சனி… , சிரஞ்சீவி , தாஜ்

சனி…

அன்புடன்
ஆபிதீன்…

கவனித்த வகையில்…
இந்த நாடாளுமன்ற விசேசம்:

எல்லா மாநிலக் கட்சிகளுக்கும்
பிரதமர் பதவிமீது
கண் விழுந்திருக்கிறது.

இன்னும் கலைஞர்
அது குறித்த தனது
ஆசையை வெளிப்படுத்தாதது
ஆச்சரியமாக இருக்கிறது.

மந்திரிகள்…
இன்னொரு ஸ்பெக்ட்ரான்…
கோடிக்கணக்கில் கோடிகள்….
போதுமென நினைக்கிறாரோ என்னவோ?

அதுதான் நிஜமெனில்…
எல்லா மாநிலக் கட்சிகளைவிட
குறைவாக ஆசைப்படும்
கலைஞரை பாராட்டலாம்.

தாஜ்

பின்குறிப்பு: இந்திய சுற்றுலா வாரியத்திற்கு
ஓர் யோசனை கூறத்தோன்றுகிறது.

உலக சுற்றுலாவாசிகளை கவர
நமது பாராளுமன்ற தேர்தல் கால வைபவத்தை
முன்வைத்து விளம்பரம் செய்யலாம்.
வந்தவர்கள் குவிய வாய்ப்பு உண்டு.

***

சிரஞ்சீவி

அன்புடன்
ஆபிதீன்…

நாட்ல
‘தேர்தல் மேளா’
நடக்கும் புண்ணியத்தில்…
பொழுது கொஞ்சம் விசேசமாகவே போகிறது.
கிட்டெ இருந்து நான் பார்க்கும் ஒன்றை
தூர இருந்து நீங்க பார்ப்பவரா இருந்தாலும்
கவனிப்பில்…. ம்! 

தமிழகத்தில்
இந்த மேளா…. அத்தனைக்கு ஜோர் இல்லை.
வடக்கே கலக்குறாங்க!
உட்கார்ந்து இருந்தவங்களும்
படுத்துக் கிடந்தவர்களும்
எழுந்து
குதிக்கிற குதி
கவனத்தைக் ஈர்க்கிறது.

வஞ்சனையே இல்லாது
மம்தா பனர்ஜியும்
மாயாவதியும்
இந்த மேளாவிலும்
பிரமாதப்படுத்துறாங்க.
இவர்கள் குதிக்கும் குதியில்
பா.ஜா.க.வின்
ஆதி தாண்டவ ஆட்டம் காணாமல் போயே போச்சு.

தெற்கே….
இந்த ஆட்டத்திற்கு
ஆண்கள்தான் ஜோர்.
கருணாகரனின் ஆட்டம்
இந்த முறை களைகட்டவில்லை
என்பது ஓர் சோகம்.
முன்னால் பிரதமர்
கௌடா அந்த குறையை தீர்த்திருக்கிறார்.
உடம்பு குலுங்காது
ஆடும் அவரது ஆடாத ஆட்டம் ஜோர்.
கம்யூனிஸ்ட்டுகளின்
கதகளியும் பார்க்கப் பிடிக்கிறது.

தமிழகத்தில் எப்பவும் கருணாநிதிதான்
நம்பர் ஒன் ஆசாமி!
இந்த முறை
கொஞ்சம் முன்னாடியே
குறுக்கே புகுந்து
‘த கிரேட் மேதை’ சோ
என்னதான் ஆடினாலும்
முதல்வரின் சக்கர நாற்காலியின்
ஒரு சுற்றுக்குத் தாங்கவில்லை!
ஜெயா…
பரதநாட்டியம் கற்று தேர்ந்திருந்தாலும்
பார்த்து ரசிப்பது மாதிரி
ஆடத்தெரியவில்லை.
ஆடியவர்தான்… மறந்து விட்டது.
சட்டசபையில் சேலை உருவிப்போட்டு
ஆடிய அவரது ஆட்டமெல்லாம்
பொன்னெழுத்தில் மின்னும்
தமிழக சரித்திரம்.

ஆந்திராவில்..
சத்திய நாராயணா
ஆடிய ஆட்டத்திற்கு
கட்சி தொடங்கியிக்கலாம்
எளிதாக வென்றிருப்பார்.
அவருக்கு புத்தி சொல்ல
ஆளில்லாமல் போய்விட்டார்கள்.

தெலுங்கு தேசம்
காங்கிரஸ்
இரண்டும் அங்கே
கிழ ஆட்டம் போட
பிரஜா ராஜியம்
ஆட்டமே போடாமல்
அசத்துகிறது.

சிரஞ்சீவியின் பத்திரிகை பேச்சையெல்லாம்
விடாமல் படிக்கிறேன்.
அவரது ஒவ்வொரு வார்த்தையும்
அரசியல் ஆட்டமில்லாமல்தான் இருக்கிறது.
‘ஆந்திராவுக்கு
தேவதூதன்
விஜயம் செய்திருக்கிறானோ…!!’
நிஜமாகவே எண்ணனத் தோன்றுகிறது!

தாஜ்

***

நன்றி : தாஜ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: