நாகூர் சலீம்

saleem.jpg

கலைமாமணி நாகூர் சலீம்

Nagore Saleem is one of the most famouse living poet and writer of devotional songs. He was born on 21.12.1936 to Sheriff Beig and Khadijah Nachiyar. He is also from the family of Vannak Kalanjiya Pulavar and he he step-brother of Sithi JUnaidha Begum, the first Muslim Women Novelist of Nagore.

He had no proper schooling but God has made him a fountain of poems and songs that could be , that were and are sung by many singers all over Tamil Nadu. More than 6000 poems and devotional songs have been so far written and more than 400 LP Records and more than 100 audio cassettes have come out till date

He is not only a creator of songs but of singers too. Hundreds of talented voices were introduced and ‘moulded’ and helped to ascend the leader of fame.

Many popular songs sung by Nagore Haniffa and Kayal A.R. Shaik Mohd are by Nagore Saleem. ‘Deenore Gnayama’ and ‘Andha Naalile’ are by the former, for example Shaik Mohammad’s ‘Thamizhathu Dargakhal’, which made a record breadk is by Nagore Saleem.He also wrote songs and script for a movie proposed under the title ‘Nagore Magimai’

This talented poet is yet to attain nation-wide fame which he deserves.
 

காவியத்தின் கரு

உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!
உண்மைதானே சொல்லுங்கள்!
இறைவனை யாருக்குத் தெரியும் – நபி
இரசூல் இல்லை யென்றால்
நபியை யாருக்குப் புரியும் – வல்ல
நாயன் இல்லையென்றால்!

ஆயிரமாயிரம் தூதர்கள் வந்தார்
ஆண்டவனை யார் காட்டிவைத்தார்?
ஓயாதுழைத்த உயர்நபி யன்றோ
ஓரிறைக் கொள்கையை நாட்டிவைத்தார்!
வேதம் கொடுத்தான் இறைவன் – செயல்
விளக்கம் கொடுத்தார் நபிகள்!

இருட்டில் இருந்தான் இறைவன் – நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் – அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!
காவியம் வடித்தான் இறைவன் – அதன்
கருவாய் அமைந்தார் நபிகள்!

 


என்னதான் ஞாயமோ ?
 

என்னதான் ஞாயமோ
இன்னும் சோதனை ஏனோ மீரா
இன்னிசை நாதமோ
எந்தன் வேதனை சாஹே மீரா
(என்னதான்)
 

அன்பான வாசலில்
அலைமோதியதும் போதாதோ
அன்றாடம் கேட்கிறேன்
நல்ல மாறுதலே நேராதோ
பொன்னான பூவடி துணை நாடினேன்
என் காதிர் மீரா
(என்னதான்)
 

ஏதும் அறியாமலே
என் ஏழுவகைப் பூந்தோட்டம்
எந்நாளும் வாடுது இந்த
ஏழைக்கொரு வழி காட்டும்
ஆதாரம் தேடியே..தயை நாடினேன்
என் ஷாஹ¤ல் ஹமீதா
(என்னதான்)
 

ஏலாதப் பேருக்கு – தினம்
ஈவதுங்கள் கரமல்லவோ
ஏழைமரக் காய்ப்புக்கு – உங்கள்
திருவருளே உரமல்லவோ
தாளாதினி மனம் தயை நாடினேன்
என் நாகூர் மீரா
(என்னதான்)


அணையா விளக்கு!


இணையில்லாத அறிவின் உருவே
இந்து முஸ்லீம் போற்றும் குருவே
மர்ஹபா மர்ஹபா
மர்ஹபா மர்ஹபா
(இணை)
 

இறையவனின் நெறி உணர்ந்து
இவ்வுலகின் நன்மைக்கு
இறுதிவரை பணி புரிந்து
இருள் அகற்றி உண்மைக்கு
காவல் போன்று நாளும் வாழ்ந்த
கருணையுள்ள காதிர் மீரானே
(இணை)
 

மென்மையான செய்கையாலே
மானிடரின் வாழ்விலே
சுவனலோக நீதி தந்து
சீர் மிகுந்த முறையிலே
எடுத்துக் காட்டிப் புனிதம் சேர்த்த
எங்களருமை ஷாஹ¥ல் ஹமீதே
(இணை)
 

எளிமையான வாழ்வு வாழ்ந்து
ஏழைகளின் தோழராய்
விளங்குகின்ற நேர்மையுள்ள
வழியமைத்த சீலராய்
ஞானம் தந்து மடமை தீர்த்து
தீனைக் காத்த ஷாஹே மீரானே
(இணை)
 

மேலும் பாடல்கள் : விரைவில் , இன்ஷா அல்லாஹ் !

1 பின்னூட்டம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: