தேர்தல் மஹாத்மியங்கள்! – தாஜ்

 தேர்தல் மஹாத்மியங்கள்!

 தாஜ்

அன்புடன்
ஆபிதீன்…..

 
நாடாளுமன்றத் தேர்தல்-2009
அமர்க்களமோ அமர்க்களம்.
அரசியல் கட்சிகளின்
ஸ்பெஷல் ‘காப்ரே’யை
நீங்களும் ரசித்திருப்பீர்கள்தானே!

இனாம் லேப்டாப்
இனாம் சைக்கிள்
இனாம் அரிசி
இனாம் கோதுமை
இனாம் பசுமாடு கன்னுக்குட்டி
இனாம் கடன் வசதி
இனாம் கடன் தள்ளுபடி
இனாம் வீட்டு மனை
இனாம் வீடு
இனாம் மருத்துவம்
இனாம் மாதாந்திரப் பணம்
ரேஷன் சாமான்களை வீட்டிற்கு
இனாமாக கொண்டுவந்து தருதல்.
இப்படி இந்தப் பட்டியலின் நீளம் அதிகம்
எழுதி காட்டித் தீராது.
ஆண்களுக்கு…
நாளுக்கொரு வப்பாட்டி
பெண்களுக்கும்…
அதே காலக்கணக்கில் வப்பாட்டன்
தருவோம் என்பதைத் தவிர
பிற அத்தனையும்
அந்த நீண்ட பட்டியலில் இருக்கிறது.  

சென்ற சட்டசபைத் தேர்தலில்
கலைஞர் கையிலெடுத்த ஆயுதத்திற்கு
பேட்டன் ரைட்
வாங்கி இருப்பாரேயானால்
இந்திய அரசியல் கட்சிகள்
விழி பிதுங்கியிருக்கும்.
ஏதோ போகட்டுமென
இந்தியாவுக்கே
தமிழகம்
வழி காண்பித்திருக்கிறது!!

வெள்ளைக்காரனை
மண்ணைவிட்டு துரத்திய
பெருசுகள்
இந்த நாட்டிற்கு ‘மேக்-அப்’பெல்லாம் போட்டு, ரசித்து
வாய்களின் வழியே காதுகளுக்கு
சொல்லப்பட்ட குடியரசில்…
‘மக்கள் எல்லாம் மன்னர்கள்
இந்த பூமி அவர்களுடையது
மந்திரிகள் அவர்களின் எடுபிடிகள்….
அல்லது சேவகர்கள்’ என்கிறது.
யதார்த்தத்தில்….
இன்றைக்கு
சேவகர்கள் மன்னர்களுக்கு
பிச்சைபோட
போட்டா போட்டி அறிவிப்பு செய்கிறார்கள்!   

அவர்கள்
சுரண்டிக் குவித்திருக்கும்
அந்தக் குவியலில் இருந்து
தர்மம் என்றாலும் கூட
போகட்டும் எனலாம்.
நம் வரிப் பணத்தில் இருந்து
நமக்கு பிச்சை இடுவதற்கல்லவா
இந்த போட்டியும்!!
இந்த அறிவிப்பு கத்தலும்!!!

சரியாக யோசித்தால்
ஓட்டுக்கு….
வெளிப்படையான
கையூட்டு இது.
இவர்களேதான்…
ஐம்பது ரூபாய் கையூட்டு பேர்வழிகளை
செய்தித்தாளில் தினமும் பிடிக்கிறார்கள்.
என்ன லாஜிக் ஐயா இது?

தேர்தல் அறிக்கையில்
பிற கட்சிகள்
செய்யாத அறிவிப்பு ஒன்றை
ப.ஜ.க. செய்திருக்கிறது!!
அதன் தனி சிந்தனை
எப்பவும் உலகப் பிரசித்தம்!
இப்போது அது இன்னும்
பிரகாசிக்கிறது…
தங்களது கட்சி ஜெயித்தால்…
‘நமது நாட்டினர்
சுவிஸ் பேங்க்-ல்
போட்டு வைத்திருக்கும்
பணத்தை எடுத்து வந்து
அரசாங்கம் நடத்தவும்
ஏழைகளுக்கு உதவவும்
பயன்படுத்துவோம்!’ என்கிறது.

ரூம் போட்டு யோசித்து
புது புது அறிவிப்பை செய்கிறார்கள்
என்று நினைக்கிறேன்.

எல்லா அரசியல் கட்சிகளும்
அந்தவகை பணக்காரர்களுக்கு
அடிமைச் சாசனம்
எழுதி கொடுத்துவிட்டுதானே…..
அவர்கள் சிதறவிட்ட
பிச்சைக் காசில்தானே…..
ரதயாத்திரை என்றும்
தேர்தல் பவனியென்றும் வருகிறார்கள்!!
பின் எப்படி?
சுவிஸ் பேங்க்…
டிரில்லியன் டாலர்களின் மீட்பெல்லாம்?

டில்லிக்கு எவன் வந்தாலும்…
அமெரிக்காவில் இருந்து
காலையில் வரும்
‘ஒயிட் ஹவுஸ்’  Faxஐ
பார்த்துவிட்டுதானே
நாற்காலியிலேயே குந்த வேண்டும்!
இதில்.. நான்.. நாங்கள்…
என்னவேண்டிக் கிடக்கிறது?
தேர்தலே கூட தேவையா என்ன?

***

நன்றி : தாஜ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: