‘எங்கும் நிறைந்த இறைவனே! நீ எனக்குக் கொடுத்த அறிவை மக்களுக்கு எடுத்துக் கூறினேன். இப்போது நான் நிற்கும் இடம் பயங்கரமானது. எதுவும் உனக்குத் தெரியாமல் நடந்துவிடவில்லை. எனவே இந்தத் தண்டனையை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். என் அறிவுதான் – நீ எனக்குக் கற்றுக் கொடுத்த அறிவுதான் – என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
என் நாயனே! எந்த அறிவை எனக்குக் கற்றுக் கொடுத்து மக்களுக்கு மறைத்து வைத்தாயோ, அந்த அறிவை அவர்களுக்கும் நீ கற்றுக் கொடுத்திருந்தால் இந்த நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்காது!
இறைவா! எந்த உண்மையை மக்களுக்கு மறைத்து எனக்குத் தெளிவுபடுத்தினாயோ அந்த உண்மையை நீ எனக்கும் மறைத்து வைத்திருந்தால் என் முடிவு இப்படி அமைந்திருக்காது! அனைத்துப் புகழுக்கும் நீயே உரியவன்! மனித அறிவுக்கு அப்பாற்பட்ட நீ அனைத்துக்கும் மேலான அதிகாரம் படைத்தவன்’
– மன்சூர் ஹல்லாஜ் –
(பாக்தாத் / கி.பி. 26.3.922)
***
(மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவியின் ‘தர்க்கத்துக்கு அப்பால்…’ நூலிலிருந்து)
மறுமொழியொன்றை இடுங்கள்