வாழும் செய்திக் குறிப்புகள் – தாஜ்

ன்டபுன்அ
…….ன்தீபிஆ

எழுதுவதற்கு ஒன்றுமில்லை செய்தி.
எழுதாமலும் இருக்க முடியவில்லை.

எதுவும் இல்லாது போனாலும்
இன்றைய டைரியை எழுதலாம்.
கருணாநிதி உபயம்.
அவரது ஹாஸ்பிட்டல் டைரி
இப்பொழுது பத்திரிகையில் பிரபலம்.
நானும் எப்படியெல்லாமோ யோசிக்கிறேன்…
எதற்காக கருணாநிதியின் ஹாஸ்பிட்டல் டைரியை
பத்திரிகைகளில் பிரசுரிக்கத் தருகிறார்கள்?

புரியலை சாமி!
சுப்ரமணியசாமியுடைய
அரசியலைவிட கூத்தாக இருக்கிறது.

***

வாழும் செய்திக் குறிப்புகள்

1. பா.மா.க. யாரோடு கூட்டு?
விஜயகாந்த் முடிவெடுத்துவிட்டாரா?
சிறுத்தைகளை காங்கிரஸ் விழுந்து பிறண்டாமல் இருக்குமா?
இஸ்லாமிய கட்சிகள்
எப்படியான வார்த்தைகளில்
முதலமைச்சரையும், அம்மாவையும் புகழப் போகிறது?
அவர்கள் இவர்களுக்கு என்ன மாதிரி அல்வாவை
எந்தப் பதத்தில்  கிண்டி கொடுக்கப் போகிறார்கள்?

இவற்றை அறிய
நம் மக்கள் மத்தியில் நிலவும் அசாத்திய மௌனம்
சாதாரணமானதல்ல!
‘த்ரில்’ கூடியதாக இருக்கிறது.

2. முதலமைச்சர்
ஹாஸ்பிட்டலில் இருந்து
007% உயிரோடு
சக்கர நாற்காலியில் உருண்டுவந்து
2009 பார்லிமெண்ட் எலெக்சன் நடத்துவது
கின்னஸ் சாதனை!!

தாஜ் / 16-3-2009

2 பின்னூட்டங்கள்

  1. ஜெயக்குமார் said,

    16/03/2009 இல் 09:50

    பகடியைப் பற்றிய ஜெயமோகனின் பதிவைப் படித்துவிட்டு ரீடரில் உங்கள் பதிவைப் பார்த்தால் இன்னுமொரு பகடிப் பதிவு. இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் சேர்த்தே அல்வா கிண்டப்படுவதாக கேள்வி.

    ஜெயக்குமார்

  2. 17/03/2009 இல் 06:13

    சகோதரர் ஜெயக்குமார்,
    புகழனைத்தும் அல்வாவுக்கே !


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: