மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் – தீன்

ஆத்மாநாம்-ஐ படித்துவிட்டுத்தான் ஆடிட்டர்கள் கவிதை எழுதவேண்டுமென்று உத்தரவா போட இயலும்? அவர்கள் எழுத முன்வருவதே முதலில் பெரிது. தம்பி காதர் நிறைய எழுதட்டும். இருக்கவே இருக்கிறது இந்தத் தளம் – நாகூருக்காக. 

நாகூர் தீனின் மூன்று புதிய கவிதைகள் இங்கே…

*

கவிதை

கடற்கரை ஓரத்தில்
பச்சை புல்வெளியில்
தனிமையின் மௌனத்தில்
கொட்டும் மழையில்
கதவுகள் தட்டும்

கர்ப்பம் தரிக்காமல் பிரசவிக்கும்
அழைக்காத விருந்தாளியாய் வந்து நிற்கும்
ரயில் பயணங்களில் தலை நீட்டும்
கழிவறைக்குள் வந்து கை காட்டும்

ஊமையாய் வாய் பேசும்
பாரம் தூரமாக்கும்
கண்மூடி வடித்தாலும் கண்ணை திறக்கும்

சூரியனை குளிர வைத்து
நிலவை சூடேற்றி
இருட்டின் வெளிச்சத்தில்
இல்லாத கதை சொல்லும்

மிகைப்படுத்தப்பட்ட பொய்கள்
அதற்காக
விருது கிடைத்தது மட்டும் உண்மை
***

கல்வி

தரையில் பறக்கும் பட்டம்
கனவுகளின் கடவுச்சீட்டு

நீ
நிழல் தரும் மரமா?
நிஜங்களின் வரமா?

மடமைக்கு விறகு தந்தாய்
திறமைக்கு சிறகு தந்தாய்

உன் நாற்றங்காலில்
கால் வைத்ததால்
கை ஓங்கி நிற்கிறது

உன்னை படித்ததால்
உலகம் என்னை படித்தது
உன் கருப்பு பலகையில்
வெள்ளை ஆனது மனசு

நீ
சுமை போக்கும் சுகமா?
இமை காக்கும் ரகமா?

உன் கருவறை இருட்டில்
வெளிச்சம் கிடைத்தது எனக்கு

***

விரல்கள்

விட்டுக் கொடுப்பவர்கள்
கெட்டுப் போவதில்லை
விரல்களும் அப்படித்தான்!
தன் இடத்தை
விட்டுக் கொடுத்திருக்கிறது
நகங்களுக்காக

*

நன்றி :  நாகூர் தீன் (காதர்) | dnh@pacific.net.sg

*

3 பின்னூட்டங்கள்

 1. நாகூர் ரூமி said,

  04/09/2010 இல் 19:51

  கவிதையை எடிட் செய்வது முடி வெட்டுவது மாதிரியானதுதான். வெட்ட வெட்ட முளைக்கும் என்றாலும், வெட்டியவுடன் அழகு கூடும். தீனும் ஆபிதீன் சொல்வதுபோல முதலில் நிறைய எழுதட்டும். பிறகு வெட்டிக் கொள்ளலாம். இந்த மூன்று கவிதைகளில் விரல்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விட்டுக் கொடுப்பவர்கள் நிச்சயம் கெட்டுப் போவதில்லைதான். உண்மை. அழகான உண்மை. அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 2. தாஜ் said,

  06/09/2010 இல் 10:20

  தம்பி காதர்,
  சிறிது காலம்
  வைரமுத்து கவிதைகளை
  வாசிப்பதை நிறுத்த வேண்டும்.
  கவிதை இன்னும் பிரமாதமாக
  வெளிப்படும்.

  விரல்கள் அழகு கவிதை.
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: