பெண்கள் ‘இஜ்திமா’வும் பீட்டர் அல்போன்ஸும்

‘எல்லாவற்றையும் அல்லாஹ்விடம் கேள் என்கிறார்கள். இட ஒதுக்கீட்டை மட்டும் கலைஞரிடம் கேட்கிறார்கள்!’ என்று இஜட்.ஜபருல்லா நானா கிண்டல் செய்யும் ஒரு பேரணியைத் தொடர்ந்து இந்த இஜ்திமா. அதாவது கலந்தாய்வு. தமிழன் டி.வியில் (17.4.2008 இரவு) பார்த்தேன்.

அந்த த.மு.மு.க தங்கச்சியின் பெயர் தெரியவில்லை. ஆனால் கல்லெடுக்க விரைந்து சொல்லெடுக்கும் அந்த தீந்தமிழ்ப் பேச்சு பரவசமூட்டியது.

பதிகிறேன்.

– ஆபிதீன் –

***

‘காறய்க்காள் நாகூருளே போயி பாறுங்க – ரமளானுக்கு ஒறு மாதத்துக்கு முன்னாடி வறும்டு நெனைக்கிரேன் அந்த நிகள்ச்சி; என்னா தெறியுமா செய்வாங்க? ஒவ்வொறு வூடுகள்லேந்தும் ஒரு கப்பள் மாதிறி தயாற் பன்னனுமாம்..இந்த கப்பளை யாறு யாறு செய்றாங்கலோ கஷ்டங்கல் தீறுமாம்..அப்படீண்ணா ஒவ்வொறு வறுஷமும் செஞ்சி குடுத்துக்கிட்டுதானே இறிக்கிறாங்க..அப்ப அந்த ஊருளே கஷ்டப்படுரவங்க இறுக்கக் கூடாதுதானே ? ஏன் இறுக்குராங்க? இப்படி ஒவ்வொன்னு செஞ்சி குடுக்குறாங்களே..அதது சைஸ¤க்கு தவுந்த மாதிரி – சின்னதா இறுந்தா சின்ன றேடியோ, பெறுசா இறுந்தா பெரிய றேடியோ அதுக்கு முன்னாலே ஸ்பீக்கர்ளாம் வச்சி – ஊற்வலம் போவும் பாருங்க , சுபுஹானல்லா, ஒறு இதிளே சோகமான பாட்டு ஓடும், வேற இதிலே வேர மாதிறி பாட்டு ஓடும், எல்லாத்தயும் ஒறே நேறத்திலே கேட்கலாம்…அதெல்லாம் எல்லா தெறுவுலேயும் போயி… கடைசிளெ… அப்பாட்டெ வந்து எரங்கி , கொடிய எரக்கி  வப்பாங்க..அள்ளாவின் நள்ளடியாற்களே.. ஒரு நள்ளடியாறைத்தான் ‘அவுளியா’ண்டு நாம சொள்வோம். ஒரு நள்ளடியாற் இந்த மாதிரியான பாவங்கலை விறும்புவாறா? அப்படி விறும்பினா அவர் நள்ளடியாறாத்தான் இறுக்க முடியுமா? சொல்லுங்க. அப்ப இந்த செயள் செய்வதற்கு காறனம் எண்ணா? இரையச்சம் இல்லாததுதான் காறனம். இரையச்சம் இறுந்திறுந்தா இந்த மாதிறியான செயளில் சமுதாயம் ஈடுபட்டிருக்காது.அள்ளாவின் நள்ளடியார்கலே அது மட்டுமல்ல.. சில ஊற்களிளே யானய், சில ஊற்களிலே குதிரய், இதள்ளாம் வச்சி ஊற்வலமா கொண்டு போவாங்க. ஒறு ஊற்வளத்தைப் பார்த்து என் மவ கேக்குரா, உம்மா… இந்த யானய் முஸ்ளிம் யானய்தானே? எள்ளாறும் சொல்ராங்க, பொர (பிறை) போட்டிறுந்தா முஸ்ளிம் யானய்யாம். பொர போடாட்டா இந்து யானய்ய்யாம். இந்து யானய்ண்டா மிறலுமாம்..அப்படீன்டு சொல்லுது. புல்லையிலுவலுக்கு தெறிய மாட்டேங்குது! ஆனா அந்த புல்லய மணச கெடுக்குர வலியப் பாறுங்க. முஸ்ளிம் யானய், கிறுத்துவ யானய்ண்டு இறுக்கா? யானய்கல், காள்நடைகல் எள்ளாம் இரைவன் அததுக்கு உல்ல வலியைத்தான் கொடுத்திருக்கான். நாம்தான் காள்நடைகளை மாத்தி அமய்த்துக்கொண்டு இரிக்கிரோம். அப்போ, இந்த மாதிறியான ஊற்வலத்துக்கு போவும்போது புல்லியலையும் ஜோடிச்சி அனுப்பி – புல்லைய சின்ன புல்லையா இறுக்கும்போதே மணச கெடுக்குரது..இந்த தண்மயிளேந்து – அள்ளாவின் நல்லடியார்களே..இந்த இனை வைக்கிர தன்மையிளேர்ந்து – நாம் மீழ வேன்டும். அள்ளாவுத்தாலா சொல்ரான். இனைவைத்தள் என்பதை ஒறுபோதும் மண்ணிக்க மாட்டேன் என்ரு சொல்கின்ரான். எள்ளா பாவத்தையும் மன்னிச்சுவேண், இனைவைத்தள் என்ர ஒரு பாவத்தை மட்டும் ஒறுபோதும் மண்ணிக்க மாட்டேண் என்பதை இரைவன் தெல்லத்தெலிவா சொள்ளியிறுக்கும்போது நாம் இனைவைத்தள் பக்கம் செள்ளவே கூடாது அள்ளாவின் நள்ளடியார்கலே..அப்படி சென்ராள்…யாற் செள்வாற்? இரையச்சம் இள்ளாதவர்கல்தான் செள்வார்கல். ளுக்மான் அளைவஸ்ஸளாம் அவற்கள் தங்கல் மவனுக்கு அட்வைஸ்ன் பன்னுராங்க. இனைவைத்தள் எண்பது மிக மிக அநீதம் என்ரு..நாம் இந்த இனைவைத்தளிளிருந்து கண்டிப்பாக மீழ வேண்டும். ”தக்குவா’ (இறையச்சம்) உடையற்கலாக ஆக வேண்டும் என்பதய் உங்கலுக்கு மத்தியிளே நாண் கேட்டுக் கொல்கிரேன்.

அடுத்தபடியாக, நம்முடய பள பேற் விபச்சாறத்திளே நெரய பேற் ஈடுபட்டுக் கொண்டிறுக்கிராற்கல்..பள ஊர்கலிலே , பள தெருக்கலிலே கேல்விப்பட்டுக் கொண்டிருக்கிரோம். இதர்குக் காறனம், இரையச்சம் இள்ளாததுதான் காறணம். அள்ளாவின் நல்லடியார்கலே..பெருமாணார் சள்ளல்லாஹ¤ அளைஹிவசல்லம் உயிறோடு இறுக்கும்போது மாஇஜூப்ரு மாளிக் என்ற தோளர் – அந்த தோளர் வந்து சொன்னாற்கல். பல்லிவாசள்ளெ ரசூளுள்ளா இறுக்குறாங்க..அள்ளாவின் தூதறே, நான் மாணக்கேடான செயளை செஞ்சிட்டேண்டு சொள்ளும்போது ரசூளுள்ளா மொகத்த திறுப்பிக்கிராங்க..உடனெ இன்னொறு தடவ சொல்ராங்க. நபி இப்படி (வேறொரு பக்கம்) திறுப்பிக்கிராங்க. திறும்பத் திறும்ப அவற் சொன்ன ஒடனே பெறுமாணார் சள்ளல்லாஹ¥ அவர்கல் ஒரு மாணக்கேடான செயளுக்கு என்னா தேவையோ அதள்ளாம் செய்தாயா எண்று கேட்டார்கல். ஆமாம்டாரு. அப்படியானால் கள்ளால் அடித்து கொளை செய்யச் சொன்னார்கல். அதே மாதிறி அவர் கள்ளால் அடித்து கொளை செய்யப்பட்டாற். ஏன்? என்ன காறனம்? அவர்கல் , செஞ்ச தப்பை , மணம் திறுந்தி, நாம் இந்த உளகத்திளே செஞ்ச தவருக்கு இந்த உளகத்திளேயே தண்டனை அணுபவித்து விட்டாள் மருமை நாலிலே நாம் ஈடேற்றம் அடையளாம் என்ர ஒரே காறனம். அவற்கலுடைய ‘தக்குவா’வை நாம் பாறாட்ட வேண்டும்…

….

விபச்சாறம் செய்தாள் கடும் குற்றம் நம் இஸ்ளாத்தில். அப்படி இறுந்தும் கூட அந்தத் தவரு நம்முடைய சமுதாயம் செய்கின்ரது என்ரு சொன்னாள் என்ன காறனம்? நாம் இஸ்ளாமிய ஆட்சியின் கீளே இள்ளே.. இப்ப நாம அப்படி செஞ்சா யாற் (தண்டனை) செய்றாங்கலோ அவங்க மேளே கொளை பலி விலுந்துடும். ஜெயிள்ளே கம்பி என்ன வேண்டியதுதான். இந்த சூல்நிளை ஏர்படும்.  அப்ப நாம தண்டனை கொடுக்க முடியளே.. எனவேதான் இன்ரு பெறுகிக் கொண்டே போகிரது. அள்ளாவின் நள்ளடியார்கலே… மொதலிளே நமக்கு ஒலுக்கம்தான் தேவை.பெருமானாற் சள்ளல்லாஹ¤ அலைஹிவசள்ளம் சொன்னார்கல். ‘யார் தன்னுடைய இறண்டு தாடைகலுக்கு மத்தியிள் உல்லதையும் – அதாவது நாவு – இறண்டு கால்களுக்கு மத்தியிள் உல்லதையும் பேனிப் பாதுகாத்துக் கொல்கிரார்கலோ அவர்கல் சுவனம் அடைவார்கல் என்று பெருமானாற் சள்ளல்லாஹ¤ அலைஹிவசள்ளம் அவர்கல் சொண்ணார்கல். அந்த அடிப்படையிளே நாம் கண்டிப்பாக இந்த மாணக்கேடான செயளை செய்வதை விட்டும்  நம்மை நாம் பாதுகாத்துக் கொல்ல வேண்டும். அள்ளாவுத்தாலா நம் அணைவறையும் நம்முடைய வால்நாள் இருதிவரை மானத்தோடு வால்வதர்கு நமக்கு ஒதவி செய்வாணாக என்ரு இந்த நேறத்திலே நான் பிறார்த்தணை செய்து கொல்கின்ரேன்’

***

நிகழ்ச்சியின் இடையே வந்த பாடல்கள், விளம்பரங்களையும் பதிவதுதான் பொருத்தம். அதற்காகத்தானே பிரச்சார நிகழ்ச்சிகளே!

காதோரம் கதைகள் பல சொல்லிக் கொஞ்சிப் பேசுமே
கையோடு கலகலகலவெனெ கவிதை சொல்லுமே
அது எல்.கே.எஸ்…கோல்டு பேரடைஸ்
பாரம்பரியத்தின் நம்பிக்கை

கண்களால் கண்ட கவிதைகள் சொல்லி மின்னிடும் அங்கமே
என் வாழ்க்கைக்கு வளம் கொண்டு வந்து தந்திடும் தங்கமே

டிங் டாங்.

வாழ்வில் வளம் சேர்க்கும் தங்கத் திட்டம் – கதீட்ரல் ரோடு கோல்டு பேரடைஸ், சென்னை.

***

குறைந்த அளவில் ஹாஜிகளை அழைத்துச் சென்று நிறைந்த நன்மைகளைப் பெற சிறந்த முறையில் சேவை செய்யக் (புனித ரமலான் உம்ரா 2008 ஆகஸ்ட் இறுதியில் – பயணத் தொகை ரூ, 90,000/=) காத்திருக்கும் எங்களிடம் உங்கள் பயணத்தைப் பதிவு செய்து பலனடைய அன்புடன் அழைக்கிறோம் – பரக்கத் ஹஜ் சர்வீஸ் 7/61, இரண்டாவது கடற்கரைச் சாலை, சென்னை.

***

வங்கக்கடலோரம் ஒரு தங்கக் கடல்
பாரிஸ் எல்.கே. எஸ் ஜூவல்லர்ஸ்
பாரிஸ் எல்.கே. எஸ் ஜூவல்லர்ஸ்
நல்ல நம்பிக்கை அழகு தங்கநகை
ஈடு இணையில்லை என்றும் நியாய விலை

வங்கக்கடலோரம் ஒரு தங்கக் கடல்
பாரிஸ் எல்.கே. எஸ் ஜூவல்லர்ஸ்
பாரிஸ் எல்.கே. எஸ் ஜூவல்லர்ஸ்

***

முகப்பருக்களா, கரும்புள்ளிகளா, முகச்சுருக்கமா, மூட்டுவலியா,  முதுகுவலியா, தலைமுடி உதிர்கிறதா, இளநரையா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : டாக்டர் சையத் எம்.எம். அமீன், எஸ்.கே மூலிகை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம். 36 ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை , சென்னை-14. தொலைபேசி : 28483281, 28481344

***

இந்நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : என். தைமியா, ஓசியானிக் விளம்பர நிறுவனம் 1107 பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஹோட்டல் எவரெஸ்ட் எதிரில், பெரியமேடு, சென்னை 3. செல்: 9444202562.

***

தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய சமய நல்லிணக்க மாநாடு. பீட்டர் அல்போன்ஸ் அழகாகப் பேசினார்.

‘மனிதநேயம் கொண்டவர்களாக வாழுங்கள். ஒரு பெரிய மதப்பிரச்சாரகர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது  கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்கிறார்: ‘மரணத்துக்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா?’. அந்தப் போதகர் சொல்கிறார்: ‘மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா என்பது பெரிதல்ல, மரணத்துக்கு முன்பு வாழ்க்கை இருக்கிறதா என்பதுதான் முக்கியம்’ என்று. மரணத்துக்கு முன்பு உள்ள வாழ்க்கைக்காகத்தான் இந்த கருந்தரங்கு. மரணத்துக்கும் முன்பு உள்ள வாழ்க்கைதான் செம்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறதேயொழிய முழுக்க முழுக்க மறுமைக்கான வாழ்க்கைக்கான மதமல்ல இஸ்லாம் . மறுமைக்கு முன்னேயுள்ள வாழ்க்கைக்கான மதம். இதை விட விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான, ஆராய்ச்சிபூர்வமான மார்க்கம் எங்கேயும் கிடையாது. பல் விளக்குவதைக் கூட எப்படி விளக்க வேண்டும் என்று சொல்லித் தருகிற மதம். ஒரு மனிதனும், மனுஷியும் எப்படி தங்கள் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை, தாய் தன் பிள்ளைக்கு, பிள்ளை தன் தாய்க்கு, ஒருவன் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் , எப்படி கடையிலே பொருட்களை நிறுக்க வேண்டும், எப்படி அவன் தொழில் செய்ய வேண்டும், எப்படி அவன் பணி செய்ய வேண்டும் , யுத்தம் எப்படி நடக்க வேண்டும், யுத்தத்தில் வெற்றி எப்படிப் பெற வேண்டும், வெற்றி பெற்றவன் எப்படி தன்னை நடத்திக் கொள்ளவேண்டும்..இதையெல்லாம் அளந்து சொல்கின்ற மார்க்கம் உலகத்திலே இஸ்லாம் ஒன்றுதான். ஆகவேதான் வாழ்க்கை நெறிக்கான இந்த மார்க்கத்தினுடைய மிக அடிப்படியான கருத்து எது சரியென்பதுதான் உண்மையேயொழிய யார் சரி என்பதல்ல. எனவே இந்த நினைவுகளோடு  இந்த கருத்தரங்கு விடைபெற வேண்டும் என்று எண்ணுகிறேன். மிகப்பெரிய பாரம்பரியமான தலைவர்கள் வழிநடத்திய இந்த இந்த இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மகாசபை – மிகப் பெரும் தலைவர்கள் , சுதந்திரப் போராட்ட களத்திலே விழுப்புண் தாங்கியவர்கள் , தேசம் துவண்டு கிடந்தபோது தங்கள் ரத்தத்தைக் காணிக்கையாக்கியவர்கள்…அரசியல் சாசனம் தந்தது அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அம்பேத்காருக்கு அம்பதாண்டுகளுக்கு முன்னரேயே அப்துல் கபூர் என்பவர்தான் இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் சாசனம் சட்டம் தயார் செய்தார். அதற்காக ஜெனாந்திர தண்டனை பெற்று போர்ட் பிளேயரில் இருக்கின்ற சிறையிலே மூன்று வனாந்திரம் கண்டவர் அவர். அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளையெல்லாம் அந்த சிறைச்சாலைக்குப் போனால் பார்க்கலாம். அப்படிப்பட்ட மாபெரும் மனிதர்கள். மதங்களைக் கடந்து, நிறங்களைக் கடந்து மொழிகளைக் கடந்து மனிதநேயத்திற்காக . தேசத்திற்காக, தேசத்தின் சுதந்திரத்திற்காக, தங்களை காணிக்கையாக்கிக் கொண்டவர்கள், அந்த தியாக வரலாறுகளை உள்ளடக்கிய நாம் இந்த தேசத்தின் செழுமையைப் பேணிக் காப்பதிலே யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இந்த நாட்டின் இறையான்மைக்காக, ஒற்றுமைக்காக, நம் உயிரைக் கொடுக்கின்ற அதே நேரத்தில் நம்முடைய பங்கைக் கேட்போம்- ‘இந்திய ரூபாயில் எங்கள் பங்கு’ என்ற கேள்வியோடு இந்த கருத்தரங்கு விடைபெறவேண்டும்.’

இறையன்பன் குத்தூஸ் ‘வெள்ளை நிலவாகப் பிறந்தவர்கள் நாங்கள்/  உள்ளம் கள்ளமின்றி உயர்ந்தவர்கள் நாங்கள் / பொல்லாக் கொடுமைகளைத் திணிக்காதீர்கள் / செம்பிறையென புயலென மாற்றாதீர்கள்’ என்று ‘ஈயம்’ ஹனிபா குரலில் குரலில் பாடினார். சொந்தக்குரல் இருக்க கள்ளக்குரல் எதற்கு குத்தூஸ்? நீங்கள் புயலென மாறவெல்லாம் வேண்டாம், சும்மா பாடினாலே போதும். தொடர்பு கொள்க : இந்திய ராணுவம்.

மலேசிய எழுத்தாளர் சை. பீர் முஹம்மது சிறப்பாகப் பேசினார்.

‘ஆப்பிரிக்க காட்டிலே இருக்கின்ற ஒரு கறுப்பன் கூட என்னுடைய சகோதரன்தான். அவனும் மனிதன்தான். மனிதாபிமானம் என்பது , ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் , உங்களுடைய மனைவியை, உங்கள் பிள்ளையை, உங்கள் வீட்டில் இருக்கின்ற செல்லப் பிராணிகளை மட்டும் நேசிப்பது மனிதாபிமானமல்ல. உங்களுடைய எதிரியையும் நீங்கள் நேசிக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானம். அந்த மனிதாபிமானம் இங்கே எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்க்கின்றபொழுது – நாங்கள் இரண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்றோம் ; பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கின்றோம் ; எனக்கு ஒரு சந்தேகம், இது கூட எந்த முஸ்லிம் லீக் நடத்துகிறதென்று எனக்குத் தெரியவில்லை ; உங்களுடைய தொப்புள்கொடிகளாக நாங்கள் இருக்கின்றோம். காயிதேமில்லத் அங்கே வந்திருக்கும்போது நான் பார்த்திருக்கின்றேன். அப்துல் சமது அவர்கள் பேசினார்கள். ஆனால்  பேசாத ஒரு தலைவரை என் வாழ்நாளிலே பார்த்தேன் என்றால் காயிதே மில்லத் அவர்கள்தான். அவர்கள் பேசவே இல்லை. அதன்பிறகு அதிகமாக அவரைப் பற்றி அறிந்தபொழுது அவர் நிற்கின்ற தேர்தல் களத்துக்கு அவர் பேசவே போவதில்லை என்று கேள்விப்பட்டேன். அன்பர்களே, நான் இங்கே பிறந்தவன் அல்ல, மலேசியாவில் பிறந்தவன். அப்படி ஒரு தலைவரைக் கொண்ட முஸ்லிம் லீக்… ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது? அதனுடைய வரலாறு என்ன என்றெல்லாம் பேசுவதற்கு இங்கே நாம் தயாராக இல்லை.  அந்த நினைவு நாளிலே இதை நாம் மற்றவர்களிடம் – ஒரு அன்பர் பேசினார், அவர் பெயர்கூட எனக்குத் தெரியாது , பீட்டர் அல்போன்ஸ் என்று நினைக்கிறேன் – அவர் மிக அருமையாகப் பேசினார். வேறொரு இனத்திலிருந்து வந்தவர். அன்பர்களே உங்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். உமர் அவர்கள் கலீ·பாவாக இருந்த காலத்திலே ஒருமுறை அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றார்கள். பாதிரிமார்கள் அவர்களுக்கு விருந்து வைத்தார்கள். தேவாலயத்திலே விருந்து நடந்து கொண்டிருந்த நேரத்திலே , அந்த நேரத்திலே தொழுகைக்கு நேரம் வந்து விட்டது, உமர் அவர்கள் அந்த விருந்தை நிறுத்திவிட்டு வெளியே சென்று தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போது பாதிரிமார்கள் கேட்டார்கள்: ‘நீங்கள் ஒரு இன இனக்கத்திற்கு வழிகோலாக இருக்க வேண்டுமே…நீங்கள் ஒரு கலி·பாவாக இருக்கிறீர்களே..அல்லாஹ் எங்கேயும் இருக்கிறானே..நீங்கள் ஏன் இந்த தேவாலயத்தில் தொழாமல் வெளியே போய் தொழுதீர்கள்?’ என்று அந்த பாதிரிமார்கள் கேட்டார்கள். அன்பர்களே, அப்பொழுது உமர் சொன்ன அந்த மறுமொழி – இது வரலாற்றில் உள்ளது, நான் சொல்லவில்லை, உமர் சொன்னார்கள் – ‘எதிர்காலத்தில் ஒரு சந்ததி வரும். உமர் தொழுததால் இந்த தேவாலயம் ஒரு பள்ளிவாசல்தான் என்று கடப்பாரையை ஏந்திக் கொண்டு வரும்’ என்று சொன்னார்கள். எவ்வளவு ஒரு தீர்க்கதரிசனம் பாருங்கள்! அப்படியான ஒரு சமூகத்திலிருந்து வந்தவர்கள் நாம். அதை மனதில் நிறுத்துங்கள். அன்பர்களே, நான் மக்காவுக்குச் சென்றிருந்தேன். நான் தாயுப் நகரத்துக்குச் செல்லவேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டேன். அங்கே குனிந்து குனிந்து ஒரு கல்லைத் தேடிக் கொண்டிருந்தேன். என மனைவி கேட்டாள்: ‘எதை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று. நான் சொன்னேன் என் மனைவியிடம், ‘இதே தாயிப் நகரத்தில்தானே என்னுடைய நபி ரசூலை கல்லால் அடித்தார்கள் . அந்தக் கல்லை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். ஏனென்றால் அந்தக் கல்லடி பட்டபோதுகூட ரசூலுல்லா எதிரிகளை வதைக்க விரும்பவில்லை. அப்படியான இனத்திலிருந்து வந்தவர்கள் நாம். அல்லவா? அன்பர்களே, நான் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கின்றேன். கூட்டத்திலே சலசலப்பு வருகிறது. என் பேச்சு எடுபடவில்லை என்று நினைக்கிறேன்!’

கடைசியாக, ‘வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு – 2008 ஜூன் 14, சனிக்கிழமை. சங்கமிப்போம்  தீவுத்திடலில் ‘ என்று பேராசியப் பெருந்தகையோடு அழைக்கும் பொதுச் செயலாளர் சையது ஹக்கீம் சத்தாரின் விளம்பரத்தோடு இந்தப் பதிவை முடித்துக் கொள்வது வேறு பிரயோசனமான வேலை பார்க்க எனக்கு உதவும்.

என்றென்றும் எங்கெங்கும் நலம்தானே
ரப்பானி தரும்தானே..

**

யூனானி மருத்துவம் . ரப்பானியின் மகத்துவம்

என்றென்றும் எங்கெங்கும் நலம்தானே
ரப்பானி தரும்தானே..

டாக்டர் ஹக்கம் சையது சத்தாரின் ரப்பானி வைத்திய சாலா, ராயப்பேட்டை , சென்னை.

**

தொடர்புடைய சுட்டி : கற்காலம் – நாகூர் ரூமி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: