கி முகத்தை தொறந்துக்கிட்டு தன்னுடைய மொபல் போனை எதோ செஞ்சிக்கிட்டிருந்துச்சு. துபையிலெ உள்ள பஸ்ஸெல்லாம் டிண்டட் கிளாஸ், அதுலெ உருவம் ரிஃப்லக்ட் ஆகும்கிறது அதுக்குத் தெரியலெ. அந்த பக்கம் திரும்பிக்கிட்டா யாரும் தன்னை பார்க்கமாட்டாங்கன்னு  நினைப்பு. இந்த ஷைத்தான் அந்த மொசரக்கட்டையே பாத்துக்கிட்டிருந்தது அதுக்கு தெரியாது. ஏன் இந்த கூத்து சாதாரணமா இருந்தா எவன் பார்க்கபோறான்? அங்கே ஒரு ஷைத்தான் ஆட்டம்போட்டு இந்த ஷைத்தானை கூப்பிட்டுட்டான்.

ஹிஜாப் அவசியம்தான், அதை நான் மறுக்கவில்லை. ஹிஜாபை அணிந்துக்கொண்டு மற்றவர்கள் கவனத்தைக் கவர்வதுபோல் சேட்டைகள் செய்வதல்ல. சில இடங்களில் நடக்கும் சில கூத்துக்கள் ஹிஜாபை அசிங்கப்படுத்துவதாக இருக்கிறது. இவைகளைப் பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் ஹிஜாபின் தடை சரியாகத்தான் படுகிறது. சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் இஸ்லாமிய சட்டத்தை நாமே அசிங்கப்படுத்துகிறோம்.

பொம்பளைங்கள்லாம் வேலைக்குப் போகக்கூடாது, ஏன்னா பிற ஆடவர்களோடு பேசப் பழக வாய்ப்பிருக்கிறது அப்டீன்னு இஸ்லாத்தை காண்பிச்சு  சவுதியிலே தடை விதிக்கப்போவதாக இந்திய பேப்பர்லெ செய்தி வந்திருந்துச்சு. இதை பொதுவான கண்ணோட்டத்துலெ வச்சுப் பார்த்தா படிச்சிட்டு இருக்கிற பொம்பளைங்க வூட்லெ உட்கார்ந்திருக்க வேண்டியதுதானா? அவங்க என்ன புள்ளை பெறும் மெஷினா? அவங்கள்ட்ட உள்ள potentiality எப்படி வெளிவரும்? இல்லை அது வரவேக்கூடாதா? இல்லை அவர்கள் அடுக்களை அடிமையா?

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்கள் ஸ்கூல் ஸ்கூலாப் பார்த்து வெடிவச்சு தகர்த்தாங்க, ஏன்? அவங்க படிக்கக்கூடாது. கல்வி ஆண்களுக்கு மட்டும் என்று குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ சொல்லப்பட்டிருக்கிறதா? எவ்வளவு காலத்துக்கு முல்லாக்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவார்கள்?

இப்பொ நாம முப்பத்திமூனு சதவீதம் கொடுக்க படாத பாடு பட்டுக்கிட்டிருக்கோம். அப்பவே ரசூலுல்லாஹ் மூனுலெ ஒரு பங்கு(33%)ன்னு சொல்லிட்டாங்க. அது சொத்துக்கு மட்டும்தான்னு வரட்டு வாதம் பண்ணிக்கிட்டு குர்ஆனையும் ஹதீஸையும் புரிஞ்சிக்காமலே ஆதாரம் காண்பிச்சிக்கிட்டிருக்கோம்.  

ஒன்னுமட்டும் நல்லா தெரியுது, அல்லாஹ்வுடைய கருணை, மன்னிப்பு மட்டும் இல்லைன்னு வச்சுக்குங்க, அவன் பக்கம் யாரும் இருக்க மாட்டாங்க ரசூல் மட்டும்தான் இருப்பார்கள். பாக்கி எல்லோரும் இந்த (ஷைத்தான்) பக்கம்தான்.

***

நன்றி : ஹமீது ஜாஃபர்

***

மேலும் பார்க்க :

ஒபலீஸ்க் ஷைத்தான் – ரமீஸ் பிலாலி

ஷைத்தான் : தாஜ்

15 பின்னூட்டங்கள்

 1. 11/11/2010 இல் 12:12

  அருமையாக உள்ளது. யாருங்க அந்த ஹமீது ஜாஃபர். வாழ்த்துக்கள். இதையே எனது பாணியில் மன்ப ஒரு கட்டுரையில் எழுதி இருந்தேன். இவர் எளிமையாகவும் தெிளவாகவும் அதனை எழுதி உள்ளார்.
  ———-
  ஆப்ரஹாமிய மதங்களான யூத – கிறித்துவ – இஸ்லாமிய ஆதித்தொன்மமான ஆதாம் – ஏவால் கதையாடலை எடுத்துக் கொள்வோம். இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் (tree of knowledge) உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான். இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பதுடன், அறிவைப்பெறுதல் என்பதே இறைவனால் விலக்கப்பட்டதாக குறியிடப்பட்டுள்ளது. அதாவது அறிவிலிருந்து விலகிச்செல் என்பதுதான் இறைவனின் முதல் கட்டளை. செய் என்பதல்ல செய்யாதே என்பதுதான். இந்த தொன்மத்தின் மற்றொருக்கூறு அந்த விலக்கப்பட்ட கனியை சாத்தான் பாம்பு உருவெடுத்து ஏவாலின் காதில் உண்ணும்படி சொல்கிறான். இங்கு சாத்தானின் கட்டளை செய்யாதே என்பதல்ல, செய் என்பதுதான். இறைவன் விலக்கு என்றால் சாத்தான் உடன்படு அதாவது ஏற்றுக்கொள் என்கிறது.

  பாம்பு ஆதிகாலந்தொட்டு வரும் எல்லா பெருமதங்களிலும் பல வடிவங்களில் உள்ளடக்கப்பட்ட ஒரு தொன்மக் குறியீடாகும். பாம்பு என்பது லிங்கத்தைக் குறிக்கும் அதிகாரத்திற்கான ஒரு தொல்மனப்படிவம் என்பதாகக் கொண்டு ஏவாலிற்குள் ஏற்பட்ட இச்சையின் ஒரு குறியீட்டு வடிவமாக அதனை வாசிக்க முடியும். எது எப்படியானாலும், ஏவால் அக் கனியை உண்ணுகிறாள், அவளது அந்த முதல் பாவத்தை ஆதாமும் ஏற்கிறான். உடனே அவர்களிடம் அம்மணம் பற்றிய வெட்க உணர்வும் அதாவது இறைவனின் படைப்பான அவர்களிடம் தனித்ததான ஒரு தன்னுணர்வும் வருகிறது. இங்கு அறிவும், பாலுந்தமும் நுட்பமாக இணைவதைக் காணலாம். இக்கணத்திலிருந்து அறிவு எந்திரம் என்பது இயங்கத் துவங்குகிறது. அறிதல் என்கிற மரத்தின் கனியை புசித்தபின் நல்லது கெட்டது பற்றிய அறிவு ஏற்படுகிறது. இதன்பொருள் நல்லது கெட்டது என்பதை அறிவதே இறைவனால் விலக்கப்பட்டுள்ளது என்பதும், அது சாத்தானின் சதிச்செயல் என்பதுமே. ஆக, நல்லது, கெட்டது மற்றும் நன்மை, தீமை என்பதான எதிர்மைகள் எல்லாம் சாத்தனின் செயல் என்பதான ஒரு உள்ளர்த்தம் இதில் உள்ளது.

  இந்த மீறலுக்காக இறைவனால் அவர்கள் சபிக்கப்படுகிறார்கள். சுவர்க்கத்திலிருந்து நீக்கப்பட்டு பூமியை அடைகிறார்கள். பசி, பாலியல் என்கிற இயல்புந்துங்கள் இயங்கத் துவங்குகிறது. இறைவனின சாபம் இவை இரண்டினை அடைவதற்காக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும்படி அவர்களை துரத்துகிறது. வாழ்க்கை எனும் ஆதித்துயர் இப்புள்ளியில்தான் துவங்குகிறது. ஆக, வாழ்க்கையின் துவக்கம் இறைவனின் விலக்கத்திலிருந்தும், சாத்தானின் உடன்படும் ஆற்றலிலிருந்தும் துவங்குவதாக இக்கதையாடல் உள்ளது. இறைவன் உயிர்த்தலுக்கான மூலம் எனில் சாத்தான் வாழ்தலுக்கான மூலமாக உள்ளான். ஆக, தன்னை உணர்தல், அறிதலைப் பெறுதல் ஆகியவற்றின் வழியாக வாழ்தல் என்கிற தொழில்நுட்பம் இயங்கத் துவங்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இன்று நாம் வாழ்வதே சாத்தானின் சதிச்செயலால் விளைந்தது என்பதே. ஆக, தன்னை அறிதல் என்பதே இறைவனுக்கு எதிரான சாத்தனின் ஒரு சதித்திட்டம்போல சொல்லப்படுகிறது இக்கதையாடலில். இதன் எதிர்நிலையில் தன்னை மறத்தல் என்பது இறைநிலை எனச் சொல்லலாம். ஆதிச் சமூகங்களிலிருந்து இந்த இறைநிலைக்கான கூறுகளாகத்தான் மது குடித்தல் என்கிற செயல் இறைவழிப்பாட்டுடன் இணைந்து வந்துள்ளது.

  — முழக்கட்டுரையும் நீங்கள் வாசிக்க மாட்டீர்கள். அது ஹராம். அதனால் பகுதியை தந்துள்ளேன். ஹராம் பரவாயில்லை என்றால் இங்கு வாசியுங்கள். http://tamilbodypolitics.blogspot.com/2009/08/2.html

  உங்களிடம் தந்த எனது நூலிலும் உள்ளது. அதை படிக்கம் தண்டனை வேறா? என்கிற குரல் கேட்கிறது…

  அன்புடன்
  ஜமாலன்.

  • 11/11/2010 இல் 12:22

   ஜாஃபர் நானா மஞ்சக்கொல்லைக்காரர். நாகூரில் கல்யாணம் செய்திருக்கிறார் (அதனால் நாகூர் எழுத்தாளர்கள் லிஸ்டில் இணைத்துக் கொண்டேன்!) ஹஜ்ரத் வஹாப்சாஹிபின் பிரதான சீடர். இரு வாரங்களுக்கு ஒருமுறை ‘தேரா’ போனால் அவரை மட்டும்தான் பார்ப்பேன். என்னை விட அவர் பெரிய ஷை… வேண்டாம், நூருல் அமீன் பாய் கோபித்துக் கொள்வார்!

   //அதை படிக்கும் தண்டனை வேறா? // என்ன அப்படி சொல்லிட்டீங்க ஜமாலன்? படிச்சேன். படிச்சேன். படிச்சேன். போதுமா? இணையத்தின் இணையற்ற சொத்து ஐயா நீர்.

   • 11/11/2010 இல் 19:55

    அஹா…. அருமையான விளக்கம் நுணுக்கமாக எழுதியிருக்கிறீர்கள் ஜமாலன் சார். பாராட்டுக்கள். விவிலியத்தை நன்றாக எடுத்தாண்டுள்ளீர்கள். இப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று எனக்குக்கூட தோன்றவில்லை. எதோ மனதில் பட்டதை எழுதினேன், அவ்வளவுதான்.

  • மஜீத் said,

   12/11/2010 இல் 03:23

   “தண்டனை” எனக்கும் கிடைத்ததை இங்கே நினைவுபடுத்திடும் இந்த இனிமையான நேரத்திலே, கௌடில்யர் என்று அழைக்கப்பட்ட‌ சாணக்கிய திருமகனாரின் பொன்னான கருத்துக்களைக் கொண்ட அர்த்தசாஸ்திரம் சொன்ன விதிகளின்படி, இந்த ஆட்சி நடைபெறுவதை, டாஸ்மாக் திட்டத்தை ஆரியத்திருமகளார் ஆரம்பித்துவைத்த திட்டமென்பதால் நிறுத்தாமல், தொடர்ந்து நடத்துவதிலிருந்தே ஆன்றோர்கள் அறிந்துகொள்ள முடியும் …… (போதும், முடியலை)

 2. மஜீத் said,

  11/11/2010 இல் 14:28

  முதுகுவலி கிடக்குது நானா,
  எழுதுங்க;
  நிறுத்தாம‌
  எப்படியாவது!

  பொக்கிஷங்கள் வெளியே வந்தே ஆகவேண்டும்
  அப்பத்தான் அவை பொக்கிஷங்கள்னு அறியப்படும்

  அருமை! அருமை!!

 3. 11/11/2010 இல் 20:06

  எதோ ஆபிதினுடைய அனுகிரஹத்தால் அப்பப்ப எழுதுகிறேன். ஹஜ்ரத் சொல்வார்கள், “ஷைத்தான் வந்தாத்தான் பேச்சே வரும்” என்று ஜஃப்ருல்லா நானாவைப் பார்த்து. அப்படித்தான் இங்கேயும். அவர் கேட்காவிட்டாலும் யாராவது பயான் கேட்டுவிட்டு ரூமில் வந்து உளருவார்கள். அப்பத்தான் போதையெ வரும்.

 4. நாகூர் ரூமி said,

  11/11/2010 இல் 21:30

  அன்புள்ள ஜாபர் நானா, நான் முகப்புத்தகத்தில் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஒரு செய்தி வைத்ததற்காக எனக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது! நீங்களெல்லாம் ஆளுக்காள் எவ்வளவு அநியாயம் பண்ணிட்டிருக்கீங்க? ரொம்ப பொறாமையா இருக்கு.

 5. 12/11/2010 இல் 17:26

  ரூமி சார், தீபாவளி முடிஞ்சு போனதாலெ தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லமுடியலெ, அவங்களுக்கு நரகாசூரன் ஷைத்தான், நமக்கு நாம(ஒபலீஸ்க்)தான் ஷைத்தான். அதனாலெ இது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தாக இருக்கலாம், ஆனால் ஆபிதீன் பெருநாள் வாழ்த்து ஒன்னு ரெடியா வச்சிருக்கார். அதனாலெ வாலாடக்கூடாது.

 6. 12/11/2010 இல் 18:45

  அன்புள்ள ஹமீது ஜாஃபர் நானா!
  உங்கள் குருநாதருடன் இருக்கும் போது நடந்த படிப்பினையூட்டும், சுவராஸ்யமான விசயங்களை பற்றி எழுதுங்கள்.

 7. 12/11/2010 இல் 19:25

  நப்ஸே அம்மாராவின் தீங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மரணம் வரை முயல வேண்டும் என்பது பற்றி எனது குரு நாதர் பல கதைகளின் மூலம் விளக்குவார்கள். அதில் ஒன்று:
  ஒரு மலைப்பாம்பு ஒன்று கடும உறைபனியின் காரணமாக உறைந்து போய் அசைவற்று கிடந்ததாம், சும்மா கிடக்கிற பாம்பை பார்த்த சிறுவர்கள் எல்லாம் பாம்பு செத்துடுச்சின்னு நெனச்சி அதன் பக்கத்தில் போய் விளையாட ஆரம்பித்தார்கள். பாம்பு சும்மா கிடக்கவே அதை சீண்ட ஆரம்பித்தார்கள். அப்போதும் பாம்பு சும்மா கிடக்கவே ஓவராக சீண்ட ஆரம்பித்தார்கள்.அந்த நேரத்தில் வெயிலின் காரணமாய் உறைபனி விலக பாம்பு லேசாக உசும்பியது. சிறுவர்கள் தலை தெரிக்க ஓடினார்கள்.

  சாகும் வரை நம் நப்ஸே அம்மாரா சாகாது என்பதை விளக்கியது எங்கள் நானாவின் கதை. குண்டக்கமண்டக்கவா எழுதும் போது அல்லாட பயம் தான் இல்ல மச்சிட பயம் கூடவா இல்லை.

 8. 13/11/2010 இல் 20:39

  அமீன், பதில் கொஞ்சம் லேட்.
  அல்லாவுக்கு நான் பயப்படுவதில்லை. ஷைத்தானுக்குத்தான் பயப்படுகிறேன். ஏன், அவன்தானே துஷ்மன், வழி கெடுக்கிறவனும் தொல்லைக் கொடுப்பவனும் அவனே! அதனால்தான்.

  மச்சி நாம இலுத்த இலுப்புக்கு வருவாக!!

 9. 13/11/2010 இல் 23:14

  எல்லா அமைப்பு முறைகளையும் கேள்விக்குள்ளாக்கி மறுபரிசீலனை செய்யும் பின்நவீனத்துவம் என்ற நவீன டிரண்டுக்கு – (அதாவது) நீங்களும் உஜாலுவுக்கு மாறிட்டீங்களா நானா!. (இறை)அச்சத்துக்கும் ஆதரவுக்கும் மத்தியில் தான் ஈமான் இருக்குங்குற பழமைவாதமே எனக்கு போதும். இந்த ஆட்டத்துக்கு நான் வரலை சீதேவி!.

 10. maleek said,

  14/11/2010 இல் 06:19

  நமது தமாஷ்கள் எல்லாம் விண்ணைத் தாண்ட வேண்டாம்……யாருக்கும் டெரியல் ஆக ஆசையா?

  • மஜீத் said,

   14/11/2010 இல் 11:59

   அதென்ன “டெரியல்”? வெளக்குங்களேன் ப்ளீஸ்…

 11. தாஜ் said,

  14/11/2010 இல் 11:19

  ஜெகபர் நாநா…
  உங்களின் சிறந்தக் கட்டுரையை
  வாசித்தேன்.
  நன்றாக இருந்தது.
  தொடரட்டும் யுத்தம்…
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s