ஜபருல்லாவின் தூது இலக்கியம் – ஒரு கண்ணோட்டம் : அப்துல் கையும்

நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்‘ என்று ‘திண்ணை’யில் எழுதினாலும் எழுதினார் எங்கள் அப்துல் கையும், ஒரே பாராட்டு மழை! அவைகளைத் தனியே – அவர் அனுமதியுடன் – கீழே தொகுத்திருக்கிறேன். அவரை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கு நாகூர் சார்பாக நன்றி. நாகூர் – வேடிக்கைகள் மட்டுமே நிறைந்ததல்ல, ‘சஃபர்’ என்ற சோகமும் உள்ளடக்கியது. நாகூர் என்று இல்லை , தமிழ் முஸ்லீம்கள் வசிக்கும் எல்லா ஊர்களிலும் இந்த சோகம் உண்டு. பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் பயணம் செய்ய துரத்தப்பட்டு பாழான ஆயிரமாயிரம் இளைஞர்கள்… அவர்களைப் பற்றியும் அவர் எழுத வேண்டும். எழுதுவார். எழுத்துப் புயலே , எழு! இப்போது ஜஃபருல்லா நானா பற்றி அது ‘உட்கார்ந்து’ எழுதிய கட்டுரை:

***

ஜபருல்லாவின் தூது இலக்கியம் – ஒரு கண்ணோட்டம்

அப்துல் கையும்

கவிஞர் இஜட். ஜபருல்லாஹ் எழுதிய ‘நிலவு சொன்னது!’ என்ற வித்தியாசமான கவிதையை நான் அண்மையில் படித்து இரசித்தேன். “தூது விடு படலம்”  என்பது ஒரு தனி ‘ட்ராக்’ இலக்கியம். பக்தியை ஊட்டும் நூலாகப் பிறந்த இது, நாளடைவில் சிற்றின்ப இலக்கியமாக மாறியது தனிக்கதை. ‘அஃறிணை’ பொருட்களை அவை பேசாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவைகளோடு உரையாடுவது கவிஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ‘ஸ்பெஷல் லைசன்சு’.

அன்னம் விடுதூது, புறா விடு தூது, நாரை விடு தூது, கார் விடுதூது, வண்டு விடு தூது என்று நிற்பன, நடப்பன, பறப்பன என்று அனைத்தையும் (போஸ்ட்மேனைத் தவிர) தூது அனுப்புவார்கள் இந்த ‘லைசன்சு ஹோல்டர்கள்’. “நாராய் நாராய்! செங்கால் நாராய்!” என்ற செய்யுளை பள்ளிப்பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்.

(நாகூர்ப்புலவர்களாக இருந்திருந்தால் காடை, கவுதாரி, கொசு உல்லான், கோட்டுல்லான், குயில், பொன்னாந்தட்டான் என்று உண்ணும் பறவைகளாகப் பார்த்து தூது அனுப்பியிருப்பார்கள்)

காளிதாசன் ‘மேக சந்தேசம்’ என்ற காவியம் படைத்தான். “ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ” என்று கண்ணதாசன் டி.எம்.எஸ். வாயிலாக மேகத்தை தூது விட்டான். “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு” என்று கவிஞர் தா.காசிம் இசைமுரசு நாகூர் ஹனீபா வாயிலாக தூதுவிட்டார். “போகும் மேகங்களே! பூமான் நபிக்கு ஸலாத்தைச் சொல்லுங்களேன்! மதினாவில் வாழும் மஹ்மூது நபிக்கு மனத்தூதைக் கூறுங்களேன்” என்று அடியேனும் பாடகர் ஜெய்னுல் ஆபிதீன் மூலமாக தூதுவிட்டேன்.

இவையாவும் ‘ஒன் வே டிராபிக்’ தூது. இதோ கவிஞர் இஜட். ஜபருல்லா விடுத்திருக்கும் தூதைக் கவனியுங்கள். இது “டூ வே டிராபிக்”. இங்கிருந்து நிலவை அனுப்புகிறார் தூது. அது போகிறது; போய் பதில் செய்தியையும் கொண்டு வருகிறது

“அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே” இன்ற இசைமுரசின் இனிமையான் பாடலில் ஒரு வரி வரும். “தென்றல் அதை தூது விட்டேன் திரும்பவில்லையே..!”. அது எப்படி திரும்பி வரும்? காரணம் போன இடம் அப்படி. புஷ்பங்களின் மகரந்தமாம் மதினப் பூமியில் அதற்கு புரள வேண்டும்; உருள வேண்டும்; போலிருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனால் அந்த கஸ்தூரி மணத்தில் லயித்துப் போய் அங்கேயே சங்கமித்திருக்க வேண்டும். அதனால்தான் தென்றலானது திரும்பவில்லை.

கவிஞர் இஜட். ஜபருல்லாஹ் தூதுவிட்டது நிலவை அல்லவா? தென்றல் இல்லாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது வாடைக் காற்று. அதை வைத்து நாம் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு போய் விடலாமே? நிலவு இருப்பது ஒன்றே ஒன்று அல்லவா? அது இல்லாமால் போனால் இரவு வெளிச்சத்திற்கு என்ன செய்வது? எப்படி பிறை பார்ப்பது? எங்ஙனம் பெருநாள் கொண்டாடுவது? இவ்வளவு பிரச்சினை இருக்கிறதே?

எனவேதான் எங்கள் பூமான் நபியைக் கண்டபின்பும் அதை திரும்ப வரச் செய்கிறார் நம் கவிஞர். அத்தனை ஒரு மகத்துவம் நிறைந்த இடத்திற்குச் சென்ற நிலவானது வெறுமனே எப்படி வரும்?

சில நல்ல செய்திகளைத் தாங்கி வருகிறது. அறிவுரைகளைச் சுமந்து வருகிறது. புத்திமதிகளை ஏந்தி வருகிறது. போதனைகளோடு புறப்பட்டு வருகிறது. இனி கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதை வரிகளில் மூழ்குவோம் :

நிலவு சொன்னது
ஜபருல்லாஹ்

விண்ணகத்தில் சதிராடும்
வெண்ணிலவை நான் கேட்டேன்
அண்ணல்நபி பூமுகத்தைக் கண்டாயா….? அவர்
சொன்னமொழி எனக்கெடுத்துச் சொல்வாயா?

கன்னல்நபி நாயகத்தை
கண்டுவந்த உணர்வதனை
விண்டுரைக்க வார்த்தையில்லை என்றது..! அதை
விடவில்லைநான் அதனால் சொன்னது…!

அண்ணலாரின் ஒளிமுகத்தை
என்முகத்துக் கீடாக்கி
பாட்டெழுதும் அறியாமை சொல்லிவந்தேன்..! – நெஞ்சைப்
பண்படுத்தும் போதனைகள் அள்ளி வந்தேன்..!

ஏழைகளுக் கிரங்கச் சொல்லி
என்னிடத்தில் சொல்லச் சொன்னார்…!
ஏற்றுவந்து கூறிவிட்டேன் செல்வர்களே..! பணம்
எத்தனை நாள் நிலைத்திருக்கும் சொல்லுங்களேன்…?

இம்மைதரும் சுகங்களிலே
மறுமையினை மறந்திடாதீர்..!
என்றுஎன்னை நினைவூட்டச் சொன்னார்கள்..! நபிகள்
என்றும் உலகம் சதமில்லை என்றார்கள்..!

ஆளுகின்ற பதவியெல்லாம்
‘அல்லாவின் அடிமை’ யென்ற
பதவிக்குமுன் ஈடாகாது என்றார்கள்..! நபிகள்
பக்குவமாய் எடுத்துரைக்கச் சொன்னார்கள்..!

மூமீன்கள் பிளவுபட்டால்
ஏமாளி ஆனார்கள்…!
ஏனிந்த வேற்றுமைகள்..? என்றார்கள் – நபிகள்
என்னைத்தான் கேட்டுவரச் சொன்னார்கள்..!

சுவனசுகம் துறந்தவராய்
நரகநெருப்பை நாடுகின்றார்..!
சொல்லிவிடு வெண்ணிலவே என்றார்கள்…! இதை
சொல்லும்போது முகத்தில்வாட்டம் கொண்டார்கள்…!

எம்பெருமான் சொன்னவைகள்
எல்லாமும் சொல்வதென்றால்
எந்தன்மனம் தாங்காது என்றது..! நிலவு
என்னை விட்டு வானில்விரைந்து சென்றது…!

(இந்த தேர்தல் களத்தில் ஒற்றுமை காட்ட வேண்டிய மூமீன்களாகிய நாம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் இத்தருணத்தில் இக்கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது)

– அப்துல் கையூம்
***

நன்றி : அப்துல் கையும்

***

பாராட்டு மழை ! :

என் தாய் வழி சொந்தங்கள் இப்போது வசிப்பது காரைக்காலில். அவர்களைப் பார்க்க எப்போதாவது போகும்போது நாகூருக்கும் போய் வருவது வழக்கம். நாகூரில் தங்குவதற்கு
எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லாமல் போய், இறுதியில் தர்ஹாவிலேயே தங்கினோம்.

