பிறையே பேசு !

‘இங்கே இலையறி இல்லா தனதானே
எங்கை கதையாத லால்’

– அதரங்களின் இடையே செங்குத்தாக ஊசியை வைத்துக்கொண்டு பாடும் (ஊசி உதட்டில் குத்தாதாம், சித்திரக்கவி!) மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவர் ஆபிதீனின் குத்தும் பாடலொன்றை பதிகிறேன். யாருக்கு குத்துமோ இல்லையோ எனக்குக் குத்துகிறது. ரமளான் முபாரக் !

– ஆபிதீன் –

***

பிறையே பேசு !

பகலெல்லாம் பட்டினியாய்ப் படுத்துமிகத் தூங்கிவிட்டுப்
பண்பான நோன்பனைத்தும் பக்தியுடன் நோற்றதுவாய்
இகல்தாங்கிப் பேசுகின்ற இழிமாந்தர் தம்கூற்றை
இருணீக்கும் இன்னொளியே இளமதியே பார்த்தாயா?

சகியாமல் பசிக்கொடுமை சாப்பாடு தின்றுதின்று
சலியாது உடல்வளர்ப்பர் சற்றேனும் வெட்கமிலர்
முகிலாடை போர்த்தொளிந்து மெல்லவெளி வந்ததிரு
முழுமதியே தண்சுடரே மென்கதிரே பார்த்தாயா?

தொழுவதிலை ஏழைவரி தருவதிலை என்றாலும்
துணிமணியில் வெளிப்பகட்டில் தொங்குதவர் சன்மார்க்கம்
புழுதியுடை வாள்போலப் பூவைப்புரு வம்போலப்
புதிர்கொண்டு வளைவடிவே புதுப்பிறையே பார்த்தாயா?

பெருநாளை மட்டுமவர் பெருமைக்குக் கொண்டாடப்
புறப்பட்டார் சொகுசாகப் பள்ளிக்குக் காலிழுக்க
வருமின்பத் தென்றலுக்கு வழிகாட்டும் வட்டுருவே
வளர்ந்தேறு வென்ணிலவே வான்விளக்கே பார்த்தாயா?

உனதந்த லோகத்தில் உண்டோசொல் இத்தகைய
உரிமைகள் கொண்டாடும் உத்தமர்கள் பாதகர்கள்
எனதிந்த வையத்தில் எத்தனையோ எண்ணரிது
எழிலூட்டும் வெண்ணமுதே எம்பிறையே பார்த்தாயா?

***
புலவர் ஆபிதீன்
(‘அழகின் முன் அறிவு’ தொகுப்பிலிருந்து)

2 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  08/10/2008 இல் 18:02

  என்னன்ன பதிவுகளையோ
  எண்ணங்களின் வண்னங்களுக்கு ஒப்ப
  சபையேற்றுறீங்க…
  நல்லாதான் இருக்கு.
  ஆனாலும்………
  இதற்குறிய கூலியை
  இறைவன் உங்களுக்கு
  தராமல் விடமாட்டான்.
  – தாஜ்
  08.09.08
  நடுநிசி
  சீர்காழி

 2. sivamjothi said,

  30/10/2011 இல் 23:11

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
  (First 2 mins audio may not be clear… sorry for that)

  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (part 2)

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (part 3)

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Guru:
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454


தாஜ் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: