ஏப்ரல் 1லிருந்து ஏப்ரல் 14 வரை ஜபருல்லா நானா எனக்கு அனுப்பிய S.M.Sகளில் முக்கியமான இரண்டு மட்டும். தினம் அனுப்பும், ‘எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு ஊருக்கு வாங்கனி’ யை இங்கே சேர்க்கவில்லை. ‘கவிதை’களுக்கு நீங்களே தலைப்பு வைத்துக்கொள்ளலாம்.
*
ஏப்ரல் 1
இன்று முட்டாள் தினமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்
முட்டாளிடம்
நல்ல மனம் இருக்கும்
அறிவாளியிடம்?
*
ஏப்ரல் 14
யா ரசூலுல்லா
நீங்கள்
ஹீரா இருட்டில் அமர்ந்தீர்கள்
எங்கள் மனங்கள்
வெளிச்சமாயின!
– இஜட். ஜபருல்லா
*
மறுமொழியொன்றை இடுங்கள்