அங்கே கிடைக்கும் சிலோன் லக்ஸ் சோப் கூட ஒரு புத்துணர்ச்சி வாசனை தரும்.

மறுநாள் காரைக்கால் போய் நடந்ததை சொன்னால் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..எல்லோரும் தர்ஹாவில் தங்குவதற்காக வருவார்கள்..நீங்க என்னடான்னா ஹோட்டல் தேடிட்டு இருந்திருக்கீக என்று.. அவ்வளவு பெரிய தர்ஹாவை சுத்தி வர்றது கூட ஒரு நாள் பிடிக்கும்.

“மாப்பு செய்யுங்க பாவா” – வேடிக்கை மனிதர்கள்.. 🙂

– அஹ்மது ஜுபைர்

***

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று

அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

***

அன்பின் அப்துல் கையூம்,

அருமையான விளக்கம். அற்புதமான கட்டுரை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

***

வேடிக்கையாக எழுதியிருந்தாலும் விபரமாக இருந்தது

அன்புடன் புகாரி

***

சும்மா சொல்லப்படாது… வேடிக்கைக்கு இப்படி ஒரு கட்டூரை போட்டு செம வேடிக்கை பண்ணீட்டீங்க… நாகூர் ஹனிபா பத்தி ஒரு வரியும் காணும்?… தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். தடுக்கி விழுந்தால், கவிதை இயற்றும் கவிஞர்களின் காலில்
விழுவோம்… என்று சொல்லிருக்கீங்க… அவ்வளவு கவிஞர்களில், ஒற்றுமை உண்டா?… உண்டெனில் ஏதேனும் பத்திரிக்கை போட்டிருக்கலாமே… செய்திருக்கிறார்களா?.. என்றும் தெரியவில்லை. ஊர்ப்பாசம் என்று எழுதிருந்தாலும், மெய்யாலுமே நாகூர் பத்தி தெரியாத விசயங்கள் பலவும் சொல்லியிருக்கீங்க. அருமையான கருத்துள்ள கட்டுரை.

மிக்க அன்புடன்
வேல்

***

எனக்கு நாகூர் என்றதும் நாகூர் ஹனிபா தான் ஞாபகம்.
எனக்கும் தான்

பூங்குழலி

***

நாகூர்! நினைத்தாலே ஆண்டவரின் நினைவு!

என்ன.. ஒரு ஆறு வயசிருக்குமா..தெரியவில்லை..  !ஆண்டவருக்கு முடி இறக்குவதற்கு கூட்டிச்சென்றார்கள் அது போது…….

\\ அந்த பொன்மாலைப் பொழுதில் தர்காவிலிருந்து குண்டுச் சத்தம் (வெடிச்சத்தம்) கேட்க, சிறகடித்து வானுயர்ந்த கோபுரங்களை வட்டமிடும் புறாக்களின் கூட்டம் கண்கொள்ளாத வேடிக்கையாக இருக்கும் \\

ஆமாம் இப்போதும் கூட மனக்கண்ணில்! கனவுபோல!! அந்த புறாக்கள் சட சடவென்று பறந்தது…!!

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்!

நன்றி அப்துல், பழைய்ய்..ய நினைவுகளை மீட்டதற்கு 🙂

மீனா

***

குலாம் காதிர் தொப்பிக்கடை
ஜெ.மு.சாமி புடவைக்கடை
மண்சட்டியில் கிடைக்கும் விரல் நீள குலாப் ஜாமுன்
எல்லாமே வேடிக்கைதான்
விளையாடுவதை ‘லாடுவது’ என்பதும்
வாங்கி வா என்பதை ‘ வேங்கி வா’ என்பதும்
‘ஏங்கனி நீமரு’ என்பதும்
எங்களுக்கு வாடிக்கையான வேடிக்கை
நெல்லைத் தமிழ்
மதுரை தமிழ்
சென்னை தமிழ்
என்பது போல நாகூர் தமிழ்
பிரசித்தி பெற்றது

அன்புடன்
சாபு (சடையன் அமானுல்லா)

***

அப்துல் ஐயா,

நீங்க எழுதியதைப் படித்தவுடன்,
“அந்த நாள் ஞாபகம் வந்ததே..”
நாகூர் தர்காவுக்கு பல முறை சென்றது…

நாகப்பட்டிணம் அவுரித்திடல் (இப்பொழுது அது, நாகை பேருந்து நிலையம் ஆகி விட்டது) அருகில் நின்று கொண்டு, பல வருடங்கள் “சந்தனக் கூடு” பார்த்தது… பள்ளித் தோழர்கள் ஹாஜா…மற்றும் பலருடன் பொழுது போவது தெரியாமல் விளையாடியது… இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் நுழையும் முன்பு, வாசலில் கால் கழுவி செல்வது…(அப்பொழுது அச்சிறு வயதில், அதன் அர்த்தம் தெரியாது; இப்பொழுதும் அப்பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை;  சென்னை வருகை, எல்லா நண்பர்களுடைய தொடர்புகளையும் துண்டித்து விட்டது;  காலம் ஒரு பெரிய சக்கரம்; எவர் தப்ப முடியும் அதனிடமிருந்து?)

பாலாஜி

***
அப்துல் கையுமின் பதில்கள் :

1)
நன்றி வேல்.பாரட்டுக்கு நன்றி.

மேரா நாம் ஜோக்கர் படம் வெளிவந்த நேரம் அது. இந்தியாவிலிருந்து ஒரு பெரிய அரசியல் தலைவர் ரஷ்யா நாட்டுக்கு சென்றார். “ராஜ்கபூர் நாட்டிலிருந்தா நீங்கள் வந்திருக்கீறீர்கள்? என்று அங்குள்ளோர் அவரைக் கேட்டார்களாம்.

நான் பஹ்ரைனுக்கு வந்த புதிதில் மளையாளி நண்பரொருவர் என்னைப் பார்த்து “எந்த ஊர்?” என்று கேட்டார். நான் “நாகூர்” என்றேன். “அப்படியா? நாகூர் ஹனீபா பிறந்த ஊரா?” என்று ஆச்சரியப்பட்டார். “நாகூர் ஹனீபாவை நீங்கள்
நேரடியாக பார்த்திருக்கிறீர்களா?” என்றும் வினவினார்.

இசைமுரசு அவர்களை நான் சிறு வயது முதல் “அத்தா” என்றுதான் அழைப்பேன். நானும் அவர் மகன் நவுஷாத்தும் ஒன்றாகவே பள்ளிப் பருவத்திலிருந்து ஒன்றாக படித்தவர்கள். என் மீது அத்தாவுக்கு அவ்வளவு பிரியம். அவர்களது “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா” என்ற பாடலுக்கு HMV இசைத்தட்டில் கோரஸ் பாடியவர்களில் நானும் ஒருவன். இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.

சாரி வேல். நாகூர் ஹனீபாவை கட்டுரையில் சேர்க்காததுதான் தப்புதான். அவர் ஒரு சரித்திரம். ஆகையால் இந்த ‘வேடிக்கை விளையாட்டில்’ அவர் இடம்பெறவில்லை

அப்துல் கையூம்

2)

ஒரு கவிதை நூல் எழுதியிருக்கிறேன். பெயர் “அந்த நாள் ஞாபகம்”. ஆனால் அதற்கு ஒரு தனி அகராதி வைத்துக் கொண்டுதான் படிக்க வேண்டும்.

எனது “நாகூரின் மண்வாசனை” வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளது. வாங்களேன் வருகை புரியுங்களேன். http://nagoori.wordpress.com

சந்திப்போம்

அப்துல் கையும்

****

தொடர்புடைய சுட்டிகள் :

நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்’ – அப்துல் கையும் (திண்ணை)

அந்த நாள் ஞாபகம் – அப்துல் கையும்

2 பின்னூட்டங்கள்

 1. 22/04/2009 இல் 15:03

  “நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்”
  – வேடிக்கையும் விதி கொடுவினையும் (நாகூர் மொழியில்)

  ஜபருல்லாஹ் நானா கவிதை – நிலவு சொன்னது
  – தவுடு

  பாராட்டு மழை
  – ஒரு நாகூர் ஜோக்
  “என்னாங்கனி மழை இப்டி பெய்யுது”

  “மழை இப்படி பெய்யாம இப்படியா பெய்யும்” – கையை கீழிருந்து வானத்தின் பக்கம் காட்டுகிறார்

  “திருத்தவே முடியாது..”

  “ஆமா.. இவரு தான் திருவுடிநாதன் (வாத்தியார்) திருத்த போறாரு.. ஓய் கேட்ட கடன கொடுங்கணி..”

  – கொடுமை (இது நான்!)

 2. 26/04/2009 இல் 07:29

  வாங்க துரை!

  ‘வேடிக்கை’ இருக்கட்டும், நாவல் என்னாச்சு? முடித்து விட்டீர்களா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: